அஜித்குமார் என்ன தீவிரவாதியா? – காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி

317 0

மதுரை: ‘மடப்புரம் கோயில் காவலரை சாதாரண சந்தேக வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கியது ஏன்? அவர் என்ன தீவிரவாதியா?’ என உயர் நீதிமன்றம் மதுரை அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியகிளாட் முன்பு அதிமுக வழக்கறிஞர்கள் மாரீஸ்குமார், ராஜராஜன், பாஜக வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன் ஆகியோர் இன்று (ஜூன் 30) காலை நேரில் ஆஜராகி, மடப்புரம் காளி கோயில் காவலர் அஜித்குமார் போலீஸ் காவலில் இறந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் கோரிக்கையை முன்வைத்தனர்.அப்போது அவர்கள், ‘மடப்புரம் காளி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த பெண் ஒருவரின் காரில் இருந்த நகைகள் திருடப்பட்டதாக திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், கோயில் காவலரான அஜித்குமாரை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையின்போது போலீஸார் அஜித்தை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் அவர் உயிரிழந்தார்.இதுபோன்ற சட்டவிரோத காவல் மரணங்களை ஏற்க முடியாது. இது தொடர்பாக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என்றனர்

பின்னர் நீதிபதிகள், “கடந்த 4 ஆண்டுகளில் 24 காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. அஜித்குமார் என்ன தீவிரவாதியா? ஆயுதம் ஏந்தி தாக்கினால், தற்காப்புக்காக போலீஸார் தாக்குதல் நடத்துவதை ஏற்கலாம். அவ்வாறு இல்லாமல் சாதாரண சந்தேக வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவரை தாக்கியது ஏன் எனத் தெரியவில்லை. இவ்விவகாரம் தொடர்பாக மனு தாக்கல் செய்தால் விசாரித்து உத்தரவு பிறப்பிக்கப்படும்” என்றனர்.

இதையடுத்து, மடப்புரம் கோயில் காவலர் மரணம் வழக்கு தொடர்பாக உரிய விசாரணை நடத்தவும், போலீஸார் மீது கொலை வழக்கு பதிவு செய்யவும் கோரி அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாநில துணைச் செயலாளர் மாரீஸ்குமார் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நாளை (ஜூலை 1) விசாரணைக்கு வருகிறது.

முன்னதாக, நகை திருட்டு புகாரின் பேரில் தனிப்​படை போலீ​ஸார் நடத்​திய விசா​ரணை​யின்​போது மடப்​புரம் பத்ர​காளி​யம்​மன் கோயில் காவலாளி உயிரிழந்​தார். இது தொடர்​பாக தனிப்​படை காவலர்​கள் 6 பேர் பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்​டனர்.

Related Post

டெங்குக் காய்ச்சல் – பள்ளி மாணவன் உயிரிழப்பு..!

Posted by - October 31, 2023 0
கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ராஜ் பாலாஜி, பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னை அடுத்த பூந்தமல்லியில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த…

இதயத்தில் அடைப்பு இருப்பதை உணர்த்தும் சில எச்சரிக்கை அறிகுறிகள்.. அசால்ட்டா இருக்காதீங்க..

Posted by - January 9, 2024 0
உலகளவில் இதய நோயால் ஏராளமானோர் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, இறந்தும் வருகிறார்கள். இப்படி இதய நோயால் மக்கள் பாதிக்கப்படுவதற்கும், இறப்பதற்கும் முக்கிய காரணமாக இருப்பது உணவுப் பழக்கங்களும், ஆரோக்கியமற்ற…

நிலக்கரி சுரங்க அறிவிப்பு- சட்டப்பேரவையில் அதிமுக, காங்கிரஸ், பாமக எம்.எல்.ஏக்கள் காரசார விவாதம்

Posted by - April 5, 2023 0
நிலக்கரி சுரங்க அறிவிப்பு விவகாரம் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது. உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பதில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.…

செடியிலேயே அழுகும் அவலம்; நாள்தோறும் எகிறும் தக்காளி விலை – கிலோ ரூ.130 வரை விற்பதால் மக்கள் அவதி!

Posted by - July 3, 2023 0
சென்னையில் ஒரு கிலோ தக்காளி விலை 130 ரூபாயாக உயர்ந்து விற்கப்பட்டு வரும் நிலையில், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் கிலோ ஒன்றுக்கு 160 வரை விலை அதிகரித்துள்ளது.…

ஸ்கெட்ச்சு ரெடி..! திமுகவின் கோட்டையை அசைக்கும் விஜய், பாஜகவிற்கு பல்ப், தவெகவின் டார்கெட் 2026

Posted by - March 29, 2025 0
 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026ல் ஆளும் திமுகவை எதிர்கொள்ள, தவெக தலைவர் விஜய் வலுவான வியூகங்களை வகுத்து வருகிறார். வரும் 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான களம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *