ஆந்திராவில் 30 ஆயிரம் பெண்கள் மாயம் என பேச்சு- பவன் கல்யாணுக்கு மாநில மகளிர் ஆணையம் நோட்டீஸ்

197 0

திருப்பதி:

ஆந்திர மாநிலம் ஏலூரில் ஜனசேனா கட்சித் தலைவர் நடிகர் பவன் கல்யாண் யாத்திரை சென்றார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில்:- ஆந்திராவில் கடந்த 4 ஆண்டுகளில் 30 ஆயிரம் பெண்கள் காணாமல் போய் உள்ளனர். அவர்களில் 12 ஆயிரம் பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 18000 பெண்களின் நிலைமை என்னவென்று தெரியவில்லை. இது குறித்து முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஏன் ஆய்வு கூட்டம் நடத்தவில்லை. வீட்டில் உள்ள பெண்கள் காதலித்து வருகிறார்களா அல்லது விதவைப் பெண்களா என்ற விவரங்கள் சமூக விரோதிகளின் கைகளுக்கு வழங்கப்படுகிறது .We need to find our missing Indians - The Sunday Guardian Live

விவரங்கள் சேகரிக்கப்பட்ட பிறகு பெண்களை காதல் வலையில் விழ வைத்து கடத்திச் செல்வது போன்ற பெண்களுக்கு எதிரான செயல்கள் நடக்கிறது என குற்றம் சாட்டினார். இது ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பவன் கல்யாண் பேச்சுக்கு விளக்கம் கேட்டு மாநில மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இதுகுறித்து மாநில மகளிர் ஆணைய தலைவி வாசி ரெட்டி பத்மா கூறியதாவது:- ஆந்திராவில் 30 ஆயிரம் பெண்கள் காணாமல் போனதாக ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் பேசி உள்ளார். அவருக்கு யார் இந்த புள்ளி விவரங்களை வழங்கியது. எந்த மத்திய புலனாய்வு அதிகாரி இவருக்கு சொன்னார்.

நடிகர் பவன் கல்யாண் போன்றவர்கள் பள்ளி காதல், கல்லூரி காதல் என சினிமாவில் நடிக்கிறார்கள். அதனால்தான் கலாச்சார சீரழிவு ஏற்படுகிறது. 18 வயது பெண்கள் காணாமல் போவதற்கு இவர்களை போன்றவர்கள் நடித்த படங்கள் தான் காரணம். பவுன் கல்யாண் பேசிய புள்ளி விவரத்திற்கு ஆதாரங்களை வழங்க வேண்டும். இல்லை என்றால் பெண்களிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். அரசியல் ஆதாயத்துக்காக பெண்களிடையே பீதியை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். 10 நாட்களுக்குள் ஆதாரம் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Post

அவசரப்பட்டு வேற போன் வாங்கிடாதீங்க.. 50எம்பி கேமரா.. டால்பி அட்மாஸ்.. வருகிறது Moto போன்.. எந்த மாடல்?

Posted by - December 9, 2024 0
டிசம்பர் 10-ம் தேதி இந்தியாவில் மோட்டோ ஜி35 5ஜி (Moto G35 5G) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது மோட்டோரோலா நிறுவனம். இந்த மோட்டோ ஜி35 5ஜி…

90 நாடுகளில் 8,330 இந்தியர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்: மத்திய அரசு தகவல்

Posted by - July 29, 2023 0
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் வெளிநாடு சிறைகளில் வாடும் இந்தியர்களின் எண்ணிக்கை குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு வெளியுறவுத்துறை இணை மந்திரி முரளீதரன் எழுத்துப்பூர்வமாக…

ஜெயலலிதா என்கிற ஆளுமையின் அழியாத நினைவுகள்…

Posted by - December 5, 2024 0
தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளைச் சரளமாகப் பேசக்கூடிய பன்மொழி வித்தகராக இருந்தார் ஜெயலலிதா. நடிகையாக இருந்து அரசியல்வாதியானவரும், ஆறு முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக…

Jio-க்கு இனி சிக்கல்.. இந்தியாவில் தனது கடையை விரிக்கும் டாப் பணக்காரர் எலான் மஸ்க்

Posted by - November 9, 2024 0
இந்தியாவின் அம்பானியின் ஜியோ நெட்வொர்க் தான் லீடிங்கில் உள்ள நிலையில் அம்மானிக்குப் போட்டியாக எலான் மஸ்க் இந்திய மார்க்கெட்டுக்கு வரவிருப்பதாக தகவல் வெளியாகிறது. இந்தியா மிகப்பெரிய மக்கள்…

வங்கியில் லோன் வாங்கப்போறீங்களா..? அப்ப இந்த விஷயங்களை எல்லாம் தெரிஞ்சிவச்சிக்கோங்க!

Posted by - October 29, 2024 0
லோன் வாங்கும்போது, நீங்கள் பல்வேறு விஷயங்களில் கவனம் செலுத்துவது அவசியம். இல்லை என்றால் கடன் வலைக்குள் மாட்டிக்கொண்டு தவிக்க வேண்டி இருக்கும். அந்த வகையில் நீங்கள் கருத்தில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *