ரூ.1000 உரிமைத்தொகை.. தமிழ்நாடு அரசின் இணைய பக்கத்தை திறந்தால் ஷாக்.. என்ன இது? ஏன் இப்படி?

297 0

சென்னை:

மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்களை சரிபார்க்க தொடங்கப்பட்ட இணையதளம் கடந்த 3 நாட்களாக இயங்காமல் இருப்பது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதி தமிழக வரலாற்றிலேயே இல்லாத வகையில் 1.065 கோடி மகளிருக்கு, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மகளிர் உரிமை தொகை வழங்கும் நிகழ்வை \முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

திட்டத் தொடக்கத்தின் முதல் நாளே ஒரு கோடிக்கும் மேற்பட்ட மகளிரின் வங்கிக் கணக்கில் உரிமைத்தொகை வரவு வைக்கப்பட்டது ஒரு மகத்தான சாதனை நிகழ்வாகும். இது குறித்து நாடே பாராட்டுகிறது. தமிழ்நாட்டின் இத்திட்டத்தைப் பற்றி மற்ற மாநிலங்களும் வியந்து பாராட்டி வருகின்றன.ரூ.1000 உரிமைத்தொகை.. தமிழ்நாடு அரசின் இணைய பக்கத்தை திறந்தால் ஷாக்.. என்ன  இது? ஏன் இப்படி? | Kalaingar 1000 RS Housewives money Scheme special  website is still not running - Tamil ...

அடுத்த மாதத்திற்கான கட்டணம் இன்னும் ஒரு வாரத்தில் அளிக்கப்பட உள்ளது. இந்த நிலையில்தான் இந்த திட்டத்தில் மேல்முறையீடு செய்ய, பணம் வராதவர்கள் மீண்டும் முறையீடு செய்ய, இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பம் செய்ய வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டு உள்ளது. அதன்படி கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பத்தின் நிலையை அறிய இணையதளம் தொடங்கப்பட்டு உள்ளது.

இதுவரை ரூ.1,000 கிடைக்கப் பெறாதவர்கள் www.kmut.tn.gov.in என்ற இணையதளத்தில் சரிபார்க்கலாம்;. குடும்ப அட்டை எண்ணை பதிவிட்டு விண்ணப்பத்தின் நிலையை அறிய முடியும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதேபோல் புதிய விண்ணப்பங்களையும் இதில் மேற்கொள்ள முடியும். ஆனால் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்களை சரிபார்க்க தொடங்கப்பட்ட இணையதளம் கடந்த 3 நாட்களாக இயங்காமல் இருப்பது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. 3 நாட்களாக இந்த இணைய பக்கத்தை திறந்தால்.. error காண்பிப்பதால் பெண்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இதில் உடனடியாக மாற்றங்களை செய்து kmut.gov.in பக்கத்தின் சர்வரை இயங்க வைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.

சில குறைகள்:

இந்த திட்டம் தொடர்பாக ஆங்காங்கே சில குறைகள் அரசின் கவனத்திற்கு வந்துள்ளன. மகளிரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட உரிமை தொகையை வங்கிக்கான சேவை கட்டணம், ஏற்கனவே வாங்கிய கடன் ஆகியவற்றுக்கு சில வங்கிகள் நேர் செய்து கொள்வதாக புகார்கள் வரப்பெற்றுள்ளன. இது மிகவும் வருந்தத்தக்க நிகழ்வாகும். இதுகுறித்து மாநில வங்கிகள் குழுமத்தின் கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்படும் உரிமைத் தொகையை வங்கிகள் பிடித்தம் செய்யக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் சில வங்கிகளில் இந்த அறிவுறுத்தல் பின்பற்றப்படவில்லை என்பது ஏற்கத்தக்கதல்ல. தமிழ்நாடு அரசு வழங்கும் மகளிர் உரிமைத் தொகையை வங்கிகள் தங்களது நிர்வாக செலவினங்களுக்கு நேர் செய்யக்கூடாது என்று மாநில அரசுக்கும் வங்கிகளுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

ஒப்பந்தங்களை மீறும் வங்கிகளின் வங்கிகளின் பரிவர்த்தனைகள் வேறு வங்கிகளுக்கு மாற்றப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாடு அரசு மகளிரின் நல்வாழ்வுக்காக வழங்கும் மகளிர் உரிமைத் தொகையை, வங்கிகள் தங்களது நிர்வாக காரணங்களுக்காக பிடித்தம் செய்யக் கூடாது என்பது குறித்து ஒன்றிய நிதி அமைச்சருக்கு கடிதம் எழுதப்படும்.

மகளிர் உரிமைத் தொகையில் பிடித்தம் செய்யப்பட்டிருந்தால் அது குறித்து புகார் அளிப்பதற்கு முதல்வரின் முகவரி உதவி மைய தொலைபேசி எண் 1100- ஐ அழைத்து புகார் அளிக்கலாம். மகளிர் அளிக்கப்படும் இப்புகார்கள் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்று அறிவித்து இருந்தார்.

வங்கிகளில் குவியும் பெண்கள்;

இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் உள்ள வங்கிகளில் பெண்கள் வரிசையாக குவிய தொடங்கி உள்ளனர். அதன்படி தங்களிடம் எடுக்கப்பட்ட பணத்தை திருப்பி கொடுக்கும்படி பெண்கள் பலர் வங்கியில் குவிந்து உள்ளனர். இன்னும் சிலர் தங்களிடம் உள்ள பணத்தை எடுக்க வங்கிக்கு வருகின்றனர்.

மேலும் சிலர் அதை வேறு கணக்கிற்கு மாற்ற வங்கிகளில் குவிய தொடங்கி உள்ளனர். இப்படி பல பெண்கள் பல காரணங்களுக்காக வங்கிகளில் குவிந்து வருகின்றனர். இதனால் வங்கிகளில் கடந்த 4-5 நாட்களாக கடுமையான கூட்டம் நிலவுவதாக கூறப்படுகிறது. இதனால் வங்கிகளில் தனியாக கவுண்டர் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. பெண்கள் தனியாக கவுண்டர் அமைப்பதே சரியாக இருக்கும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Related Post

தமிழ்நாட்டில் மீண்டும் உயரும் மின் கட்டணம்…? ஷாக்கில் பொதுமக்கள்..!

Posted by - June 6, 2023 0
தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு 9 மாதங்களே ஆகும் நிலையில், மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்த மின் வாரியம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த…

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவியை மீட்பதில் தாமதம் ஏன்? – காவல் ஆணையர் சரவண சுந்தர் விளக்கம்!

Posted by - November 4, 2025 0
கோவையில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவியை மீட்க 5 மணி நேரம் தாமதமானது ஏன் என்பது குறித்து மாநகரக் காவல் ஆணையர்  சரவணசுந்தர் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து …

வங்கிகளுக்கு இன்று முதல் 5 நாட்களுக்கு விடுமுறை

Posted by - January 13, 2024 0
சென்னை: தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை வெகுவிமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி பொங்கல் பண்டிகையானது வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று முதல் 5 நாட்களுக்கு…

ஆட்டோ, கால் டாக்சிகளின் அதிக கட்டண வசூல் – பொங்கலுக்கு ஊர் சென்று சென்னை திரும்பியவர்கள் அவதி

Posted by - January 19, 2024 0
சென்னை: பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக சொந்த ஊர் சென்றவர்கள் நேற்று சென்னை திரும்பினர். ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்கள் நகர எல்லையை அடைந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.…

சிவாஜி ராவ் டூ சூப்பர் ஸ்டார்.. தமிழகம் கொண்டாடும் ரஜினிகாந்த்.. பிறந்தநாள் ஸ்பெஷல்!

Posted by - December 12, 2022 0
Rajinikanth Birth Day: ரஜினிகாந்த் கேட்டை திறந்து வீட்டிற்குள் நுழையும் அந்த முதல் காட்சி தமிழ் திரையுலக ரசிகர்கள் மனதின் திறவுகோலாகவும் அமைந்தது. 73 வது வயதில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *