சிபிஎஸ்இ பள்ளிகள் கையெழுத்து கேட்கும்; பெற்றோர் போடாதீங்க! எச்சரிக்கும் அன்பில் மகேஸ்

250 0

சிபிஎஸ்இ பள்ளிகளின் ஃபெயில் நடைமுறைக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “சிபிஎஸ்இ 5ஆம் வகுப்பு மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்கள் குறைந்த மதிப்பெண்கள் பெற்றால் ஃபெயில் ஆக்கும் நடைமுறைக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். சிபிஎஸ்இ பள்ளிகளின் இந்த நடைமுறையை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது.

இதனால் தான் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என கூறுகிறோம். ஆரம்பத்திலிருந்தே தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்றுதான் கூறி வருகிறோம். தேசிய கல்விக் கொள்கையை சிபிஎஸ்இ பள்ளிகள் அமல்படுத்தும்போது பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.

சிபிஎஸ்இ பள்ளிகளில் 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்கள் ஃபெயில் என்று கையெழுத்து போட சொன்னால் போடக்கூடாது. பெற்றோர்கள் கேள்வி கேட்க வேண்டும்.

கடனை வாங்கி பிள்ளைகளை சிபிஎஸ்இ பள்ளிகளில் சேக்கும் பெற்றோர் எவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாவார்கள். 5ஆம் வகுப்பு மாணவர்களை ஃபெயில் ஆக்கினால் இடைநிற்றல் அதிகரிக்கும்.

என்.சி.இ.ஆர்.டி பாடத்திட்டத்தின் மூலம் வரலாற்றை மாற்ற ஒன்றிய அரசு முயற்சி செய்து வருகிறது” எனத் தெரிவித்தார்.

முன்னதாக, மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் சிபிஎஸ்இ பள்ளிகளில், இனி 3, 5, 8ம் வகுப்புகளில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்தால் ‘ஃபெயில்’ என்ற நடைமுறை அமலுக்கு வீந்தது. இதற்காக தங்களின் குழந்தைகள் குறைவான மதிப்பெண்கள் எடுத்தால் ஃபெயில் ஆக்க சம்மதிப்பதாக பெற்றோர்களிடம் பள்ளிகள் ஒப்புதல் கடிதம் பெறத்தொடங்கியுள்ளன.

அதேநேரம், ஏப்ரல் மாதம் முடிவதற்கு முன்பே 9ம் வகுப்பு வரை விடைத்தாள்கள் திருத்தப்பட்டு, பழைய விதிமுறைப்படி மாணவர்கள் அடுத்த வகுப்புக்குச் சென்று விட்டதால். புதிய நடைமுறையானது அடுத்த ஆண்டில் இருந்துதான் முழுமையாக நடைமுறைக்கு வரும் என அதிகாரிகள் தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. 30 சதவிகிதத்திற்கும் குறைவான மதிப்பெண்கள் எடுத்தால், சிபிஎஸ்இ தேர்வுகளில் தோல்வி  என அறிவிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது

Related Post

ரூ.1000 உரிமைத்தொகை.. தமிழ்நாடு அரசின் இணைய பக்கத்தை திறந்தால் ஷாக்.. என்ன இது? ஏன் இப்படி?

Posted by - September 25, 2023 0
சென்னை: மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்களை சரிபார்க்க தொடங்கப்பட்ட இணையதளம் கடந்த 3 நாட்களாக இயங்காமல் இருப்பது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளான…

காதலை கண்டித்ததால் ஆத்திரம்- தம்பியை கொன்று 20 துண்டுகளாக வெட்டி ஏரியில் வீசிய அக்காள்

Posted by - March 21, 2023 0
ஓசூர்: கர்நாடக மாநிலம், விஜயபுரா மாவட்டம் சிந்திகி தாலுகாவுக்கு பட்ட தேவனாங்காவ் கிராமத்தை சேர்ந்தவர் சித்தப்பா பூசாரி. இந்த கிராமம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ளது.…

திருமண மண்டபங்களில் மதுபானம் பறிமாறலாம்.. தமிழ்நாடு அரசு அனுமதி..!

Posted by - April 24, 2023 0
தமிழ்நாட்டில் ஏற்கனவே கிளப்புகள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களுக்கு மட்டுமே மதுபானம் விற்க உரிமம் வழங்கப்பட்டுள்ளது. திருமண மண்டபங்கள், விருந்து நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பரிமாற…
rain water

சென்னை மாநகரில் மழை நீர் வடியாததற்கான காரணம்?

Posted by - December 4, 2023 0
சென்னையில் நேற்று முதல் தொடர்ந்து 12 மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை மாநகரில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மழை…
health

சர்க்கரை நோயாளிகள் ஆரஞ்சு பழம் சாப்பிடலாமா? இந்த 6 பழமும் நீரிழிவு நோயாளி சாப்பிடலாம்.. என்ன பாருங்க

Posted by - December 2, 2023 0
சென்னை: சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய காய்கள், பழங்கள், பருப்புகள் என்னென்ன தெரியுமா? எந்தெந்த உணவு பொருட்களை தவிர்க்க வேண்டும்? ஆரஞ்சு பழத்தை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா?…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *