மின்சார நிலைக்கட்டண உயர்வை திரும்பப் பெறக்கோரி 20 ஆயிரம் சிறு-குறு தொழில் நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்தம்

203 0

ஈரோடு:

தமிழ்நாட்டில் அனைத்து தொழில்துறை சார்ந்த சிறு, குறு நிறுவனங்களும் மின் கட்டண சுமையிலிருந்து தங்களை மீட்க வலியுறுத்தி ஏற்கனவே 3 கட்டங்களாக போராட்டம் நடத்தியுள்ளன. தொழில்துறை மின்சார பயன்பாட்டில் கிலோவாட்டுக்கான கட்டணம் ரூ.35ல் இருந்து ரூ.154ஆக உயர்த்தப்பட்டது. மேலும் சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு பரபரப்புக் கால கட்டணம் (பீக் அவர்ஸ்) அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மின் கட்டண சுமையிலிருந்து சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் மீண்டு வர முடியாமல் கடுமையான நெருக்கடிக்கு ஆளாகியுள்ளதாக அதன் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

இதனால் தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் 430 சதவீதம் உயர்த்திய நிலைக்கட்டணத்தையும், பீக் அவர்ஸ் கட்டணத்தையும் திரும்ப பெற வேண்டும். 3பி மின் கட்டண முறையிலிருந்து 3ஏ1 கட்ட ண நடைமுறைக்கு மாற்றி சிறு, குறு நிறுவனங்களை காப்பாற்ற வேண்டும். சோலார் மேற்கூரை நெட்வோர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். மல்டி இயர் டேரிப்பை ( பல ஆண்டு கட்டணம்) உடனடியாக ரத்து செய்து, 2 ஆண்டுகளுக்கு மின் கட்டணத்தை உயர்த்துவதை தவிர்க்க வேண்டும்.

எல்டி கட்டண முறையில் மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு தனியாரிடம் மின்சாரம் கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 4ம் கட்டமாக இன்று (திங்கட்கிழமை) தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர் ஒரு நாள் உற்பத்தி நிறுத்தம் செய்வதாக அறிவித்திருந்தனர்.

அதன்படி ஈரோடு மாவட்டத்தில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் அதாவது ஆயில் மில், தேங்காய் நார் தொழிற்சாலை, ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள், காங்கிரீட் கற்கள் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவ னங்கள் இன்று உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இதன் காரணமாக சுமார் ரூ.500 கோடி அளவிலான உற்பத்தி மற்றும் வர்த்தகம் பாதிக்கப்படும் என அமைப்பின் நிர்வாகிகள் கூறினர். எங்கள் கோரிக்கையை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் இன்று ஒரு நாள் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Related Post

ஆயுர்வேதத்தின் படி தொப்புளில் இந்த எண்ணெய் வைப்பது உங்களுக்கு பல அற்புத நன்மைகளை கொடுக்குமாம்…!

Posted by - December 13, 2023 0
பழமையான இந்திய மருத்துவ முறையான ஆயுர்வேதம், நாபிகா மர்மா என்றும் அழைக்கப்படும் தொப்புளை பல உடல் செயல்பாடுகளுடன் இணைக்கப்பட்ட ஒரு முக்கிய இடமாக கருதுகிறது. தொப்புளில் எண்ணெய்…

ஆட்டோ, கால் டாக்சிகளின் அதிக கட்டண வசூல் – பொங்கலுக்கு ஊர் சென்று சென்னை திரும்பியவர்கள் அவதி

Posted by - January 19, 2024 0
சென்னை: பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக சொந்த ஊர் சென்றவர்கள் நேற்று சென்னை திரும்பினர். ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்கள் நகர எல்லையை அடைந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.…
aqwertyujkl

TVK VCK Alliance: சல்லிசல்லியாகும் திமுக கூட்டணி.! விசிக-வை கூட்டணிக்கு அழைத்த விஜய்.? வருவாரா திருமா.?

Posted by - May 6, 2026 0
தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க ஆதரவு கேட்டு ஏற்கனவே காங்., சிபிஐ கட்சிளுக்கு அழைப்பு விடுத்த விஜய், விசிக தலைவர் திருமாவளவனுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். இதனால், திமுக கூட்டணியில்…

அஜித், விஜய் குறித்து கேள்வி.. வடிவேலு சொன்ன பதில், உஷார் தான் போங்க

Posted by - January 11, 2025 0
வடிவேலு மதுரையில் இருந்து தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷங்களில் ஒன்று வைகை புயல் வடிவேலு. இன்றும் மீம்ஸ் மூலம் ஒவ்வொரு நாளும் நம்மை சிரிக்க வைத்து கொண்டு இருக்கிறார்.…

“ஏமாற்றம் இருக்காது; மாற்றம் இருக்கும்” – துணை முதல்வர் தொடர்பான கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் சூசகம்?

Posted by - September 24, 2024 0
திமுகவின் முப்பெரும் விழாவில் பேசிய எஸ்.எஸ். பழனி மாணிக்கம், “உதயநிதியை துணை முதலமைச்சராக்கும் காலம் வந்துவிட்டது. உங்களுக்குப் பிறகு கட்சியை வழிநடத்த ஒருவரை அடையாளம் காட்டுங்கள்’’ என…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *