bharathiraja

என் இனிய தமிழ் மக்களே… உங்கள் பாசத்துக்குரிய பாரதிராஜா!

91 0

இயக்குநர் பார​தி​ராஜா​வின் இயற்​பெயர் சின்​ன​சாமி. தேனி மாவட்​டம் அல்​லி நகரத்​தில் கடந்த 1941-ம் ஆண்டு பெரிய மாயத்​தேவர், மீனாட்சி அம்​மாள் என்​கிற கருத்​தம்மா ஆகியோ​ருக்கு 5 வது குழந்​தை​யாக பிறந்​தவர், பார​தி​ராஜா. சுகா​தாரா ஆய்​வாள​ராக பணி​யாற்​றிய இவர் சினிமா ஆசை காரண​மாக, வேலையை விட்​டுட்டு சென்னை வந்​தார்.

இயக்​குநர் பி. புல்​லை​யா​விடம் உதவி இயக்​குந​ராக சேர்ந்​தார். தொடர்ந்​து, புட்​டண்ணா கனகலிடம் பணிபுரிந்​தார். பின்​னர் எம்.கிருஷ்ணன் நாயர், அவி​னாசி மணி, ஏ.ஜெகந்​நாதன் ஆகியோரிடம் உதவி இயக்​குந​ராகப் பணி​யாற்​றி​னார்.

தமிழ் சினி​மா​வில் ‘கல்ட்’

1977-ம் ஆண்டு ‘பதி​னாறு வயதினிலே’ என்ற படம் மூலம் இயக்​குந​ராக அறி​முக​மா​னார். கமல்​ஹாசன், ரஜினி​காந்த், ஸ்ரீதே​வி, காந்​தி​ம​தி, கவுண்​டமணி உள்பட பலர் இதில் நடித்​தனர்.

இந்​தப் படம் அப்​போதைய வழக்​க​மான திரைப்​படப் பாணி​களை உடைத்​து, கிராமத்து வாசனையை, அதே புழுதி மண்​ணோடு பேசிய படமாக வெளி​யாகி பெரும் வெற்றி பெற்​றது.

சப்​பாணி​யாக கமலும் பரட்​டை​யாக ரஜினி​யும் மயிலு​வாக ஸ்ரீதே​வி​யும் வாழ்ந்​திருந்​தனர். இப்​படம் மூலம் ஸ்டூடியோக்​களில் அடைபட்டு கிடந்த சினி​மாவை தென்​மாவட்​டக் கிராமங்​களுக்​குக் கொண்டு சென்று பெரு​மைச் சேர்த்​தார் பாரதிராஜா.

தமிழ் மண்​ணின் வாழ்க்​கையை அதன் இயல்​போடு பேசிய ‘16 வயதினிலே’, தமிழ் சினி​மா​வில் ‘கல்ட்’ அந்​தஸ்​தைப் பெற்​றதுடன் இன்​று​வரை மைல்​கல்​லாகக் கருதப்​படு​கிறது.

சிவப்பு ரோஜாக்​கள்

இதையடுத்து பார​தி​ராஜா இயக்​கிய திரைப்​படம் ‘கிழக்கே போகும் ரயில்’ (1977). இதில் சுதாகரும் ராதி​கா​வும் அறி​முக​மா​னார்​கள். கிராமத்​துக் காதலை, அதன் வாழ்க்​கை​யை, யதார்த்​தங்​களோடு பேசிய இப்​படம் சூப்​பர் ஹிட் வெற்​றியைப் பெற்​றது.

இந்​தப் படங்​களின் வெற்​றி, பார​தி​ராஜாவுக்கு கிராமத்து கதைகளைத்​தான் இயக்​கத்​தெரி​யும் என்ற விமர்​சனத்​தைக் கொடுத்​தன. அதை மாற்ற வேண்​டும் என்று அவர் இயக்​கிய திரைப்​படம், ‘சிவப்பு ரோஜாக்​கள்’.

மேற்​கத்​திய ஸ்டைலில் பெண்​களை வெறுக்​கின்ற மனநலம் பாதிக்​கப்​பட்ட ஓர் இளைஞனின் கதை​யாக இதை இயக்​கி​னார். கமல்​ஹாசன், ஸ்ரீதேவி நடித்த இப்​பட​மும் வெற்றி பெற்​றது.

தொடர்ந்​து, ‘பு​திய வார்ப்​பு​கள்’ (1979), ‘நிறம் மாறாத பூக்​கள்’ (1979), ‘நிழல்​கள்’ (1980), ‘டிக் டிக் டிக்’ (1981), ‘காதல் ஓவி​யம்’ (1981), ‘வாலிபமே வா வா’ (1982) என வெவ்​வேறு ஜானர் திரைப்​படங்​களை அவர் இயக்​கி​னார்.

1980-களில் வெளிவந்த ‘அலைகள் ஓய்​வ​தில்​லை’, ‘மண் வாசனை’ (1982), புது​மைப்​பெண் (1984), ‘ஒரு கைதி​யின் டைரி’ (1984), ‘முதல் மரி​யாதை’ (1985), ‘கடலோர கவிதைகள்’ (1986) என வலு​வான திரைக்​கதை​யுடன் அவர் இயக்​கிய ஒவ்​வொரு திரைப்​பட​மும் இப்​போதும் பேசப்​படு​கின்​றன.

சாதிய பாகு​பாடு குறித்து ஆழமாகப் பேசி​யத் திரைப்​படம், ‘வேதம் புதிது’ (1987). இதில் பார​தி​ராஜா​வின் தனித்​து​வ​மான பாணி​யும், இதில் இடம்​பெற்ற புது​மை​யான காட்​சிகளும் பார்​வை​யாளர்​களிடையே பாராட்​டைப் பெற்​றன.

‘கொடிபறக்​குது’, ‘என்​னு​யிர் தோழன்’ (1990), ‘புதுநெல்லு புது நாத்​து’ (1991), ‘நாடோடி தென்​றல்’ (1992), ‘கிழக்​குச் சீமை​யிலே’ (1993), பெண் சிசுக்​கொலையை பேசி​ய ‘கருத்​தம்​மா’ (1994) என அவர் இயக்​கிய ஒவ்​வொரு படமும் அவருடைய தனித்​து​வத்​துக்​காகக் கவனிக்​கப்​பட்​டன.

சுமார் 40-க்​கும் மேற்​பட்ட படங்​களை இயக்​கி​யுள்ள அவர், தமிழில் மட்​டுமல்​லாமல், இந்​தி, தெலுங்​கிலும் இயக்கி இருக்​கிறார்.

சின்​னத்​திரை தொடர் திரைப்​படங்​களில் முத்​திரைப் பதித்த பார​தி​ராஜா, தெக்​கத்​திப் பொண்​ணு, அப்​பனும் ஆத்​தா​வும், முதல் மரி​யாதை உள்பட சில சின்​னத்​திரை தொடர்​களை இயக்​கி​யுள்​ளார். அவருடைய படங்​களில் பலருக்கு பின்​னணி குரலும் பேசி​யுள்​ளார்.

நடிக​ராக​வும் ஜொலித்​தார்

இயக்​குநர் பார​தி​ராஜா, ‘கல்​லுக்​குள் ஈரம்’ (1980) திரைப்​படத்​தில் ஹீரோ​வாக நடித்​தார். அவர் அப்​படத்​தில் சிறந்த நடிப்பை வெளிப்​படுத்தி இருந்​த​போதும் தொடர்ந்து திரைப் படங்​களில் நடிக்​க​வில்​லை.

பின்​னர் மணிரத்​னத்​தின் ‘ஆய்த எழுத்​து’ படத்​தில் மீண்​டும் நடிக்​கத் தொடங்​கி​னார். ‘ரெட்​டச்​சுழி’, ‘பாண்​டிய​நாடு’, ‘குரங்கு பொம்​மை’, ‘திருச்​சிற்​றம் பலம்’ உள்பட பல திரைப்​படங்​களில் நடித்​துள்​ளார்.

அறி​முகப்​படுத்​திய நடிகர், நடிகைகள்

தமிழ் சினி​மா​வில் அதிக புது​முகங்​களை அறி​முகப்​படுத்​திய பெருமை பார​தி​ராஜாவுக்கு உண்​டு. அவர் தனது கதா​நாயகி​களுக்கு ‘ர’ வரிசை​யில் பெயர்​களை​யும் வைத்​தார். பிரி​யாமணி, சுகன்​யா​வுக்கு மட்​டும் அவர் பெயரை மாற்​ற​வில்​லை.

நடிகைகள்: ராதிகா சரத்​கு​மார், (கிழக்கே போகும் ரயில்), ராதா (அலைகள் ஓய்​வ​தில்லை), ரேவதி (மண்​வாசனை), ரேகா (கடலோரக் கவிதைகள்), ரஞ்​சிதா (நாடோடித் தென்​றல்), பிரி​யாமணி (கண்​களால் கைது செய்), ரமா (என்​னு​யிர் தோழன்), சுகன்யா (புதுநெல்லு புது நாத்​து).

நடிகர்​கள்: கார்த்​திக் (அலைகள் ஓய்​வ​தில்​லை), பாண்​டியன் (மண்​வாசனை), நெப்​போலியன் (புதுநெல்லு புது நாத்​து), சுதாகர் (கிழக்கே போகும் ரயில்), மனோஜ் பார​தி​ராஜா (தாஜ்மஹால்), ரவி (நிழல்​கள்), வடிவுக்​கரசி (சிகப்பு ரோஜாக்​கள்), சந்​திரசேகர் போன்ற பல நடிகர்​களை அறி​முகப்​படுத்​தி​ய​வர் இவர்.

1981-ம் ஆண்டு தெலுங்​கில் இயக்​கிய ‘சீ​தாகோக சிலு​கா’ (அலைகள் ஓய்​வ​தில்லை ரீமேக்) திரைப்​படம் சிறந்த தெலுங்​குத் திரைப்​படத்​துக்​கான தேசிய விருதைப் பெற்​றது. ‘முதல் மரி​யாதை’, சிறந்த தமிழ்த் திரைப்படத்​துக்​கான தேசிய விருதை வென்​றது.

‘வேதம் புதிது’, சமூகப் பிரச்​சினை​களை அலசும் சிறந்த படத்​துக்​கான விருதை வென்​றது. பெண் சிசுக்​கொலை​யைப் பேசிய ‘கருத்​தம்​மா’, குடும்ப நலனை வலி​யுறுத்​தும் சிறந்​தப் படத்​துக்கான தேசிய விருதைப் பெற்​றது.

‘அந்​தி​மந்​தா​ரை’ சிறந்த தமிழ்ப் படத்​துக்​கான தேசிய விருதைப் பெற்​றது. ‘கடல் பூக்​கள்’ படத்​துக்​காக சிறந்த திரைக்​கதைக்​கான தேசிய விருது பார​தி​ராஜாவுக்கு வழங்​கப்​பட்​டது.

இதே போல தமிழக அரசின் 6 விருதுகளை​யும் பெற்​றுள்​ளார். திரைத்​துறைக்கு இவர் ஆற்​றிய பங்​களிப்​புக்​காக 2004-ம் ஆண்டு இந்​திய அரசு இவருக்கு ‘பத்​மஸ்ரீ’ விருது வழங்​கிக் கவுர​வித்​தது.

‘என் இனிய தமிழ் மக்​களே…’

பார​தி​ராஜா பேசத் தொடங்​கும்​போது ‘என் இனிய தமிழ் மக்​களே’ என்​று​தான் தொடங்​கு​வார். அவர் திரைப்​படங்​களின் தொடக்​கத்​தி​லும் இப்​படி பேசுவதை வழக்​க​மாக வைத்​திருந்​தார். அவருடைய இந்த கணீர் குரல் ரசிகர்​களுக்கு மிக​வும் பிடித்த ஒன்​றாக மாறிப்​போனது. அவர் அப்​படிச் சொல்​லும்​போது ரசிகர்​கள் கைத்​தட்டி மகிழ்ச்​சியை வெளிப்​படுத்​து​வது வழக்​கம்.

படப்​பிடிப்பு இன்று ரத்து

பார​தி​ராஜா​வின் மறைவுக்கு அஞ்​சலி செலுத்​தும்​வித​மாக இன்று ஒரு நாள் திரைப்​படம் மற்​றும் தொலைக்​காட்​சித் தொடர் படப்​பிடிப்​பு​களை ரத்து செய்​வ​தாக பெப்சி தலை​வர் ஆர்​.கே.செல்​வ​மணி தெரி​வித்​து உள்​ளார்.

Related Post

“Global Star நடிகர் விமலின் Comeback படம்..!தரமான ட்ரைலர் இதோ..”

Posted by - August 24, 2023 0
விமல் நடிப்பில் உருவாகி நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்த படம் தான் ‘துடிக்கும் கரங்கள்’ திரைப்படம் செப்டம்பர் 1-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது இந்த படத்திற்கு…
Generated Image February 25 2026 10 12AM

நடிகை பேட்டி-நடிகர் ஆர்யாவுடன் இணைந்து நடிக்க எனக்கு விருப்பம் இல்லை…

Posted by - February 25, 2026 0
நடிகர் ஆர்யா தமிழ் சின்னத்திரையில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி இருக்கிறது, இப்போதும் ஒளிபரப்பாகி வருகிறது. அப்படி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் புதிய கான்செப்டுடன் ஒளிபரப்பாகி வந்த…

காபி விலையை கேட்டு பெட்டியை கட்டிய விஜயகாந்த், அதன்பின்… பிரபலம் சொன்ன விஷயம்

Posted by - May 28, 2025 0
விஜயகாந்த் தமிழ் சினிமாவில் 80களில் கலக்கிய நடிகர்களில் ஒருவர் தான் விஜயகாந்த். அவர் இல்லை என்றாலும் கேப்டனாக இன்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இவரது இறந்த…

லியோவில் விஜய்யுடன் மோத போகும் மற்றும் ஒரு நடிகர்..லோகேஷ் செய்யப்போகும் தரமான செய்கை!!

Posted by - April 5, 2023 0
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தில் நடிகர் விஜய் சேதுபதி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.   மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம்…

லியோ படத்தின் தமிழ்நாட்டு வசூல்.. ஆறு நாட்களில் புதிய சாதனை படைத்த விஜய்

Posted by - October 25, 2023 0
லியோ விஜய்யின் லியோ திரைப்படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. பெரிதும் எதிர்பார்ப்பில் வெளியான லியோ படம் சற்று கலவையான விமர்சனங்களை சந்தித்து. அப்படி இருந்த நிலையிலும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *