புதுசேரியில் திமுக ஆட்சி : ’ஸ்டாலின் பேசியதில் தவறில்லை…’ – நாராயணசாமி கொடுத்த விளக்கம்!

215 0

Puducherry News : புதுச்சேரியில் திமுக ஆட்சி என கட்சியினரை உற்சாகப்படுத்த தமிழகக. முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவரது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், “நாக்பூரில் ஒரு விழாவில் பேசிய பிரதமர், குறுக்கு வழியில் ஆட்சிக்கு வருபவர்களால் தான் நாட்டில் வளர்ச்சி பாதிக்கப்படுவதாக கூறியதை வரவேற்கிறேன்.

அதை பிரதமர் கடைபிடிக்கிறாரா? கோவா மாநிலத்தில் பெரும்பான்மை இல்லாதபோது காங்கிரஸ்  உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சிக்கு வந்தது. மணிப்பூரில் ராணுவத்தை வைத்து காங்கிரஸ் உறுப்பினர்களை கடத்தி ஆட்சிக்கு வந்தது. பல மாநிலங்களில் இதே நிலைதான்.

தமிழகத்தை ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க அரசு சட்டம் கொண்டு வந்தாலும் ஆளுநர் அனுமதி வழங்கவில்லை. ஆன்லைன் சூதாட்டம் பலரது உயிரை பறிக்கிறது. புதுச்சேரியில் ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க நடவடிக்கை இல்லை. உடனடியாக அவசர சட்டத்தை கொண்டு வந்து ரத்து செய்ய வேண்டும்.

புதுச்சேரியில் ஆளும் சட்டமன்ற உறுப்பினர்களே ஆன்லைன் சூதாட்டத்தை நடத்துகின்றனர். அதனால் அரசு தயக்கம் காட்டுகிறது. புதுச்சேரியில் மின்துறை நஷ்டத்தில் இயங்கவில்லை. ஆனால் தவறாக நஷ்டத்தில் இயங்குவதாக கூறி தனியார் மயமாக்க அரசு முயற்சிக்கிறது.

சண்டிகார் தவிர வேறு எங்கும் மின் துறை தனியார் மயமாகவில்லை. இதனால் தேவைப்பட்டால் தனியார் மயத்தை எதிர்த்து பொது நல வழக்கு தொடர்வோம்” என்றார்.

மேலும் புதுச்சேரியில் திமுக ஆட்சி அமையும் என தமிழக முதல்வர் கூறியிருப்பது குறித்து கேட்டதற்கு, “திமுக ஆட்சி என கட்சியினரை உற்சாகப்படுத்த கூறியுள்ளார். தமிழக முதல்வர் கூறியதில் தவறு இல்லை. அரவிந்தர் கெஜ்ரிவால் கூட குஜராத் தேர்தலில் சென்று ஆம் ஆத்மி ஆட்சி வரும் என கூறினார்.

அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கட்சி ஆட்சிக்கு வரும் என கூறுவது வழக்கம். காங்கிரஸ் – திமுக கூட்டணி தொடரும் என்று கூறினார்.

மேலும், ஆம்  ஆத்மி கட்சி போல புதுச்சேரியிலும் திமுக தோல்வி பெறும் என கூறுகிறீர்களா? என கேள்விக்கு பதிலளித்த அவர், “தவறு. பிரதமர் கூட இமாச்சல பிரதேசத்தில் ஆட்சி அமையும் என கூறினார். அவரவர் கட்சியை உற்சாகபடுத்த பேசுவது தலைவர்கள் செய்வதுதான்” என நாராயணசாமி பதில் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், “ஊழல்களை ஆதாரத்தோடு காங்கிரஸ் தொடர்ந்து வெளிப்படுத்தும். முதல் அமைச்சர் அலுவலகத்திலுள்ள புரோக்கர்கள் தான் கோப்புகளை முதல் அமைச்சரிடம் எடுத்து சென்று ஒப்புதல் பெறுகிறார்கள். அதில் ஒரு புரோக்கர் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்துள்ளார்.

தொழிற்சாலை நடத்தி வருகிறார். அது தொடர்பான ஆதாரத்தை திரட்டி வெளியிடுவோம். அமைச்சர்களின் பினாமி பட்டியலையும் சேகரித்து வருகிறோம். விரைவில் அந்த பட்டியலையும் வெளியிடுவோம். ஆளும் அரசு தொடர்ந்து மதுபானக்கடைகளுக்கு ரெஸ்டோ பார் என்ற பெயரில் அனுமதி தருகிறது.

பள்ளி, கல்லூரி, குடியிருப்பு ஆகிய இடங்களில் இந்த பார்கள் அமைக்கப்படுகிறது. இதற்கு எதிராக மக்களும் போராடுகிறார்கள். இதுதொடர்பாக பொதுநல வழக்கு தொடரவேண்டும்” என்றும் நாராயணசாமி தெரிவித்தார்.

Related Post

விஜய் வீட்டில் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு: ஜான் ஆரோக்யசாமிக்கு ஸ்கெட்சா: வேலையை ஆரம்பித்த ஆதவ்.!

Posted by - February 11, 2025 0
சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டில் , தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்த பிரசாந்த் கிசோரை சந்திக்க வைத்திருக்கிறார், ஆதவ் அர்ஜூனா. தமிழக வெற்றிக் கழகத்திற்கு, தேர்தல்…

“எனக்கு ரொம்ப வருத்தம்; மய்யத்தில் நான் காம்சோர்” – கமல் கட்சியில் விலகும் முக்கிய நடிகை!

Posted by - January 30, 2025 0
ஹிந்தியில் ஒரு வார்த்தை இருக்கிறது. அதை நான் சொல்லிப்பல பேரைத் திட்டியிருக்கிறேன். காம்சோர் என்பதுதான் அந்த வார்த்தை. மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து மிகுந்த வருத்தத்துடன் வெளியேறுகிறேன்…

அமித்ஷா கொடுத்த பிளான்.! டிடிவி, ஓபிஎஸ்யை தூக்க ஸ்கெட்ச்- ஆக்‌ஷனில் அண்ணாமலை- நடப்பது என்ன.?

Posted by - December 9, 2025 0
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அதிமுக- பாஜக கூட்டணியை பலப்படுத்து அமித்ஷா திட்டமிட்டு காய்நகர்த்தி வருகிறார். நெருங்கும் தமிழக தேர்தல் சட்டமன்ற…

பெரம்பூர் தொகுதியில் விஜய்க்கு கடும் நெருக்கடி.. ஜோசப் விஜய் பெயரில் இத்தனை பேரா?

Posted by - April 7, 2026 0
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட 7600 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் ஜோசப் மற்றும் விஜய் என்கிற பெயரில்…

பிரசாந்த் கிஷோரிடம் இருந்து பாடம் கற்பாரா விஜய்?

Posted by - November 17, 2025 0
குஜராத் முதல்வராக இருந்த மோடியை நாட்டின் பிரதமராக உயர்த்த வியூகம் வகுத்தவர், பிஹாரில் நிதிஷ்குமார், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி, தமிழகத்தில் மு.க.ஸ்டாலின்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *