லிஸ்டை ரெடி பண்ணுங்க.. விஜய் போட்ட ஆர்டர்.. திமுகவிற்கு எதிராக இதுதான் வியூகம்

139 0

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது சுற்றுப்பயணத்திற்கு முன்பு தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள பிரச்சினைகளை பட்டியல் எடுக்க கூறியுள்ளார்.

தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் பரபரப்பாகிக் கொண்டே இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்ற தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். மறுபுறம் ஆளுங்கட்சியான திமுகவும் சட்டமன்ற தேர்தலுக்கு தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தை நேற்று தொடங்கி மக்களை கவரும் யுக்தியில் அவர்கள் இறங்கியுள்ளனர்.

விஸ்வரூபம் எடுப்பாரா விஜய்?

இந்த நிலையில், இந்த இரு பெரும் கட்சிகளையும் எதிர்த்து அரசியல் களத்தில் குதித்திருப்பவர் நடிகர் விஜய். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை அவர் தொடங்கியது முதலே தமிழ்நாட்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கினார். கட்சி தொடங்கியது முதல் இன்று வரை அவர் மாநிலத்தில் ஆளுங்கட்சியான திமுக-வையும், மத்தியில் ஆளுங்கட்சியான பா.ஜ.க.வையும் மட்டுமே விமர்சித்து வருகிறார்.

மேலும், இந்தாண்டு இறுதிக்குள் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் எண்ணிக்கையை 2 கோடியாக உயர்த்த வேண்டும் என்றும் விஜய் கட்சியினருக்கு ஆணையிட்டுள்ளார். செப்டம்பரில் தனது அரசியல் சுற்றுப்பயணத்தை தொடங்கும் விஜய்., தான் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள ஒவ்வொரு தொகுதியிலும் மக்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகள் குறித்து பட்டியல் தயாரிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

தனது சுற்றுப்பயணத்தின்போது ஒவ்வொரு தொகுதி மக்கள் மத்தியிலும் அவர்கள் மேற்கொள்ளும் முக்கிய பிரச்சினைகள் குறித்து பரப்புரையில் பேச அவர் வியூகம் வகுத்துள்ளார். இதன்மூலம் ஆளுங்கட்சிக்கு எதிராக தனது பரப்புரையை பலப்படுத்த அவர் முடிவு செய்துள்ளார். விஜய்யின் இந்த உத்தரவிற்கு ஏற்ப ஒவ்வொரு மாவட்ட தவெக நிர்வாகிகளும், தங்களது மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள முக்கிய பிரச்சினைகளின் பட்டியலை தயார் செய்து வருகின்றனர்.

பூத் கமிட்டி:

ரசிகர்கள் பலத்தை மட்டுமே தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்த நடிகர் விஜய், கட்சியை அடிமட்டத்தில் இருந்தே வலுப்படுத்த நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு முழுவதும் தவெக-வின் பூத் கமிட்டியை வலுப்படுத்த அவர் உத்தரவிட்டுள்ளார்.

ஒவ்வொரு பூத்திலும் நிர்வாகிகள் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். ஏனென்றால், பூத் கமிட்டி என்பது ஒவ்வொரு கட்சிக்கும் மிக மிக முக்கியமான ஒன்றாகும். தமிழ்நாட்டில் திமுக மற்றும் அதிமுக-விற்கு மட்டுமே பூத் கமிட்டி வலுவாக உள்ளது. குறிப்பாக, ஆளுங்கட்சியான திமுக-விற்கு பூத் கமிட்டி மிகவும் வலுவாக உள்ளது. இதனால், அவர்களுக்கு நிகராக பூத் கமிட்டியை வலுப்படுத்த வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக – அதிமுக – நாம் தமிழர் – தவெக என்ற நான்கு முனைப் போட்டிகள் உருவாகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

தமிழக அரசியலில் புதிய திருப்புமுனை : சீமான் , திருமாவளவனுக்கு கமல்ஹாசன் வாழ்த்து..!!

Posted by - June 10, 2024 0
புதிய சின்னத்தோடு தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையிலும் தீரத்துடன் களம் கண்ட தம்பி சீமானின் நாம் தமிழர் கட்சி 8.19% வாக்குகளை எட்டிப் பிடித்து மாநிலக் கட்சியாக…

இன்று பள்ளிகள் திறப்பு.. போராட்ட களத்தில் இடைநிலை ஆசியர்கள்

Posted by - January 5, 2026 0
அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், இடைநிலை ஆசிரியர்கள் மாவட்ட தலைநகரங்களில் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். TN Govt Teachers Protest: சம வேலைக்கு…

அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர்கள் போராட்டம் வெற்றி! மீண்டும் பணி! அமைச்சர் அதிரடி!

Posted by - February 26, 2026 0
அண்ணா பல்கலை. தற்காலிக உதவி பேராசிரியர்களுக்கு மீண்டும் பணி; அதிரடியாக அறிவித்த அமைச்சர் கடந்த ஒரு மாத காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அண்ணா பல்கலை. தற்காலிக…

விஜய்க்கு எதிராக ரஜினியை களமிறக்கும் இபிஎஸ் & கோ.. அமைதி காக்கும் திமுக!

Posted by - March 17, 2026 0
ரஜினிகாந்த் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி கையில் எடுத்துள்ளது. அந்த அணியில் இடம் பெற்றுள்ள எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன், அண்ணாமலை உள்ளிட்டோர் கண்டனம்…

“திமுக கோட்டை எல்லாம் தூள் தூளாயிடுச்சு, அது இனிமே எங்க கோட்டை“ – டெல்டா குறித்து இபிஎஸ் பேச்சு

Posted by - July 23, 2025 0
டெல்டா மாவட்டங்கள் இனி திமுகவின் கோட்டை அல்ல, அந்த கோட்டை எல்லாம் தூள் தூளாக நொறுக்கப்பட்டுவிட்டதாக தஞ்சையில் பேசிய எடப்பாடி பழனிசாமி விமர்சனம். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *