”உக்ரைனில் நடப்பது மோடியின் போர், திமிர் பிடித்த இந்தியர்கள்” – அமெரிக்காவின் அடாவடி பேச்சு

147 0

USA India Tariff: உக்ரைனில் நடைபெறுவது மோடியின் போர் என, அமெரிக்க அதிபர் மாளிகையின் ஆலோசகர் பீட்டர் நவேரா விமர்சித்துள்ளார்.

USA India Tariff:  ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால், இந்தியா மீதான வரியை 25% வரை குறைப்போம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

”மோடியின் போர்” என குற்றச்சாட்டு

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அதிகாரப்பூர்வ அலுவலகமான வெள்ளை மாளிகையின் ஆலோசகர், பீட்டர் நவேரா தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அப்போது, ”உக்ரைனில் நடைபெறும் மோதல் மோடியின் போர். இந்தியா குறைந்த விலையில் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெயை வாங்குவது அந்நாட்டின் ஆக்கிரமிப்பை தூண்டிவிடுவதோடு, அமெரிக்க வரி செலுத்துவோர் மீது சுமையை அதிகரித்துள்ளது. எங்களது வலியுறுத்தலை ஏற்று ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால், இந்தியா மீதான வரியில் 25 சதவிகிதத்தை குறைப்போம்” என நவேரா விளக்கமளித்துள்ளார்.

”அமைதிக்கான பாதை..”

மேலும், “அமைதிக்கான பாதை ஓரளவு இந்தியா வழியாக செல்கிறது. இது மிகவும் எளிதானது. ரஷ்யாவின் எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டு, போர் இயந்திரத்திற்கு உணவளிப்பதை நிறுத்தினால், இந்தியா நாளையே 25% வரி தள்ளுபடியை பெறலாம். எனக்கு குழப்பமாக இருக்கிறது. ஏனென்றால் மோடி ஒரு சிறந்த தலைவர். இது முதிர்ச்சியடைந்த மக்களால் நடத்தப்படும் முதிர்ச்சியடைந்த ஜனநாயகம். ஆனாலும் அமெரிக்காவின் வலியுறுத்தலை அவர்கள் ஏற்கவில்லை” என விளக்கமலித்துள்ளார்.

”திமிர் பிடித்த இந்தியர்கள்”

வரி விதிப்பு விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்த ரக்தியை நவேரா வெளிப்படுத்தினார், “இந்தியர்கள் இந்த விவகாரத்தில் மிகவும் திமிர்பிடித்தவர்களாக இருப்பது எனக்கு கவலை அளிக்கிறது. அவர்கள், ‘ எங்களிடம் அதிக வரிகள் இல்லை. இது எங்கள் இறையாண்மை. நாங்கள் விரும்பும் எவரிடமிருந்தும் எண்ணெய் வாங்கலாம்’ என்று கூறுகிறார்கள். இந்தியா தள்ளுபடி விலையில் எண்ணெய் வாங்குவதன் மூலம், தனக்குக் கிடைக்கும் பணத்தை ரஷ்யா அதன் போர் இயந்திரத்திற்கு நிதியளிக்கிறது. உக்ரேனியர்களைக் கொல்கிறது. இந்தியாவின் செயலால் அமெரிக்காவில் உள்ள அனைவரும் பாதிப்பைச் சந்திக்கிறார்கள். மோடியின் மோரால் அமெரிக்கா வணிகம், நுகர்வோர் மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய பிரிவுகளில் அமெரிக்கா பெரும் இழப்பைச் சந்திக்கிறது” என நவேரா குற்றம்சாட்டியுள்ளார்.

மத்திய அரசுக்கு கோரிக்கை

கடந்த வாரம் பேசுகையில், ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில் வாங்கும் கச்சா எண்ணெய் மூலம், இந்திய சுத்திகரிப்பு துறை பெரும் லாபம் பெறுவதாக நவேரா குற்றம்சாட்டி இருந்தார். இந்நிலையில், உக்ரைன் மோதலையே மோடியின் போர் என குறிப்பிட்டுள்ளார். இந்தியர்கள் திமிர் பிடித்தவர்கள் என குறிப்பிட்டதோடு, தங்கள் பேச்சை கேட்டு ரஷ்யாவுடனான வர்த்தகத்தை நிறுத்தினால் மட்டுமே வரி குறைப்பு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப் அறிவித்த 50 சதவிகித வரியானது, நேற்று நள்ளிரவு முதல் இந்திய பொருட்கள் மீது அமலுக்கு வந்துள்ளது. இதனால், உள்நாட்டு ஏற்றுமதியாளர்கள் கடும் பின்னடைவைச் சந்திப்பார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. இதற்கான மாற்று வழியை ஏற்படுத்த வேண்டும் என்பதே, மத்திய அரசிடம் வணிகர்கள் தற்போது முன்வைக்கும் கோரிக்கையாக உள்ளது.

Related Post

மோடி என்னை விட வல்லவர்… புகழ்ந்து தள்ளிய ட்ரம்ப்… ஆனா ஒரு ஆப்பும் வச்சுட்டார்.!!

Posted by - February 14, 2025 0
இந்திய பிரதமர் மோடி தன்னை விட வல்லவர் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார். ஆனாலும் ஒரு செக்கும் வைத்துள்ளார். அது என்னவென்று பார்க்கலாம். அமெரிக்காவிற்கு…

இந்தியா ஸ்டாப் பண்ணிக்கனும்.. ரஷ்யாவால் வந்த வினை, 100% வரி போடுவேன் என எச்சரிக்கை

Posted by - July 16, 2025 0
இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 100 சதவிகித வரி விதிக்கப்படும் என, நாட்டோ அமைப்பின் பொதுச்செயலாளர் எச்சரித்துள்ளார். ரஷ்யா உடனான வர்த்தகத்தை நிறுத்த இந்தியா உள்ளிட்ட நாடுகளை, நாட்டோ…

”திரும்ப திரும்ப அடிச்ச இந்தியா” கதிகலங்கி அமெரிக்காவிடம் சரணடைந்த பாக்., துணை பிரதமர் ஒப்புதல்

Posted by - June 20, 2025 0
இந்தியாவிடம் தாக்குதலை நிறுத்த கோரிக்கை விடுத்தது ஏன்? என்பது குறித்து பாகிஸ்தான் துணை பிரதமர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. ஆப்ரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானின் விமானப்படை…

இந்தியாவின் இருமுனை தாக்குதல் – ஒருபக்கம் ஆயுதம், மறுபக்கம் தண்ணீரா.?

Posted by - May 10, 2025 0
இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், பாகிஸ்தான் மீது இருமுனை தாக்குதலாக, சலால் அணையிலிருந்து தண்ணீரை திறந்துள்ளது இந்தியா. இந்தியா –…

சிம் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி.. வருகிறது E-Sim.. ஆண்ட்ராய்டு போன் வைத்து உள்ளவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

Posted by - January 19, 2023 0
Android 13 | இவை சாத்தியமானால், நிறுவனம் தனது செயல்பாட்டில் துரிதமாக எந்த தடை மற்றும் தாமதமின்றி செயல்பட வேண்டும். இதற்கு ஆப்பிள் நிறுவனமே மிகப்பெரிய உதாரணம்!…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *