மாநில அந்தஸ்து கோரி போராட்டம்: லடாக் கலவர பாதிப்பும் பின்னணியும்

189 0

லே: ல​டாக்​கில் மாநில அந்​தஸ்து கோரி நேற்று நடை​பெற்ற போராட்​டத்​தில் கலவரம் வெடித்​தது. இதில் 4 பேர் உயி​ரிழந்​தனர். 60-க்கும் மேற்​பட்​டோர் காயம் அடைந்​தனர். காஷ்மீரில் இருந்து லடாக் யூனியன் பிரதேசம் உரு​வாக்​கப்​பட்​டது. இந்​நிலை​யில் கடந்த 3 ஆண்​டு​களுக்​கும் மேலாக லடாக் மக்​கள் தங்​கள் பகு​திக்கு மாநில அந்​தஸ்​தும் நிலம், கலாச்​சா​ரம் மற்​றும் வளங்​களை பாது​காக்​கும் வகை​யில் அரசி​யல் சாசன பாது​காப்​பும் கோரி வரு​கின்​றனர்.

லடாக் பகு​திக்கு மாநில அந்​தஸ்​தும் அரசி​யலமைப்பு சட்​டத்​தின் 6-வது அட்​ட​வணை​யில் லடாக்கை சேர்க்க வலி​யுறுத்​தி​யும் பரு​வநிலை செயற்​பாட்​டாளர் சோனம் வாங்​சுக் கடந்த 2 வாரங்​களாக உண்​ணா​விரதம் மேற்​கொண்டு வந்​தார். இந்​நிலை​யில் அவரது போராட்​டத்​துக்கு ஆதரவு அளிக்​கும் வகை​யில் லடாக்​கில் நேற்று முழு அடைப்பு போராட்​டத்​துக்கு ‘லே அபெக்ஸ் பாடி’ என்ற அமைப்​பின் இளைஞர் அணி அழைப்பு விடுத்​தது.இந்​நிலை​யில் நேற்று லே நகரில் திரண்ட போராட்​டக்​காரர்​கள் அங்​குள்ள லடாக் மலைப்​பகுதி மேம்​பாட்டு தன்​னாட்சி கவுன்​சில் அலு​வல​கம் மற்​றும் பாஜக அலு​வல​கம் மீது தாக்​குதல் நடத்​தினர். மேலும் போலீ​ஸார் மீது கற்​களை வீசிய அவர்​கள், சிஆர்​பிஎப் வேன் உட்பட பல வாகனங்​களுக்கு தீவைத்து எரித்​தனர். இதையடுத்து போலீ​ஸார் தடியடி நடத்​தி​யும் கண்​ணீர் புகைக்​குண்​டு​களை வீசி​யும் வன்​முறை​யாளர்​களை விரட்​டினர். மேலும் கூடு​தல் படை​யினர் வரவழைக்​கப்​பட்டு நிலை​மையை கட்​டுக்​குள் கொண்டு வந்​தனர்.இந்​நிலை​யில் இந்த கலவரத்​தில் 4 பேர் உயி​ரிழந்​தனர். மேலும் 60-க்​கும் மேற்​பட்​டோர் காயம் அடைந்​தனர். லே மாவட்​டத்​தில் 5 மற்​றும் அதற்கு மேற்​பட்​டோர் ஒன்று கூட​வும் அனு​ம​தி​யின்றி போராட்​டம் நடத்​த​வும் தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது. இந்​நிலை​யில் கலவரம் காரண​மாக பரு​வநிலை செயற்​பாட்​டாளர் சோனம் வாங்​சுக் தனது போராட்​டத்தை வாபஸ் பெற்​றார்.

“இது இளைஞர்​களின் கோபம், புரட்​சி. வன்​முறையை லடாக் இளைஞர்​கள் உடனடி​யாக நிறுத்த வேண்​டும். ஏனெனில் இது நமது நோக்​கத்​திற்கு தீங்கு விளைவிக்​கும், நிலை​மையை மேலும் மோச​மாக்​கும். லடாக்​கிலும் நாட்​டிலும் ஸ்திரமின்​மையை நாங்​கள் விரும்​ப​வில்​லை” என்று அவர் கூறி​னார்.

இந்​நிலை​யில் லடாக் போராட்​டத்​தில் காங்​கிரஸ் கவுன்​சிலர் பன்ட்​சாக் ஸ்டான்​சின் செபாக் வன்​முறையை தூண்​டிய​தாக பாஜக குற்​றம் சாட்​டி​யுள்​ளது. ஆனால் இதனை சோனம் வாங்​சுக் மறுத்​துள்​ளார். லடாக்​கில் மாநில அந்​தஸ்து கோரும் போராட்​டத்​தில் முதல்​முறை​யாக கலவரம் வெடித்​துள்​ளது. கோரிக்கை தொடர்​பாக அக்​டோபர்​ 6-ம்​ தேதி மீண்​டும்​ பேச்​சு​வார்​த்​தைக்​கு வரு​மாறு ல​டாக்​ பிர​தி​நி​தி​களை மத்​தி​ய அரசு அழைத்​துள்​ள நிலை​யில்​ அங்​கு கலவரம் ஏற்​பட்​டுள்​ளது.

Related Post

இந்தியாவில் 6 நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு மீண்டும் 100-க்கும் கீழ் குறைந்தது

Posted by - February 21, 2023 0
புதுடெல்லி: இந்தியாவில் மேலும் 95 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த 14-ந்தேதி பாதிப்பு 74 ஆக…

இருபிரிவினர் இடையே திடீர் மோதல் – அரியானாவில் 144 தடை உத்தரவு அமல்

Posted by - August 1, 2023 0
கவுகாத்தி: அரியானா மாநிலம் குர்கான் அருகே நூக் என்ற இடத்தில் நுல்ஹர் மகாதேவ் கோயில் உள்ளது. இங்கு இன்று நடந்த விழா முக்கிய நிகழ்ச்சியாக புனிதநீர் யாத்திரையில்…

ஆந்திராவில் தக்காளி கிலோ ரூ.50-க்கு விற்ற விவசாயி- 2 கிலோ மீட்டர் வரிசையில் நின்று வாங்கி சென்றனர்

Posted by - July 19, 2023 0
திருப்பதி: ஆந்திராவில் ஒரு கிலோ தக்காளி ரூ.100 முதல் 120 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தக்காளிக்காக வியாபாரி, விவசாயி கொலை செய்யப்பட்டுள்ளனர். அந்த அளவிற்கு ஆந்திராவில்…

கூகுள் தேடல் 2024:இதையெல்லாமா கூகுளில் தேடுவீங்க…

Posted by - December 11, 2024 0
இந்தியர்கள் மொத்தமாக கூகுளில் அதிகம் தேடியது என்ன? இந்தியன் பிரீமியர் லீக் T20 உலகக் கோப்பை பாரதிய ஜனதா கட்சி தேர்தல் முடிவுகள் 2024 ஒலிம்பிக்ஸ் 2024…

தொடர் இருமல் மற்றும் சளி உள்ளதா..? ஒருவேளை இந்த நோய் காரணமாக இருக்கலாம்

Posted by - December 3, 2024 0
பருவகால ஒவ்வாமை, மாசுபடுத்திகள் அனைத்தும் பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது. நீங்கள் தொடர்ந்து இருமல் மற்றும் சளியை அனுபவிக்கிறீர்களா? இது எளிதாக குணமாகவில்லையா? இது மற்றொரு நுரையீரல்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *