மிக்ஜாம் புயல் பாதிப்பு : முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை அனுப்புவது எப்படி? – முழுவிபரம் இதோ

261 0

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்பினை சீர்செய்திடவும், நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும், தொழில் நிறுவனங்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்கிட தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்பினை சீர்செய்திடவும், நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும், தொழில் நிறுவனங்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்கிட தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது:-

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக ஏற்பட்ட வரலாறு காணாத பெருமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த சேதங்கள் ஏற்பட்டன.  இந்த இயற்கைப் பேரிடரால் ஏறத்தாழ ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் பேரிடர் பாதிப்பிலிருந்து மக்களை மீட்டெடுப்பதற்கு தங்களின் பங்களிப்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். இதேபோன்று, எம்.பி., எம்.எல்.ஏ.க்களையும் தங்கள் ஊதியத்தை வழங்கும்படி கோரிக்கை விடுதுள்ளார்.

இந்தச் சூழ்நிலையில், தொழில் நிறுவனங்களும், தன்னார்வ அமைப்புகளும், பொது மக்களும் பங்களிப்பினையும் வழங்கிட விருப்பம் தெரிவித்து, அரசைத் தொடர்பு கொண்டு வருகிறார்கள்.

இவ்வாறு அளிக்கப்படும் நன்கொடைகளுக்கு வருமான வரிச் சட்டம் 100 விழுக்காடு வரிவிலக்கு உண்டு. வெளிநாடு வாழ் இந்தியர்கள் அல்லது வெளிநாட்டு மக்களிடமிருந்து பெறப்படும் நிவாரணத்திற்கு  வரி விளக்கு விலக்களிக்கப்படும்.

இந்த நன்கொடைகளை மின்னணு முறை மூலம் பின்வருமாறு வழங்கலாம்.

1. வங்கி இணைய சேவை அல்லது கடன் அட்டை / பற்று அட்டையின் மூலமாக கீழ்க்கண்ட இணையதளம் வழியாகச் செலுத்தி பற்றுச் சீட்டினைப் பெற்றுக்கொள்ளலாம்.  https://cmprf.tn.gov.in

2. Electronic Clearing System (ECS) / RTGS / NEFT மூலமாக கீழ்க்காணும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு நேரடியாக அனுப்பலாம்.

வங்கி பெயர் – இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கிளை – தலைமைச் செயலகம், சென்னை – 600 009, சேமிப்புக் கணக்கு எண் – 117201000000070, IFS Code – IOBA0001172, MICR Code –    600020061, CMPRF PAN – AAAGC0038F

3. UPI – VPA ID: tncmprf@iob மற்றும் PhonePe, Google Pay, PayTM, Amazon Pay, Mobikwik  போன்ற பல்வேறு செயலிகள்.

4. மேற்கண்ட ECS மூலமாக நிதி அனுப்புவோர் உரிய அலுவலகப் பற்றுச்சீட்டினைப் பெற ஏதுவாக, பெயர் செலுத்தும் தொகை,

வங்கி மற்றும் கிளை செலுத்தப்பட்ட தேதி, நிதி அனுப்பியதற்கான எண் தங்களது முழுமையான முகவரி, இ-மெயில் விவரம், தொலைபேசி /அலைபேசி எண் உள்ளிட்ட தகவல்களைக் குறிப்பிட வேண்டும்.

5. நிவாரண நிதி வழங்கும் வெளிநாடுவாழ் மக்கள் IOBAINBB001 Indian Overseas Bank, Central Office, Chennai என்ற  SWIFT Code-ஐப் பின்பற்ற வேண்டும்.

6. மின்னணு மூலம் பரிவர்த்தனை செய்ய இயலாதவர்கள் குறுக்குக் கோடிட்ட காசோலை அல்லது வங்கி வரைவோலை மூலமாக, “முதலமைச்சரின் பொது நிவாரண நிதி (Chief Minister’s Public Relief Fund)” என்ற பெயரில்,  அரசு இணைச் செயலாளர் மற்றும் பொருளாளர், முதலமைச்சர் பொது நிவாரண நிதி, நிதித்துறை, தமிழ்நாடு அரசு,  தலைமைச் செயலகம்,  சென்னை – 600 009, தமிழ்நாடு, இந்தியா – என்ற முகவரிக்கு அனுப்பலாம்; மின்னஞ்சல் முகவரி – jscmprf@tn.gov.in

Related Post

தஞ்சாவூரில் ஆசிரியை படுகொலை! தமிழ்நாட்டில் யாருடைய உயிருக்கும் உத்தரவாதம் இல்லை;அன்புமணி ராமதாஸ் கண்டனம்

Posted by - November 27, 2025 0
தமிழ்நாட்டில் படுகொலைகள் நடக்காத நாளே இல்லை என்று கூறும் அளவுக்கு ஒவ்வொரு நாளும் சராசரியாக 5 படுகொலைகள் நடக்கின்றன. தஞ்சாவூரில் திருமணத்திற்கு மறுத்த ஆசிரியை கொடூரமாக வெட்டிக்…

குற்றம் சொல்லியே பெயர் வாங்குபவர்கள் அதிமுகவினர் – அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்..!!

Posted by - October 17, 2024 0
நாங்கள் பணி செய்து பெயர் வாங்குகிறவர்கள். அதிமுகவினர் குற்றம் சொல்லியே பெயர் வாங்குபவர்கள். எனவே, அவர்களுடைய வசைபாடுகளைப் பற்றி நாங்கள் கவலைப்படுபவர்கள் இல்லை என அமைச்சர் சேகர்…

சர்க்கரை நோயாளிகள்.. பேரீச்சம் பழம் சாப்பிடலாமா.. பேரீச்சம்பழம் சாப்பிட்டால் என்னாகும்? அட ஆச்சரியம்

Posted by - December 5, 2023 0
சென்னை: சர்க்கரை நோயாளிகள் இனிப்பு நிறைந்த பேரீச்சம் பழம் சாப்பிடலாமா? இந்த பழத்தை சாப்பிட்டால் என்னாகும்? தித்திப்பு நிறைந்த பழம் என்பதால், நீரிழிவு நோயாளிகள் பேரீச்சம் பழம்…

நடைபயிற்சி சென்ற பெண்ணை கட்டையால் தாக்கி தரதரவென இழுத்து சென்ற கொள்ளையன்

Posted by - March 16, 2023 0
நடைப்பயிற்சி சென்ற பெண் பேராசிரியரை தாக்கி, அவரின் இருசக்கர வாகனத்தை திருடி சென்ற நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள…

எல்லாம் பணத்திமிரு, அடுத்தவங்க கஷ்டம் உனக்கு சிரிப்பா இருக்கா.. நெட்டிசன்களிடம் சிக்கிய யூடியூபர் இர்ஃபான்

Posted by - April 1, 2025 0
சமீப காலமாக அடுக்கடுக்காக ஏகப்பட்ட சர்ச்சைகளை சந்தித்து வருகிறார் யூடியூபர் இர்ஃபான். பாட்டியின் மீது கார் மோதியதில் தொடங்கி அவருக்கு குழந்தை பிறந்தது வரை எல்லாமே பஞ்சாயத்து தான்.ஆனால்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *