அம்பேத்கரை அவமதித்த காங்கிரஸ்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

268 0

மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி,

அம்பேத்கரின் கொள்கையை உண்மையில் அமல்படுத்தி உள்ளோம். காங்கிரஸ் கட்சி அவருக்கு கொடுக்காத மரியாதையை நாங்கள் கொடுத்தோம். அவரை அவமதிக்கும் வகையிலேயே காங்கிரஸ் போன்ற கட்சிகள் செயல்பட்டு உள்ளன. அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சாசனம் காரணமாகவே, ஏழைத்தாயின் மகனாகிய மோடி, 3வது முறை உங்களுக்கு சேவை செய்ய உங்களின் ஆசி வேண்டி வந்துள்ளேன். ஆதிவாசிகளின் பங்களிப்பை காங்கிரஸ் எப்போதும் அங்கீகரித்தது கிடையாது. பழங்குடியினரை பாஜக அரசு பெருமைப்படுத்தி உள்ளது.

காங்கிரஸ் எப்போதும்  டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரை அவமதித்தது, நாங்கள் அவரை கவுரவித்துள்ளோம் என்று பிரதமர் மோடி கூறினார்.

மோடி மீண்டும் 3வது முறையாக பிரதமர் ஆனால் நாடு எரியும் என காங்கிரஸ் அரச குடும்பம் மிரட்டுகிறது. 2014, 19 ல் இதேபோல் தான் செய்தனர். அப்படி எதுவும் நடந்ததா? இன்று நாட்டில் நெருப்பு இல்லை. அவர்கள் உள்ளங்களில் தான் பொறாமை இருக்கிறது. பிரிவினை மற்றும் அச்சுறுத்தல் அரசியலில் காங்கிரஸ் கட்சி நம்பிக்கை கொண்டு உள்ளது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுகளை அதிகமாக கலைத்தது காங்கிரஸ் தான்.

வரலாற்று உண்மைகளை திரித்ததும் அக்கட்சி தான். உலகத்தின் சூழ்நிலையை நீங்கள் அனைவரும் பார்த்து கொண்டு உள்ளீர்கள். உலகில் உள்ள அனைவரும் அச்சத்தின் நிழலில் வாழ்கின்றனர். அடுத்து என்ன நடக்குமோ, என்ன பிரச்னை வருமோ என்று நடுங்கிக் கொண்டு உள்ளனர்.

அத்தகைய உலகத்திற்கு வலிமையான மற்றும் சக்தியான இந்தியா தேவைப்படுகிறது. இந்தியாவை நிலைநிறுத்த வலிமையான அரசு தேவை. உங்களின் ஓட்டே வலிமையான இந்தியாவை கட்டமைக்கும். இண்டி கூட்டணி கட்சிகள், அவர்களின் தேர்தல் அறிக்கை காரணமாக குழம்பி போயுள்ளன. காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இந்தியாவை திவாலாக்கி விடும்.நாட்டை பாதுகாக்க அணு ஆயுதங்கள் இருக்க வேண்டும். இல்லையெனில் பாதுகாக்க முடியாது. ஆனால், அதனை ஒழித்துக்கட்ட காங்கிரஸ் முயற்சி செய்கிறது. நாட்டை அபாய நிலையில் தள்ள அக்கட்சி விரும்புகிறது. நாட்டை எந்த திசையில் இயக்க வேண்டும் என முடிவெடுக்க முடியாமல் ‛ இண்டி’ கூட்டணி குழம்பி வருகிறது. எனது 10 ஆண்டு கால ஆட்சி வெறும் டிரைலர் தான் எனத் தெரிவித்தார்.

Related Post

பள்ளி மாணவியை பெட்ரோல் ஊற்றி எரித்த சைக்கோ இளைஞர்! ஒருதலை காதலால் நேர்ந்த கொடூரம்

Posted by - December 9, 2024 0
பதினோராம் வகுப்பு படித்துவந்த மாணவியை ஒருதலையாய் காதலித்த நபர் பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்றிருக்கிறார். ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டம், நந்திகொட்கூர் பகுதியைச் சேர்ந்தவர் ராகவேந்திரா. இவருக்கு…

பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு! – மோடி கேரண்டி என்ற பெயரில் தேர்தல் அறிக்கை!

Posted by - April 14, 2024 0
மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் முதல் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. மொத்தம் 543 தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம்…

சிதைந்த உடல்கள்… ரத்த கறையில் தண்டவாளங்கள்… பதற வைக்கும் விபத்துக்களம்

Posted by - June 3, 2023 0
ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே நேற்று இரவு 3 ரெயில்கள் விபத்துக்குள்ளானது. இதில், இதுவரை 205க்கும மேற்பட்டோரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 900க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி…

கேரளாவில் கனமழை- 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

Posted by - July 25, 2023 0
திருவனந்தபுரம்: கேரளாவில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு தாமதமாக தொடங்கியபோதிலும், சில வாரங்களுக்கு முன்பு கனமழை பெய்தது. பின்பு ஒரு வார இடைவெளிக்கு பிறகு மீண்டும் மழை…

காளஹஸ்தியில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம்

Posted by - February 20, 2023 0
திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 7-வது நாளான நேற்று காலை தேரோட்டம் நடந்தது. இதனையொட்டி கோவில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *