மாஸ் காட்டிய தளபதி! ‘’மதுரை கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறேன்’’ சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்!

246 0

#TVK | #TVKVijay | #TVKMaduraiMaanadu | #TamilagaVettrikazhagam | #Vijay | #TVKLeader | #TVKMaanadu | #MaduraiTVKMaanadu | #TVKFlag | #தமிழகவெற்றிக்கழகம்‌ |

TVK Maanadu Madurai: மதுரை கிழக்கு தொகுதி வேட்பாளர் யார் தெரியுமா? விஜய். ஆம், நான்தான்

தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு மதுரை மாவட்டம், பாரபத்தியில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் ஏராளமான விஷயங்களைப் பேசினார். அதில் தேர்தல் அரசியல் குறித்து அவர் பேசியதாவது:

’’உங்கள் எல்லோருக்கும் ஒரு சிறிய சர்ப்ரைஸ் கொடுக்க இருக்கிறேன். வேட்பாளர்கள் பட்டியலை அறிவிக்க உள்ளேன்.

மதுரை கிழக்கு தொகுதி வேட்பாளர்

மதுரை கிழக்கு தொகுதி வேட்பாளர் யார் தெரியுமா? விஜய். ஆம், நான்தான். மதுரை மேற்கு வேட்பாளர் விஜய், மதுரை மத்தி வேட்பாளர் விஜய்,  திருமங்கலம் வேட்பாளர் விஜய். உசிலம்பட்டி வேட்பாளர் விஜய்.

அதாவது தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளுக்கும் நானே வேட்பாளர். அவ்வாறு நினைத்துதான் மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும். உங்கள் விஜய்தான் நம் கட்சியின் சின்னம். தவெகவினர் இடையே எந்த அரசியலும் நுழைய முடியாது.

ஒவ்வொரு வீட்டுக்கும் தாய் மாமன்

தமிழ்நாட்டில் வீட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் தாய் மாமன் நான். மார்க்கெட் போன பிறகு அடைக்கலம் தேடி உங்களை நாடி வரவில்லை. படைக்கலத்துடன் வந்திருக்கிறேன். எல்லாவற்றுக்கும் தயாராக வந்திருக்கிறேன்.

எவ்வளவு செய்தாலும் எனக்கு நீங்கள் (மக்கள்) செய்ததற்கு நன்றிக்கடன் தீர்க்க முடியாது.

மக்களுக்கு உழைப்பதே என் வேலை. என் கடன் என் மக்களுக்குப் பணி செய்து கிடைப்பதே!

உங்கள் விஜய், நான் வருகிறேன்.

மக்களை மதிக்கிறேன். மக்களை வழிபடுகிறேன். உங்கள் விஜய், நான் வருகிறேன்’’.

இவ்வாறு தவெக தலைவர் விஜய் தெரிவித்தார்.

Related Post

Generated Image January 06 2026 1 11PM

விஜய் சொன்ன முக்கிய தகவல்..

Posted by - February 2, 2026 0
தவெக 3ஆம் ஆண்டையொட்டி விஜய் கூறுகையில், ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்லலாம். சலனங்களைப் புறந்தள்ளி, சமநிலை தவறாத, அளக்கவியலாத ஆழ்கடல் த.வெ.க.; எவராலும் விலக்க இயலாத விரிவானம்…
Generated Image November 17 2025 4 00PM

நாளை முதல் SIR பணிகள் புறக்கணிப்பு: வருவாய்த்துறை சங்கம் அதிரடி அறிவிப்பு! காரணம் என்ன?

Posted by - November 17, 2025 0
அதீத பணி நெருக்கடி காரணமாக SIR பணிகளை புறக்கணிப்பதாக வருவாய்த் துறை சங்கங்கள் அறிவித்துள்ளன. SIR பணிகளை நாளை (நவம்பர் 18) முதல் புறக்கணிக்க உள்ளதாக வருவாய்த்துறை…

நீதிமன்றங்களின் தொடர் குட்டுகளால் அறிவாலய அரசு கதிகலங்கிப் போயுள்ளது – நயினார் நாகேந்திரன்

Posted by - October 11, 2025 0
நீதிமன்றங்களின் தொடர் குட்டுகளால் அறிவாலய அரசு கதிகலங்கிப் போய் கிடப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில்,   பகுஜன்…
Gemini Generated Image brdq6zbrdq6zbrdq

பாஜகவில் களம் இறங்கும் 27 வேட்பாளர்கள் யார்.? அண்ணாமலைக்கு இடம் இருக்கா.? உத்தேச பட்டியல் இதோ…

Posted by - March 26, 2026 0
அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அந்த தொகுதிகளில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது. தொகுதி பங்கீட்டை முடித்த அதிமுக தமிழக சட்டமன்ற…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *