பிப்ரவரியில் வெளியாகும் கவினின் ‘டாடா’திரைப்படம்

315 0

கவின் தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘டாடா’. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வைரலானது

‘சரவணன் மீனாட்சி’ சீரியலில் நடித்து பிரபலமானவர் கவின். இதையடுத்து படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர், ‘நட்புன்னா என்னானு தெரியுமா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்து கொண்டார். இதன் பின்னர் வெளியான’லிஃப்ட்’ திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. டாடா இதையடுத்து நடிகர் கவின் தற்போது கணேஷ் கே பாபு இயக்கத்தில் ‘டாடா’ திரைப்படத்தில் நடித்துள்ளார். ஒலிம்பியா மூவிஸ் தயாரிக்கும் இந்த படத்தில் பாக்யராஜ், அபர்ணா தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. டாடா போஸ்டர் இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், ‘டாடா’ படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற பிப்ரவரி 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது

 

Related Post

லியோ படத்தை பார்த்துவிட்டு விஜய் என்ன சொன்னார் தெரியுமா?..லேட்டஸ்ட் தகவல்

Posted by - September 22, 2023 0
லியோ லோகேஷ் கனகராஜ் விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ படத்தின் ரிலீஸ்காக ஒட்டுமொத்த கோலிவுட் ரசிகர்களும் கார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். இப்படத்தில் திரிஷா, சஞ்சய் தத், மிஷ்கின், அர்ஜுன்,…

புதிய சிக்கலில் எஸ்.கேவின் அமரன் படம் – என்ன மேட்டர்னு தெரியுமா..?

Posted by - February 22, 2024 0
எஸ்.கே.வின் மிரட்டலான நடிப்பில் உருவாகி உள்ள அமரன் படத்திற்கு தற்போது புதிய சிக்கல் இன்று வந்துள்ளது.#sivakarthikeyan #AMARAN #rajkumar #kamalhassan #rajkamal #tamlcinema #LatestNews ராஜ்குமார் பெரியசாமி…

தயவு செஞ்சு யாரும் ‘கோட்’ அப்டேட் கேட்காதீங்க

Posted by - March 5, 2024 0
தளபதியின் கோட் படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் அன்புத்தொல்லை செய்து வந்த நிலையில் தயவு செஞ்சு யாரும் ‘கோட்’ அப்டேட் கேட்காதீங்க என அப்படத்தின் இயக்குநர் வெங்கட்…

நடிகை பேட்டி-நடிகர் ஆர்யாவுடன் இணைந்து நடிக்க எனக்கு விருப்பம் இல்லை…

Posted by - February 25, 2026 0
நடிகர் ஆர்யா தமிழ் சின்னத்திரையில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி இருக்கிறது, இப்போதும் ஒளிபரப்பாகி வருகிறது. அப்படி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் புதிய கான்செப்டுடன் ஒளிபரப்பாகி வந்த…

பிரபல நகைச்சுவை நடிகர் சேஷூ காலமானார்… ரசிகர்கள் அதிர்ச்சி

Posted by - March 26, 2024 0
கடந்த 10 நாட்களுக்கு முன்பு பள்ளிக்கரணை இல்லத்தில் இருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டது. அவரை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *