டிஆர்பி-யில் தெறிக்க விட்ட டாப் 10 சீரியல்கள்.. அசுர வேகத்தில் பட்டையை கிளப்பும் எதிர்நீச்சல்

409 0

சின்னத்திரை சீரியல்களின் டிஆர்பி லிஸ்ட் ஆனது இணையத்தில் வெளியாகி தெறிக்க விட்டுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த வார டிஆர்பி ரேட்டிங் லிஸ்டில் இருக்கும் டாப் 10 சீரியல்களைப் பற்றி பார்ப்போம்.

இதில் 10-வது இடத்தில் பாரதி கண்ணம்மா சீரியலும், 9-வது இடத்தில் ஆனந்த ராகம் சீரியலும், 8-வது இடத்தில் பாண்டியன் ஸ்டோர் சீரியலும், 7-வது இடத்தில் பாக்கியலட்சுமி சீரியலும் இடம் பிடித்துள்ளது.

கண்ணான கண்ணே: இந்த சீரியலில் மீராவும் யுவாவும் எங்கு இருக்கிறார்கள் என்பது தற்பொழுது கௌதம் குடும்பத்திற்கு தெரிய வந்துள்ளது. இந்நிலையில் மீரா தனது குடும்பத்துடன் சேர்ந்து விட்டால் மேனகாவின் சூழ்ச்சிக்கும் ஆட்டத்திற்கும் விரைவில் முடிவு கட்டி விடுவர். ஆனால் அந்த நாள் எப்பொழுது வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். கண்ணான கண்ணே சீரியல் இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் 6-வது இடத்தில் உள்ளது.

 

இனியா: இந்த சீரியலில் இனியா தனது அக்காவின் திருமணத்தை எப்படியாவது நடத்தி விட வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்து வருகிறார். ஆனால் இந்த திருமணம் நடக்கக் கூடாது என்ற நோக்கத்தில் யாழினியின் மீது திருட்டுப் பழியை சுமத்தி உள்ளனர் சிலர். தனது அக்காவின் மேல் படிந்துள்ள இந்தக் கரையை இனியா எவ்வாறு முறியடிக்க போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இனியா சீரியல் இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் 5-வது இடத்தை பிடித்துள்ளது.

எதிர்நீச்சல்இந்த சீரியலில் எப்படியாவது குணசேகரன் தான் நினைத்ததை  நடத்திவிட வேண்டும் என்ற அகங்காரத்தில் இருந்து வருகிறார். இந்நிலையில்  ஆதிராவிற்கு, கரிகாலன் மற்றும் அருண் இவர்களில் யாருடன் திருமணம் நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. எதிர்நீச்சல் சீரியல் இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் 4-வது இடத்தை பிடித்துள்ளது.

சுந்தரி: இந்த சீரியலில் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு சிகிச்சையின் மூலம் சுந்தரியின் கண் பார்வையானது குணமாகி உள்ளது. ஆனால் அனு மற்றும் கார்த்திக் உடைய விவகாரம் வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரிந்த நிலையில் அனுவிற்கு எப்பொழுது தெரிய வரும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவே இருந்து வருகிறது. சுந்தரி சீரியல் இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் 3-வது இடத்தை பிடித்துள்ளது.

 

வானத்தைப்போல: இந்த சீரியலில் பொன்னியின் செயலால் பெரிய கண்டத்தில் சிக்கியிருந்த சின்ராசுவின் குடும்பம் தற்பொழுது அதிலிருந்து மீண்டுள்ளது. மேலும் பொன்னி, சரவணனின் சுய ரூபத்தை புரிந்து கொண்டதன் மூலம் தனது காதலை அடியோடு வெறுத்துள்ளார். இந்நிலையில் பொன்னி சின்ராசுவை மறைமுகமாக காதலிக்க தொடங்கியுள்ளார். மேலும் இவர்களின் ரொமான்ஸ் காட்சி எப்பொழுது வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். வானத்தைப்போல சீரியல் இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் 2-வது இடத்தை பிடித்துள்ளது.

கயல்: இந்த சீரியலில் கயல் தனது குடும்பத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை ஒரு பெண்ணாக இருந்து எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதை மிக அழகாக காண்பித்துள்ளனர். அதிலும் சொந்தமாக இருக்கக்கூடிய பெரியப்பாவின் சூழ்ச்சிகளே அதிகம் நிறைந்துள்ளது. இவற்றையெல்லாம் கயல் எப்படி சமாளித்து வர போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கயல் சீரியல் இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

 

இவ்வாறு பிரபல சேனலை பின்னுக்குத்  தள்ளிய நிலையில் இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 6 இடங்களையும் ஒரே சேனலை பிடித்துள்ளது. அதிலும் எதிர்நீச்சல் சீரியலானது ரசிகர்களின் ஆதரவை பெற்று டாப் கியரில் போய்க்கொண்டிருக்கிறது.

Related Post

லால் சலாம் படத்திற்கு தீடிர் தடை!! இப்படியொரு பிரச்சனையா ?

Posted by - February 7, 2024 0
லால் சலாம் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள லால் சலாம் திரைப்படம் வருகிற வருகிற 9-ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில்…

பிக் பாஸ் பிரதீப் ஆண்டனிக்கு திருமணம்.. பொண்ணு யார் தெரியுமா! இதோ புகைப்படம்

Posted by - June 17, 2024 0
பிரதீப் ஆண்டனி பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகர் பிரதீப் ஆண்டனி. இதில் ஏற்பட்ட சில சர்ச்சையின் காரணமாக நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். 2016ஆம் ஆண்டு…

இந்த விஷயங்களை எல்லாம் கூகுளில் தேடக்கூடாது.. மீறினால் தண்டனை நிச்சயம்

Posted by - March 1, 2023 0
நமது இணைய நடவடிக்கைகள் கண்காணிப்புக்கு உட்பட்டது என்பதால் கூகுளில் தேடக் கூடாத சில விஷயங்கள் என்ன என்பதை அறிவது அவசியம். வாழ்க்கையில் நமக்கு என்ன வேண்டும் என்றாலும்…

நடிகர் ஜெயம் ரவி குடும்பத்தில் அடுத்து ஹீரோ ரெடி!.. வைரலாகும் அவரது மகனின் புகைப்படம்

Posted by - August 12, 2023 0
ஜெயம் ரவி ஆரம்பத்தில் தனது அண்ணனின் இயக்கத்தில் தொடர்ந்து படங்கள் நடித்துவந்த ஜெயம் ரவி அடுத்தடுத்து மற்ற இயக்குனர்களுடன்படங்களில் நடித்து தனக்கென சினிமாவில் இடம் பிடித்தார். நடிகர்…

தீபக் வெளிய விஷால் உள்ள.. டிஆர்பிக்காக விஜய் டிவி செய்த பலே அரசியல்

Posted by - January 13, 2025 0
நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்த பலரும் செம கோபத்திலும் அப்செட்டிலும் இருக்கின்றனர். ஏனென்றால் கடுமையான போட்டியாளராகவும் நியாயமானவராகவும் இருந்த தீபக் வெளியேற்றப்பட்டுள்ளார்.பைனல்ஸ் வரை வருவார் என நினைத்த இவரின் வெளியேற்றம் கடும் ஏமாற்றத்தை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *