Gemini Generated Image envwkhenvwkhenvw

பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும்: தோல்வி குறித்து சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து

156 0

பேட்டிங்கில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி அடைந்ததற்கான காரணத்தை சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியுள்ளார்.

நடப்பு ஐபிஎல் சீசனின் மூன்றாவது லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை 8 விக்கெட்டுகளில் வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சிஎஸ்கே 19.4 ஓவர்களில் 127 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. 128 ரன்கள் இலக்கை விரட்டிய ராஜஸ்தான் அணி 12.1 ஓவர்களில் அதை எட்டி அசத்தியது. அந்த அணியின் இளவயது தொடக்க ஆட்டக்காரரான வைபவ் சூர்யவன்ஷி 17 பந்துகளில் 52 ரன்கள் விளாசினார்.

தோல்விக்கு பிறகு சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியதாவது: “ஆட்டத்தின் தொடக்கத்தில் ஆடுகளம் கடினமானதாக இருந்தது. ராஜஸ்தான் பந்து வீச்சாளர்கள் ஆர்ச்சர் மற்றும் பர்கர் சிறப்பாக பந்து வீசி இருந்தனர். அந்த மிதவேகப்பந்து வீச்சாளர்கள், சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் ஆடுகளம் சாதகமாக இருந்தது.

எது எப்படி இருந்தாலும் நாங்கள் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும். இறுதிவரை களத்தில் இருந்திருக்க வேண்டும். அதன் மூலம் 150-160 ரன்கள் எடுத்திருக்கலாம். ஆனால், இன்றைய டி20 கிரிக்கெட் வடிவத்தில் எது நல்ல ஸ்கோர் என நாம் கணிக்க முடியாது. அதுவும் இம்பாக்ட் பிளேயர் விதி இருக்கும் போது இந்த ரன்கள் போதும் என சொல்ல முடியாது.எங்கள் அணியில் இளம் வீரர்கள் அதிகம் உள்ளனர். அதனால் இது பதற்றமான தொடக்கமாக இருக்கலாம். தவறுகளுடன் சீசனை தொடங்கி உள்ளோம். நிச்சயம் இது எங்களுக்கு படிப்பினையாக அமையும். நாங்கள் எங்கள் ஆட்டத்தில் நிச்சயம் முன்னேற்றம் காண்போம் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

Related Post

Generated Image March 09 2026 10 45AM

”சிரிப்பு நல்லா இருக்குயா”

Posted by - March 9, 2026 0
டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியை பாராட்டியுள்ள தோனி, கவுதம் கம்பீரின் சிரிப்பு நன்றாக இருப்பதாக தெரிவித்துள்ளார். MS Dhoni Insta Post: இந்திய அணியின் முன்னாள்…

மிரட்டிய ஷர்தூல்.. சுழலில் அசத்திய வருண்.. பெங்களூருவை பந்தாடிய கொல்கத்தா

Posted by - April 7, 2023 0
IPL 2023 : பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 81 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றிபெற்றது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில்…

சாம்பியன்ஸ் ட்ராபி – பேட்டிங், பவுலிங்கில் அசத்திய வீரர்கள் – யார் யாருக்கு எவ்வளவு பரிசுத்தொகை?

Posted by - March 10, 2025 0
ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி போட்டியில் அதிக ரன்கள் மற்றும் விக்கெட்டுகளை சேர்த்த வீரர்கள் குறித்து ந்த தொகுப்பில் அறியலாம். ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபியில் வெற்றி பெற்ற இந்தியா…

தலைக்கு மேல் கத்தி..! கப் அடிச்சா கேப்டன்சி, இல்லன்னா வீட்டுக்கு தான் – ரோகித் சாதிப்பாரா?

Posted by - March 7, 2025 0
சாம்பியன்ஸ் ட்ராபி ஃபைனல் முடிவை பொறுத்து ரோகித் சர்மா, இந்திய அணியின் கேப்டன் பதவியில் நீடிப்பது குறித்து முடிவு செய்ய பிசிசிஐ (BCCI) திட்டமிட்டுள்ளது. ஐசிசி சாம்பியன்ஸ்…

பலம், பலவீனம் என்ன?உலகக்கோப்பை யாருக்கு?

Posted by - June 29, 2024 0
 இறுதிப் போட்டியில் இந்தியா, தென்னாப்ரிக்கா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. லீக் தொடங்கி அரையிறுதி வரை, வெற்றியை மட்டுமே வசப்படுத்திய சமபலம் வாய்ந்த இவ்விரு அணிகளும், இன்று…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *