வெயில் நேரங்களில் வெளியில் செல்ல வேண்டாம் : எச்சரிக்கை கொடுத்த வானிலை மையம்..!

211 0

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று வெயில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேரடி வெயிலில் செல்வது அசௌகரித்தை ஏற்படுத்தலாம் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், இன்று தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட அறிக்கையில்,  தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கழிக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிற. இதன் காரணமாக, ஏப்ரல் 22 முதல் 25 வரை தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில்  ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏப்ரல் 22-ல் (இன்று) தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் இயல்பை விட 2-4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என  கணிக்கப்பட்டுள்ளது.சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும்அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் எனவும் என வானிலை மையம்  கணித்துள்ளது.

குறிப்பு :

அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது நேரடி வெயிலில் செல்வது முதியவர்கள், குழந்தைகள் மற்றும் உடல்நலப் பாதிப்பு உள்ளவர்களுக்கு வெப்ப அழுத்தம் காரணமாக சோர்வு மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தலாம் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Related Post

காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் பிப்.2-ம் தேதி வரை கனமழை… உடனடியாக கரைக்கு திரும்புங்கள்… வானிலை மையம் அலெர்

Posted by - February 1, 2023 0
#News | #NewsLive | #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN…

தமிழகத்தில் 500 அரசுப் பள்ளிகள் தனியாருக்கு தத்துக் கொடுக்கும் முயற்சி.. மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்

Posted by - January 2, 2025 0
அரசுப் பள்ளிகளை தனியார் பள்ளிகளோடு இணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக 500 பள்ளிகளை தத்துக் கொடுக்கும் நடவடிக்கையினை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும். “கல்வி கொடுக்க…

ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் விமான டிக்கெட் எடுத்தால் சேவை கட்டணம் கிடையாது

Posted by - September 25, 2023 0
சென்னை: இந்தியன் ரெயில்வே சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் (ஐ.ஆர்.சி.டி.சி) அடித்தள நாள் மற்றும் உலக சுற்றுலா தினத்தையொட்டி விமான டிக்கெட் முன்பதிவு செய்தால் 3 நாட்களுக்கு சலுகை…

பழைய வாட்டர் பாட்டில் கொள்முதல்…ஒரு தள்ளுவண்டி மட்டும் இருந்தால்…தினசரி ரூ 1000 வரை வருமானம் பார்க்கலாம்…!

Posted by - July 2, 2025 0
      #businessidea #business #businessideas #entrepreneur #entrepreneurship #businessowner #businessmotivation #startup #businesstips #businessmindset #motivation #success #smallbusiness #businessopportunity #businessadvice #businessplans #businesshelp…

வலுவிழந்த மாண்டஸ் புயல்… கரையை கடக்கும் போது சீறுமா..?

Posted by - December 9, 2022 0
Cyclone Mandous | வங்கக் கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் தீவிர புயலிலிருந்து புயலாக வலுவிழந்து உள்ளது. மாண்டஸ் தீவிர புயல் இன்று காலை வலுவிழந்து தற்போது சென்னையில் தெற்கு கிழக்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *