“அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு மருந்து” – விவகாரத்துக்கு விண்ணப்பித்த பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் போட்ட முதல் பதிவு

252 0

ஐஸ்வர்யா தனுஷ் அவருடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

நடிகர் தனுஷும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தும் விவகரத்து கோரி விண்ணப்பித்துள்ள நிலையில், ஐஸ்வர்யா தனுஷ் அவருடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பரஸ்பர விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்தனர். நடிகர் தனுஷும், நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் கடந்த 2004 ஆம் ஆண்டும் நவம்பர் 18 தேதி காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.இவர்கள் இருவருக்கும் இரண்டு மகன்கள் உள்ள நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இது குறித்து அவர்களே தங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் அறிவித்தனர். பிரிந்து வாழ்ந்து வந்த காலகட்டத்தில் மீண்டும் இருவரும் இணைவார்கள் என ரசிகர்கள் அனைவரும் எதிர்பாத்திருந்த நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், உலக சுகாதார தினத்தை முன்னிட்டு இன்ஸ்டாகிராமில் போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அத்துடன் ஆரோக்கியமான உடல் + மகிழ்ச்சியான மனம் + மனித இதயம் = அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு மந்திர மருந்து என்ற கேப்சனுடன் ஃபிட்னஸ் தொடர்பான கார்டு ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

அதில் தினமும் 9 ஆயிரம் ஸ்டெப்ஸ் நடக்க வேண்டும், 8 மணிநேரம் தூங்க வேண்டும், 7 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும், 6 நிமிடம் தியானம், 5 நேரங்களில் பழங்கள், காய்கறிகள் சாப்பிட வேண்டும், 4 பிரேக் எடுக்க வேண்டும், 3 முறை ஆரோக்கியமான உணவு, நொறுக்கு தீனிகள் சாப்பிட வேண்டும், தூங்கும் முன்பு 2 மணிநேரம் செல்போன் பயன்படுத்தக் கூடாது, 1 முழு உடற்பயிற்சி செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதைப் பார்த்த ரசிகர்கள் மீண்டும் அவர்கள் இணைவது தொடர்பாக ஏதேனும் பதிவிட்டிருப்பார் என எண்ணியதாகவும் அவர்களது பிரிவு கவலை அளிப்பதாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Related Post

நடைபயிற்சி சென்ற பெண்ணை கட்டையால் தாக்கி தரதரவென இழுத்து சென்ற கொள்ளையன்

Posted by - March 16, 2023 0
நடைப்பயிற்சி சென்ற பெண் பேராசிரியரை தாக்கி, அவரின் இருசக்கர வாகனத்தை திருடி சென்ற நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள…

அதிகாலை வந்த பரபர அலர்ட்.. அடுத்த 3 மணி நேரம் சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கொட்ட போகுது மழை!

Posted by - December 25, 2023 0
சென்னை: கிறிஸ்துமஸ் நாளான இன்று அடுத்த 3 மணி நேரத்திற்குச் சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தென்கிழக்கு பருவமழை…

மகனும், மருமகளும் சொத்தையெல்லாம் வாங்கிட்டு அடிச்சு வெளிய அனுப்பிட்டாங்க.. கதறி அழுத மூதாட்டி

Posted by - February 28, 2023 0
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி ஒருவர், தன் மகனும், மருமகளும் சொத்தையெல்லாம் வாங்கிட்டு அடிச்சு வெளிய அனுப்பிட்டாங்க என்று கதறி அழுதார். தமிழ்நாட்டில்…

லாக்கப் மரணம்; விஜய்- முதலமைச்சர் என்று குறிப்பிடாமல் உள்துறை அமைச்சர் என்றே மு.க.ஸ்டாலினை குறிப்பிட்டுள்ளார்.

Posted by - July 1, 2025 0
சிவகங்கை காவல்துறை மரணத்தில் திமுக அரசை அராஜக அரசு என்றும், சிறப்பு விசாரணைக்குழு விசாரணை தேவை என்றும் தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் காவல்துறை…

கடந்த நிதியாண்டில் ரூ.156 கோடி லாபம் ஈட்டி சென்னை துறைமுகம் சாதனை

Posted by - August 17, 2023 0
சென்னை: கடந்த நிதியாண்டில் சென்னை துறைமுகம் ரூ.156 கோடி லாபம் ஈட்டி படைத்துள்ளது என்று துறைமுக தலைவர் சுனில் பாலிவால் தெரிவித்து உள்ளார். சுதந்திர தின விழாவை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *