குளிர்பானத்தில் எலி மருந்து கலந்து கொடுத்து காதலனைக் கொன்ற காதலி…!!

318 0

குளிர்பானத்தில் எலி மருந்து கலந்து கொடுத்து காதலியே காதலனைக் கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள மஞ்சூர் கிராமத்தை சேர்ந்தவர்  சஞ்சீவ் குமார் (18) இவர் திருப்பூரில் உள்ள டாஸ்மார்க் கடையில் வேலை பார்த்து வருகிறார். தனது பிறந்த நாளை சென்னையில் உள்ள தன்னுடைய காதலியுடன் கொண்டாடுவதற்காக கடந்த  7 ஆம் தேதி திருப்பூரில் இருந்து சென்னைக்கு வந்திருக்கிறார்.

சென்னையின் பல்வேறு இடங்களுக்கு சுற்றிவிட்டு ஏழாம் தேதி இரவு மீண்டும் திருப்பூர் செல்வதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்தபோது அண்ணா நகரை சேர்ந்த தான் காதலித்து வரக்கூடிய 16 வயது சிறுமியை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு அழைத்திருக்கிறார் சஞ்சீவ் குமார்.

இரவு 10 மணி அளவில் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு 5வது நடைமேடைக்கு 16 வயது சிறுமி வந்திருக்கிறார். அப்போது சஞ்சீவ் குமாருக்கு தான் வாங்கி வந்த மாசா குளிர்பானத்தை சிறுமி கொடுத்ததாகவும், அதை குடித்த பின்னர் “என்னை மன்னித்துவிடு உன்னை பழி வாங்குவதற்காகவே உன்னை வரவழைத்து குளிர்பானத்தில் எலி மருந்தை கலந்தேன் என சிறுமி சஞ்சய் குமாரிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே சிறுமி இரவு 10 மணிக்கு கோயம்பேடு பேருந்து நிலையம் வந்திருப்பதை அறிந்த அவரது தாயார் மற்றும் மூத்த சகோதரி இருவரும் நேரடியாக கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு வந்து சஞ்சீவ் குமாரை கடுமையாக தாக்கியுள்ளனர் இதில் சஞ்சய் குமார் பயந்துள்ளார்.

பின்னர் இரவு கோயம்பேடு பேருந்து நிலையத்திலேயே தங்கி விட்டு மறுநாள் காலையில் ஆவடியில் உள்ள தன்னுடைய மாமா செல்வராஜ் வீட்டிற்கு சென்று, தனக்கு, தான் காதலித்து வரக்கூடிய பெண் விஷம் கொடுத்து விட்டதாக கூறி அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோதனை செய்திருக்கிறார்.

அதன் பின்னர் உடல்நிலை மோசம் அடையவே கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர். அங்கும் மிகவும் ஆபத்தான கட்டத்திலேயே சஞ்சய் குமார் இருந்துவந்திருக்கிறார். இதனிடையே சிகிச்சையில் இருந்த போது காவல்துறையினரிடம் தன்னுடைய காதலி, தனக்கு மாசா குளிர்பானத்தில் எலி மருந்து கலந்து கொடுத்து விட்டதாக கூறி மரண வாக்குமூலம் கொடுத்து இருக்கிறார்.

இதன் பின்னர் சஞ்சீவ் குமாரை  தனியார் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை பார்த்துக் கொள்வதாக கூறி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருந்து, நேற்று அவரை அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அவர் போகும் வழியிலேயே உயிர் இழந்து விட்டதாக ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து உடனடியாக சஞ்சீவ் குமாரின் உடலானது அவருடைய சொந்த ஊரான பரமக்குடிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலும் சென்னை கோயம்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

Related Post

மணிப்பூரில் உயிரிழப்பு, தீவைப்பு, வழிபாட்டு தலங்கள் சேதம் எவ்வளவு?- முழுத் தகவல்

Posted by - September 15, 2023 0
மணிப்பூரில் கடந்த மே மாதம் 3-ந்தேதி ஒரு பிரிவினர் சார்பில் பேரணி நடைபெற்றது. அப்போது பேரணியில் மோதல் ஏற்பட்டு, பின்னர் அது இரு பிரிவினர் இடையே மிகப்பெரிய…

இன்று முதல் ரமலான் நோன்பு தொடக்கம்.. கடைபிடிக்க வேண்டிய விதிகள் என்னென்ன?

Posted by - March 12, 2024 0
 தமிழ்நாட்டில் பிறை தெரிந்ததை அடுத்து, இன்று முதல் ரமலான் நோன்பு தொடங்கப்படும் என்று தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். ரமலான் பண்டிகைக்கு முன்பாக இஸ்லாமியர்கள் ஒரு மாத காலம்…

என்னது.. செலவு பண்றதுக்கு ஊக்கத் தொகையா.? புதுசா இருக்கே.. மத்திய அரசின் அதிரடி பிளான்…

Posted by - March 29, 2025 0
நீங்கள் செலவு செய்யும் பணத்திற்கு ஊக்கத் தொகை கிடைக்கும் என்றால் நம்புவீர்களா.? யார் அப்படி கொடுப்பது என யேசிக்கிறீர்களா.? மத்திய அரசுதான். என்ன விவரம் தெரியுமா.? மத்திய…
Generated Image February 25 2026 4 32PM

நல்லகண்ணுவின் உடலை என்ன செய்யப்போகிறார்கள் தெரியுமா?

Posted by - February 25, 2026 0
சுதந்திர போராட்ட வீரரும், கம்யூனிஸ்ட் தலைவருமான நல்லகண்ணு இன்று உயிரிழந்த நிலையில், அவரது உடல் மருத்துவ படிப்பிற்காக அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட உள்ளது. Communist…

கள்ளக்காதலனுக்கு மனைவியை திருமணம் செய்து வைத்து ஆசி வழங்கிய கணவன்

Posted by - July 8, 2023 0
பீகார் மாநிலம் நவாடா பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண். இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவருடைய கணவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *