குஷ்புவிடம் வருத்தம் தெரிவித்த நடிகர் விஜய் – எதற்க்கு தெரியுமா..?

202 0

திரைப்படத்தில் ஏற்பட்ட சில தவிர்க்க முடியாக சூழலால் கோபமாக இருந்த நடிகை குஷ்புவிடம் நடிகர் விஜய் வருத்தம் தெரிவித்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான திரைப்படமே வாரிசு . விஜய் நடிப்பில் உருவான இப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கியிருந்தார்.

சரத்குமார், ரஷ்மிகா மந்தனா, ஷாம், பிரபு எஸ் ஜே சூர்யா, பிரகாஷ் ராஜ் , யோகி பாபு , குஷ்பு உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் கமிட்டாகி நடித்திருந்தது .

மாபெரும் எதிர்பார்ப்புக்கிடையே வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் வசூலில் பட்டய கிளப்பியதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை குஸ்பு வாரிசு படம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் அப்படி அவர் கூறியதாவது :

வாரிசு படத்தில் எனக்கும், விஜய்க்கும் மிகவும் உணர்ச்சிகரமான காட்சிகள் படமாக்கப்பட்டன.
வேறு யாருடனும் எனக்கு அந்தப் படத்தில் காட்சிகள் இல்லை. ஆனால், அவை நீக்கப்பட்டது எனக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது .

எனக்கும் விஜய்க்கும் இடையிலான அந்த காட்சிகள் படமாக்கப்பட்ட போது நானும் விஜய்யும் உண்மையாகவே அழுதுவிட்டோம் அப்படிப்பட்ட காட்சிகள் நீக்கப்பட்டது உண்மையாகவே வலித்தது.படம் திரையரங்குங்களில் வெளியான உடன் படக்குழுவுடன் ஏற்பட்ட சந்திப்பின்போது நடிகர் விஜய் , இயக்குநர் வம்சி ஆகியோர் என்னிடம் வருத்தம் தெரிவித்தனர் என குஷ்பு தெரிவித்துள்ளார்.

Related Post

எஸ்.கே-வின் படத்தால் செம அப்சட்டில் கமல்ஹாசன் – அப்படி என்ன தான் நடந்தது..?

Posted by - March 14, 2024 0
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அமரன் படத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனையால் கமல்ஹாசன் செம அப்சட்டில் இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ்…

சீட்டின் நுனிக்கு வர வைத்த 10 பேய் படங்கள்.. பயமுறுத்தும் லாரன்ஸின் காஞ்சனா

Posted by - March 20, 2025 0
10 Tamil Horror Films : ஹாரர் படங்கள் தமிழ் சினிமாவில் சமீபகாலமாக நிறைய வெளியாகி வருகிறது. அதில் நம்மை சீட்டில் நுனிக்கு வரவைத்து அதிர்ச்சியில் ஆழ்த்திய 10…

“மாரி செல்வராஜ் தான் மாமன்னன்.. உதயநிதி மன்னாதி மன்னன்” – நடிகர் வடிவேலு

Posted by - June 2, 2023 0
இது உதயநிதியின் கடைசி படம் என சொல்லத்தேவையில்லை. இத்தனை நாள் ஹீரோவாக நடித்துக்கொண்டிருந்தார். இனி அரசியலில் ஹீரோவாகப்போகிறார் என நடிகர் வடிவேலு பேச்சு. மாரி செல்வராஜ் இயக்கத்தில்…

அஜித்தின் நச் லுக்.. மஞ்சு வாரியர் குரல்.. துணிவு பட ’காசேதான் கடவுளடா’ பாடல் க்ளிக்ஸ்!

Posted by - December 18, 2022 0
Kasethan Kadavulada : அஜித் நடித்துள்ள துணிவு படத்திலிருந்து 2ஆவது பாடலாக காசேதான் கடவுளடா பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 1/ 7 துணிவு படத்தின் காசேதான் கடவுளடா லிரிக்கல்…

அனைத்து காட்சிகளும் ரத்து! தியேட்டர் எடுத்த அதிர்ச்சி முடிவு

Posted by - May 13, 2023 0
ஃபர்ஹானா ஐஸ்வர்யா ராஜேஷ், ஜித்தன் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கும் ஃபர்ஹானா படம் நேற்று ரிலீஸ் ஆனது. அந்த படத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துக்கள் இருப்பதாக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *