பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்குவது அதிமுக, விவசாயிகள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி – அதிமுக ட்வீட்

205 0

அமைச்சர்கள் பெரியகருப்பன், சக்கரபாணி மற்றும் உயர் அதிகாரிகளுடனான ஆலோசனைக்கு பிறகு இந்த அறிவிப்பை வெளியிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்.

பொங்கல் பரிசு தொகுப்பில் முழு கரும்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது, இது அதிமுக பொதுச்செயலாளரும் விவசாயிகள் போராட்டத்திற்கும் கிடைத்த வெற்றி என அதிமுக அறிவித்துள்ளது.

பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ. 1000 ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை வழங்கப்படும் இதற்கு முன் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை எதிர்த்து, இந்த வருடம் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்கவேண்டும் என விவசாயிகளும் பல்வேறு அரசிலக் கட்சி தலைவர்களும் வலியுறுத்தி இருந்தனர்.

மேலும், இந்த அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரொக்கமாக ரூ. 5000 வழங்கவேண்டும் எனவும் முழு செங்கரும்பை வழங்கவேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார். தொடர்ந்து பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்காததை கண்டித்து ஜனவரி 2ஆம் தேதி திருவண்ணாமலையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தார்.

இந்நிலையில், அமைச்சர்கள் பெரியகருப்பன், சக்கரபாணி மற்றும் உயர் அதிகாரிகளுடன் இன்று தலைமைசெயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார். இதற்கு பிறகு பொங்கல் பரிசு தொகுப்பில் முழு கரும்பு ஒன்றையும் சேர்த்து அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

Related Post

அஜித்குமார் என்ன தீவிரவாதியா? – காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி

Posted by - June 30, 2025 0
மதுரை: ‘மடப்புரம் கோயில் காவலரை சாதாரண சந்தேக வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கியது ஏன்? அவர் என்ன தீவிரவாதியா?’ என உயர் நீதிமன்றம் மதுரை அமர்வு கேள்வி…

காதலை கண்டித்ததால் ஆத்திரம்- தம்பியை கொன்று 20 துண்டுகளாக வெட்டி ஏரியில் வீசிய அக்காள்

Posted by - March 21, 2023 0
ஓசூர்: கர்நாடக மாநிலம், விஜயபுரா மாவட்டம் சிந்திகி தாலுகாவுக்கு பட்ட தேவனாங்காவ் கிராமத்தை சேர்ந்தவர் சித்தப்பா பூசாரி. இந்த கிராமம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ளது.…

தமிழ்நாடு ஆளுநர், இலச்சினை.. திருவள்ளுவர் ஆண்டு.. ஆளுநர் மாளிகையின் அழைப்பிதழ்

Posted by - January 23, 2023 0
வரும் 26ஆம் தேதி நடைபெற இருக்கும் குடியரசு தின விழாவிற்கு தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் வரவேற்பு அழைப்பிதழ் பேசுபொருளாகியுள்ளது. சென்னையில் ஜனவரி 4ஆம் தேதி நடந்த நிகழ்வு ஒன்றில்,…

சிக்கனில் இந்த பாகத்தை ஒருபோதும் சாப்பிடாதீங்க.. இந்த பிரச்சனை இருக்கவங்க தொடவே கூடாது.!

Posted by - December 18, 2024 0
சிக்கனை சிலர் மாதத்திற்கு நான்கு முதல் ஐந்து முறை சாப்பிடுகிறார்கள், மற்றவர்கள் வாரத்திற்கு குறைந்தது மூன்று முதல் நான்கு முறை சாப்பிடுகிறார்கள். சிலருக்கு சிக்கன் இல்லாமல் ஒரு…

பிரபாகரன் மகள் துவாரகா உருவம் ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது? சர்வதேச உளவு அமைப்புகள் சந்தேகம்

Posted by - November 28, 2023 0
சென்னை: இலங்கையில் ஈழத்தமிழர்களுக்காக தனி தமிழ்நாட்டை உருவாக்க பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் இயக்கம் ஆயுதம் ஏந்தி போராடியது. 90 சதவீத வெற்றியை பெற்றிருந்த நிலையில் உலகின் பல நாடுகள்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *