மேடையில் அமித் ஷா அப்படி என்ன சொன்னார்? தமிழிசை அளித்த பதில்

247 0

ஆந்திர மாநில முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவியேற்ற விழாவில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசையை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

கட்சியின் மாநில தலைவராக இருந்தவரை, இரண்டு மாநிலங்களின் ஆளுநராக பதவி வகித்தவரை அவமதிக்கும் வகையில் அமித்ஷா நடந்து கொண்டது முறையல்ல எனவும் சிலர் விமர்சிக்கின்றனர். உண்மையில் என்ன பேசியிருப்பார் என்பது மில்லியன் டாலர் கேள்விதான். நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 40க்கு 40 இடங்களை கைப்பற்றியது. இதுகுறித்து கருத்து தெரிவித்த அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அதிமுகவும் -பாஜகவும் இணைந்து போட்டியிட்டிருந்தால், 30-35 தொகுதிகளை கைப்பற்றியிருப்போம் என்றார்.

எஸ்.பி.வேலுமணியின் கருத்து கூட்டணி கணக்கு அடிப்படையில் சரியானது என தமிழிசை சவுந்தரராஜனும் ஆமோதிக்க, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையோ, அதற்கு நேர் எதிராக பேசினார். தமிழ்நாட்டில் பாஜக தனியாக போட்டியிட்டது தங்களுக்கு சாதகமாக அமைந்தது என்றும், பாஜகவின் வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். ஒரு கட்சியில் உள்ள இரண்டு தலைவர்களின் மாறுபட்ட கருத்தால் சலசலப்பு ஏற்பட, சமூக விரோதிகள் பலருக்கும் பாஜகவில் பொறுப்புகள் வழங்கப்படுவதாக தமிழிசை தனியார் ஊடக பேட்டியில் தெரிவித்தது இன்னும் சர்ச்சையை கூட்டியது.

இந்த நிலையில், தமிழிசைக்கும் அண்ணாமலைக்கும் இடையே கருத்து வேறுபாடு என செய்திகள் வெளியாகின. இதன் தொடர்ச்சியாக, பிரதமர் பதவியேற்பு விழாவிற்கு டெல்லி சென்ற அண்ணாமலை தமிழக சூழல் குறித்து விளக்கம் அளித்ததாகவும், அப்போது கட்சி தலைமை அவரிடம் சில அறிவுறுத்தல்களை வழங்கியதாகவும் கூறப்படுகிறது. இதன் எதிரொலியாக, தமிழ்நாடு திரும்பிய அண்ணாமலை, விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்திக்க மறுத்தார்.

இந்த நிலையில் தான், ஆந்திரா முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற தமிழிசை வணக்கம் சொன்ன போது, அவரை அழைத்து அமித்ஷா பேசியுள்ளார். தம்மை கடந்து சென்ற தமிழிசையை அழைத்து அமித்ஷா கண்டிப்பான குரலில் கை விரல்களை உயர்த்தியபடி பேசினார்.இதுதொடர்பாக சென்னை திரும்பிய தமிழிசையிடம் கேட்டபோது, பதில் அளிக்காமல் , அனைத்தும் ஓகே என்பதுபோல் கையை உயர்த்திக் காட்டிச் சென்றார். அப்படி அமித்ஷா என்ன சொன்னார்? ஏன் இப்படி கடுமை காட்டினார் என்பது கட்சிகள் கடந்தும் விவாதத்திற்கு வித்திட்டுள்ளது.

Related Post

பெரம்பூர் தொகுதியில் விஜய்க்கு கடும் நெருக்கடி.. ஜோசப் விஜய் பெயரில் இத்தனை பேரா?

Posted by - April 7, 2026 0
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட 7600 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் ஜோசப் மற்றும் விஜய் என்கிற பெயரில்…

கூட்டணியை நான் பார்த்துக் கொள்கிறேன்… தேர்தல் பணிகளை துரிதப்படுத்துங்கள்… நிர்வாகிகளுக்கு கமல்ஹாசன் அட்வைஸ்

Posted by - January 23, 2024 0
கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மக்கள் நீதி மய்யம் சார்பில் பூத் கமிட்டி அமைக்க வேண்டும் – கமல்ஹாசன் நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைக்க…

மநீம-க்கு ஒரு மாநிலங்களவை தொகுதி ஒதுக்கீடு.. முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஒப்பந்தம்!

Posted by - March 9, 2024 0
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். திமுக கூட்டணியில் இணைந்த மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு வரும் 2025…

தமிழக அரசியலின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஜென்ஸீ வாக்குகள் யாருக்கு?

Posted by - April 3, 2026 0
தமிழகத்தில் நடைபெற உள்ள 2026 சட்டப்பேரவைத் தேர்தலில், ஜென் இசெட் (Gen Z) வாக்காளர்கள் முக்கியமான தீர்மான சக்தியாக உருவெடுத்துள்ளனர். சுமார் 1 கோடியே 18 லட்சம்…

Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

Posted by - January 13, 2026 0
இடைநிலை ஆசிரியர்களுக்கு சம ஊதியம் வழங்க உடனடியாக அரசாணை வழங்க வேண்டும் என்று சீமான் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *