Generated Image November 11 2025 11 22AM

“பொறுப்புணர்வு இல்லாமல் கேட்கப்படுவது மன்னிப்பே அல்ல” – கவுரி கிஷன்

237 0

பொறுப்புணர்வு இல்லாமல் கேட்கப்படும் மன்னிப்பு என்பது மன்னிப்பே அல்ல. அதுவும், வழக்கமாக சொல்லப்படும் “தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது” என்ற சால்ஜாப்போடு கோரப்படும் மன்னிப்பு இன்னும் கொடுமையானது” என்று தன்னை விமர்சித்த யூடியூபருக்கு பதிலடி கொடுத்துள்ளார் நடிகர் கவுரி கிஷன்.

‘96’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர் மத்தியில் பிரபலமானவர் நடிகை கவுரி கிஷன். தற்போது, இவரது நடிப்பில் ‘அதர்ஸ்’ என்ற படம் திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது. இதையொட்டி பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. அப்போது தனது உடல் எடை குறித்து அநாகரிகமாக கேள்வி எழுப்பிய யூடியூபர் ஒருவரிடம், நடிகர் கவுரி கிஷன் கடுமையாக வாக்குவாதம் செய்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவியது. கவுரிக்கு ஆதரவாக திரையுலகப் பிரபலங்கள் பலரும் குரல் கொடுத்தனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்து கவுரியும் ஓர் அறிக்கையை வெளியிட்டார்.இதற்கிடையில், சம்பந்தப்பட்ட யூடியூபர் வருத்தம் தெரிவித்து ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் அவர், “கவுரியை நான் உருவக் கேலி செய்யவில்லை. அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. அது ஜாலியான கேள்வியாக கேட்கப்பட்டது” என்று கூறியிருந்தார். இதனையொட்டி கவுரி இன்று தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். அதில், “பொறுப்புணர்வு இல்லாமல் கேட்கப்படும் மன்னிப்பு என்பது மன்னிப்பே அல்ல. அதுவும், வழக்கமாக சொல்லப்படும் “தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது” என்ற சால்ஜாப்போடு கோரப்படும் மன்னிப்பு இன்னும் கொடுமையானது. நான் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்துகிறேன். நான் ஒருபோதும் வருத்தப்படுவது போன்ற நாடகத்தையோ, போலியான வார்த்தைகளையோ ஏற்க மாட்டேன். இன்னும் சிறப்பாக செயல்படலாம்” என்று பதிவிட்டுள்ளார் கவுரி கிஷன்.

 கவுரி கிஷன்.

Related Post

குமரவடிவேல் நடராஜன்: இட்ஸ் மீ !! வைகைபுயல் வடிவேலுவின் வரலாற்றை பார்க்கலாமா ??

Posted by - September 12, 2023 0
குமரவடிவேல் நடராஜன் வைகைபுயலாக நமக்கு தெரிந்த வடிவேலுவின் முழு பெயர் குமரவடிவேல் நடராஜன். இவர் மதுரையை பூர்வீகமாக கொண்டவர். தந்தை கண்ணாடி தொழில் செய்பவர். சிறு வயதிலிருந்து…

சேரன் வீட்டில் நிகழ்ந்த திடீர் மரணம்..

Posted by - November 16, 2023 0
சேரன் கடந்த 1997-ம் ஆண்டு வெளிவந்த பாரதி கண்ணம்மா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் தான் சேரன். பல வெற்றி படங்களை இயக்கிய…

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Posted by - September 2, 2024 0
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் ஆவணி திருவிழா கடந்த மாதம் 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து சுவாமி, அம்பாள்…

அமைச்சராக பதவியேற்றார் டி.ஆர்.பி ராஜா…

Posted by - May 11, 2023 0
மன்னார்குடி எம்.எல்.ஏவும் தி.மு.க ஐ.டி விங் செயலாளருமான டி.ஆர்.பி ராஜா அமைச்சராக பதவியேற்றுள்ளார். மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு 2021-ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றது. மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றப் பிறகு அவரது அமைச்சரவை…

வங்கிகளுக்கு இன்று முதல் 5 நாட்களுக்கு விடுமுறை

Posted by - January 13, 2024 0
சென்னை: தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை வெகுவிமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி பொங்கல் பண்டிகையானது வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று முதல் 5 நாட்களுக்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *