ரூ.1 கோடி நஷ்டஈடு தரணும்.. அமைச்சர் மனோ தங்கராஜுக்கு நோட்டீஸ் அனுப்பிய அண்ணாமலை!

375 0

15 நாட்களில் மன்னிப்பு கேட்கவும், நஷ்ட ஈடு வழங்கவும் வலியுறுத்தியுள்ள அண்ணாமலை, தவறும் பட்சத்தில் வழக்கு தொடரப்படும் என எச்சரிக்கை

தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜுக்கு ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

ஆவின் நிறுவனத்தில் முறைகேடு நடைபெறுவதாக அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.  அதற்கு செய்தியாளர் சந்திப்பில் பதிலளித்த அமைச்சர் மனோ தங்கராஜ், வடமாநில பால் உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து கையூட்டு பெற்று ஆவின் நிறுவனத்திற்கு எதிராக அண்ணாமலை செயல்படுவதாக குற்றஞ்சாட்டியிருந்தார். இந்த நிலையில், அமைச்சர் மனோ தங்கராஜுக்கு எதிராக ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு அண்ணாமலை நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.மான நஷ்ட ஈடாக வழங்கப்படும் ஒரு கோடி ரூபாயை ஆவின் வைப்பு நிதிக்கு கொடுக்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். மேலும், அமைச்சர் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் நோட்டீஸில் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். 15 நாட்களில் மன்னிப்பு கேட்கவும், மான நஷ்ட ஈடு வழங்கவும் வலியுறுத்தியுள்ள அண்ணாமலை, தவறும் பட்சத்தில் சட்ட ரீதியாக வழக்கு தொடரப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Post

அரசியலிலும் சாதிக்க வேண்டுமென விஜய்க்கு மாணவி அழைப்பு…

Posted by - June 17, 2023 0
#BREAKING | மேடையிலேயே விஜய்யை அரசியலுக்கு வருமாறு அழைப்பு விடுத்த மாணவி மாணவியின் அழைப்பை கடைசி வரை கவனமுடன் கேட்டுக்கொண்ட விஜய் சென்னை, நீலாங்கரையில் மாணவ – மாணவிகளுக்கு…

தி.மு.க வேட்பாளர் அன்னியூர் சிவா அபார வெற்றி!

Posted by - July 13, 2024 0
 திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 712 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட…

மாதம்பட்டி ரங்கராஜ் யார் என்று தெரியுமா?- அழகிய குடும்ப போட்டோ

Posted by - May 2, 2024 0
குக் வித் கோமாளி 5 தொழில் வளர்ச்சி என்பது அனைவருக்குமே எடுத்தவுடன் வெற்றி தராது, அதற்காக நிறைய முயற்சி, உழைப்பை போட வேண்டும். அப்படி ஆரம்பத்தில் இருந்து…
DGHJCFYGHZDRT

போதையில் குத்தாட்டம் போட்ட தஞ்சை தவெக எம்எல்ஏ விஜய் சரவணன்! | TVK MLA Viral Video

Posted by - May 6, 2026 0
#BREAKING #TVKMLA #ViralVideo தஞ்சை தொகுதியில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தஞ்சை எம்எல்ஏ விஜய் சரவணன் தனது நண்பர்களுடன் குடித்துவிட்டு போதையில்…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி 35 ஆக அதிகரிப்பு: 70-க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை

Posted by - June 20, 2024 0
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியதால் தற்போது வரை 33 பேர் உயிரிழந்துள்ளனர். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியதால் தற்போது வரை 35 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து உயிரிழப்பு அதிகரித்து வரும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *