கங்குவா ரிலீஸ்… புதிய தேதி இதுதான்… வெளியானது அதிகாரபூர்வ அப்டேட்!

311 0

படத்தின் ட்ரைலரைப் பார்த்து மிரண்டு போன ரசிகர்கள் ‘கங்குவா’ படத்தின் ரிலீசுக்காக உச்சகட்ட எதிர்பார்ப்பில் காத்திருந்த நிலையில், படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டது.

நடிகர் சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கங்குவா’ திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப்போயுள்ளது. படக்குழு புதிய ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கங்குவா’. வரலாற்றுப் பின்னணியில் பிரம்மாண்ட படைப்பாக உருவாகியுள்ள ‘கங்குவா’வில், இதுவரை ஏற்று நடித்திராத முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ளார். பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள ‘கங்குவா’ திரைப்படம், சர்வதேச அளவில் ஒரே நேரத்தில் 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. மேலும் சூர்யா 10 விதமான கெட்டப்புகளில் நடித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவுடன் பிரபல பாலிவுட் நட்சத்திரங்கள் திஷா பதானி மற்றும் நடிகர் பாபி தியோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் போஸ்டர், டீசர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், சில மாதங்களுக்கு முன் ‘கங்குவா’வின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களை மிரளவைத்தது.படத்தின் ட்ரைலரைப் பார்த்து மிரண்டு போன ரசிகர்கள் ‘கங்குவா’ படத்தின் ரிலீசுக்காக உச்சகட்ட எதிர்பார்ப்பில் காத்திருந்த நிலையில், படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டது.

ஆனால், ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘வேட்டையன்’ திரைப்படம் அதே அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாவது உறுதியான நிலையில், ‘மெய்யழகன்’ பட இசை வெளியீட்டு விழாவில் ‘கங்குவா’ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போவதை சூர்யா மற்றும் ஞானவேல் ராஜா உறுதிசெய்தனர்.

இந்த நிலையில், படம் எப்போதுதான் ரிலீஸ் ஆகும் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு தற்போது படக்குழு ஒரு முக்கிய அப்டேட்டை கொடுத்துள்ளது.ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் புரோமோ வீடியோவுடன் ‘கங்குவா’ ரிலீஸ் தேதியையும் அறிவித்துள்ளது. அதன்படி, ‘கங்குவா’ திரைப்படம் நவம்பர் 14ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

‘லியோ’ படத்தின் ஒருவார வசூல் என்ன தெரியுமா?

Posted by - October 27, 2023 0
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய்…

பாண்டிச்சேரியில் உல்லாசம், நயன்தாரா தனுஷ் விவகாரம்.. தனுஷ் அப்பா என்ன சொன்னார் தெரியுமா?

Posted by - November 18, 2024 0
நயன்தாரா தனுஷ் இடையேயான கொடுக்கல், வாங்கல் பிரச்சனை தான் இன்று சமூக வலைதளங்களில் பல கிரியேட்டர்களுக்கு கன்டென்ட் ஆக சிக்கியுள்ளது. இதை பற்றி, நாட்டிற்கு ரொம்ப முக்கியமான…

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இந்த வாரம் பிஸ்தா!

Posted by - December 17, 2022 0
கும்பகோணத்தில் உள்ள கிராமப்புற சூழலை அடிப்படையாகக் கொண்ட இத்திரைப்படம் ஃபன் மற்றும் நகைச்சுவையாக இருக்கும். உலக தொலைக்காட்சியில் முதல் முறையாக ஃபன் கலந்த நகைச்சுவை திரைப்படமான பிஸ்தா…

விரைவில் பையா 2 படத்தை தொடங்கப்போகும் இயக்குனர் லிங்குசாமி- கார்த்திக்கு பதில் இவரா?

Posted by - November 16, 2023 0
பையா படம் லிங்குசாமி இயக்கத்தில் 2010ம் ஆண்டு கார்த்தி-தமன்னா முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்த திரைப்படம் பையா. தன்னை கவர்ந்த பெண் ஒரு இக்கட்டில் சிக்க, அவரை காப்பாற்றுவதற்காக…

ரீ என்ட்ரியில் மாஸ் காட்டும் பிரசாந்த்…..அந்தகன் படம் ஒரு திருப்புமுனையாக அமைந்திருக்கிறது.

Posted by - August 12, 2024 0
விஜய், அஜித் போன்ற நடிகர்களுக்கு இப்போது ரசிகர் கூட்டம் அதிகமாக இருந்தாலும் ஒரு காலத்தில் இவர்களை காட்டிலும் கொடி கட்டி பறந்தவர் நடிகர் பிரசாந்த். அவருடைய சொந்த பிரச்சினை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *