மருத்துவத்துறையை நாசமாக்கி விட்டு பதவியில் இருக்க கூச்சமா இல்லையா? – அமைச்சரை வெளுத்து வாங்கும் அண்ணாமலை

129 0

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த நான்கு ஆண்டுகளில், தமிழக அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் உயிரிழப்புகள் எண்ணிலடங்காமல் அதிகரித்துள்ளன.

கையாலாகாத திமுக அரசின் சுகாதாரத்துறை ஒழுங்காகச் செயல்படுவதற்கு இன்னும் எத்தனை உயிர்களைப் பறிகொடுக்க வேண்டும்? என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மருத்துவர் இல்லாத நிலையில், அங்கிருந்த உதவியாளர் ஒருவர் ஊசி போட்டதால், தென்காசியைச் சேர்ந்த நான்கு வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்திருக்கும் செய்தி, மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த நான்கு ஆண்டுகளில், தமிழக அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் உயிரிழப்புகள் எண்ணிலடங்காமல் அதிகரித்துள்ளன. இவற்றில் பெரும்பாலானவை, போதிய மருத்துவர்கள் இல்லாததால் ஏற்பட்டுள்ளன. நான்கு ஆண்டுகளாக, மருத்துவர்களை நியமிக்காமல் என்ன செய்து கொண்டிருக்கிறார் சுகாதாரத்துறை அமைச்சர்?

மருத்துவர்கள் நியமனம் எதனால் தாமதமாகிறது? எத்தனை சிறு குழந்தைகளைத் தொடர்ந்து பறி கொடுத்து வருகிறோம்? இதோ, அதோ என்று, நான்கு ஆண்டுகளில் தமிழக மருத்துவத் துறையை நாசமாக்கிவிட்டு, கொஞ்சம் கூட மனசாட்சி இன்றிப் பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கக் கூச்சமாக இல்லையா அமைச்சருக்கு? இத்தனை கையாலாகாத அமைச்சரை, மிக முக்கியமான சுகாதாரத் துறையில் வைத்திருக்கும் முதலமைச்சர் திரு. ஸ்டாலினுக்கு, தமிழக அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் தொடர் உயிரிழப்புகள் தெரியுமா தெரியாதா?

 

திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்த சிறுவன் குடும்பத்தினருக்கு, திமுக கட்சியிலிருந்து உதவி செய்யப் போவதாகக் கூறியிருப்பது, திமுக அரசின் தோல்வியை மூடி மறைக்கவா? திமுக கொடுக்கும் பணம், குழந்தையின் உயிருக்கு ஈடாகிவிடுமா? தமிழக அரசு ஏன் பொறுப்பேற்கவில்லை? அரசு சார்பில் ஏன் இழப்பீடு அறிவிக்கவில்லை?இந்தக் கையாலாகாத திமுக அரசின் சுகாதாரத்துறை ஒழுங்காகச் செயல்படுவதற்கு இன்னும் எத்தனை உயிர்களைப் பறிகொடுக்க வேண்டும்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Post

இப்போ எங்க போனாரு நடிகர் சூர்யா? முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விளாசல்!

Posted by - December 31, 2024 0
தமிழக மக்களுக்காக நடைபெற்ற அதிமுக ஆட்சியை மு.க.ஸ்டாலின் ஊர் ஊராக சென்று ஜீபூம்பா செய்து ஆட்சியை பிடித்து விட்டார். சிறைச்சாலை அதிமுகவினருக்காக கட்டப்பட்டது. நாங்கள் யாருக்கும் பயப்படவில்லை,…

சென்னையில் வெள்ளம் தேங்கியதற்கு காரணமே இதுதான்.. விளாசிய நீதிமன்றம்! மாநகராட்சி மீது சாடல்

Posted by - December 12, 2023 0
சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் மக்கள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டனர். இந்த வெள்ள பாதிப்புகளுக்கு பிளாஸ்டிக் கழிவுகள் முக்கியமானவை என…

தமிழகத்தில் தொழில் தொடங்க வருபவர்களிடம் 40 % கமிஷன் கேட்கும் திமுக : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Posted by - April 13, 2024 0
ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளாக, கோயம்புத்தூர் இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் குறித்துக் கவலையே இல்லாமல் இருந்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, தமிழக பாஜக சார்பாக கோவை பாராளுமன்றத் தேர்தல்…

விஜயகாந்த் எப்போது மனம் உடைந்து போனார்? அவரது மகனே சொன்ன தகவல்

Posted by - December 29, 2023 0
மறைந்த கேப்டன் விஜயகாந்த் அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் எப்போது மனம் உடைந்துபோனார் என்பதை அவருடைய மகன் சண்முக பாண்டியன் ஒருமுறை தெரிவித்திருக்கிறார்.  மறைந்த கேப்டன் விஜயகாந்த்…

“கட்சி தொடங்கும் முன்பே தலைவர், பொதுச் செயலாளர் தேர்வா?! தரமாக கலக்கும் தலைவர் விஜய்!”

Posted by - January 27, 2024 0
தளபதி விஜய் நேற்று விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை செய்தார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது வந்துள்ள தகவல்படி விஜய் அரசியல் கட்சி அமைப்பது…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *