பெண் காவலர் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்ததுடன், சாட்சியங்களிடம் விசாரணை நடத்தினர்.
சென்னை விருகம்பாக்கத்தில் பெண் காவலரிடம் அநாகரீகமாக நடந்துகொண்டது தொடர்பாக திமுக இளைஞரணி நிர்வாகிகள் 2 பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்து பொதுச் செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.
விருகம்பாக்கத்தில் கடந்த 31-ம் தேதி இரவு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரிடம் தவறாக நடந்துகொண்டதாக திமுக இளைஞரணி நிர்வாகிகளான ஏகாம்பரம், பிரவீன் ஆகியோர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக பெண் காவலர் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்ததுடன், சாட்சியங்களிடம் விசாரணை நடத்தினர். அதனடிப்படையில், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் பதிவுசெய்யப்பட்டு, இருவரும் கைதுசெய்யப்பட்டனர். மேலும், நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதுடன், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால் இருவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்குவதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
Related Post
திருவாரூர், நாகையில் திடீர் மழை – விவசாயிகள் கவலை
நெல் கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வருவதால் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவினாலும், தென்தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள்…
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பழி வாங்கிய ரஜினி.. நடு ரோட்டில் செய்த மாஸ் சம்பவம்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை ஒரு கால கட்டத்தில் ரஜினி எந்த அளவுக்கு எதிர்த்தார் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை கடவுளால் கூட காப்பாற்ற முடியாது…
தீபாவளி அன்று ஏன் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் தெரியுமா?
#happydiwali #festival #india #diwalidecorations #diwaligifts #love #diwalivibes #instagram #diwalidecor #deepavali #instagood #festiveseason #fashion #diwalihampers #festivevibes #homedecor #indianfestival #trending #pixeltamil #photography…
குல்லா அணிந்து.. லுங்கியுடன் என்ட்ரி கொடுத்த தவெக தலைவர் விஜய்!
சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தலையில் குல்லாவுடன் லுங்கி அணிந்து வந்துள்ளார் விஜய். தவெக சார்பில்…
அரையாண்டு விடுமுறை : சிறப்பு வகுப்பு நடத்தினால் நடவடிக்கை – பள்ளி கல்வித்துறை அதிரடி
பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அசைன்மென்ட் மட்டும் வழங்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரையாண்டு தேர்வு விடுமுறையில் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என மாவட்ட முதன்மைக்…
Categories
- MEMES (12)
- Uncategorized (1)
- அரசியல் (184)
- இந்தியா (469)
- உலகம் (174)
- சினிமா (815)
- தமிழ்நாடு (1,087)
- தமிழ்நாடு தேர்தல் 2026 (284)
- பொழுதுபோக்கு (698)
- விளையாட்டு (85)
Recent Posts
- “பாலியல் வன்கொடுமை, போதைக் கலாச்சாரம் குற்றச்சாட்டுதான் இந்த ஆட்சி மீது இருக்கு..” மு.க.ஸ்டாலின் முன்பே பேசிய பிரேமலதா!

- கமலை கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்! திமுக மீது அன்று ATTACK.. இன்று ATTRACT! அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!

- திமுக வார் ரூமில் ஓய்வு பெற்ற காவல்துறை உயரதிகாரிகள்!

- சிறையில் இருந்து பரோலில் வந்து தாயாரின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற சவுக்கு சங்கர்

- TVK Vijay காவலர்களுக்கு ஜாக்பாட்… கொங்கு மண்டலத்தில் விஜய் கொடுத்த அதிரடி ‘ப்ராமிஸ்’!
