வடமாநிலங்களில் நிலநடுக்கம்: பதற்றத்தில் தவித்த மக்கள்

247 0

கவுகாத்தி :

புவித்தட்டுகள் ஒன்றுடன் ஒன்று மோதி, மேற்பரப்பில் அதிர்வுகள் உண்டாவது உண்டு. இதுதான் நில நடுக்கம். நமது நாட்டைப் பொறுத்தமட்டில், வடகிழக்கு பகுதி, அதிகபட்சம் நில நடுக்கம் ஏற்படுகிற மண்டலத்தில் அமைந்துள்ளது.இந்தியாவின் 8 மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்படும் : வெளியான அதிர்ச்சி தகவல்

எனவே அங்கே அடிக்கடி நில நடுக்கம் ஏற்படுகிற வாய்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாசலபிரதேசத்தில் நேற்று மதியம் 12.12 மணிக்கு திடீரென நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.8 புள்ளிகளாக பதிவானது.

நில நடுக்கமானது, பூடான் எல்லை அருகே அமைந்துள்ள மேற்கு காமெங்கில் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்தது.

இந்த நில நடுக்கத்தின் தாக்கம் மத்திய வடக்கு அசாமில் பல இடங்களில் உணரப்பட்டது. இதே போன்று பூடானின் கிழக்கு பகுதியிலும் இந்த நில நடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வட மாநிலமான மத்திய பிரதேச மாநிலத்தின் மேற்கு மாவட்டங்கள் சிலவற்றிலும் நேற்று மதியம் 12.54 மணிக்கு நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3 புள்ளிகளாக பதிவானது. இந்த நில நடுக்கம் இந்தூருக்கு 151 கி.மீ. தென்மேற்கில் மையம் கொண்டிருந்தது.

இந்த நில நடுக்கம், பர்வானி, அலிராஜ்பூர், தார், ஜாபுவா, கார்கான், இந்தூர் மாவட்டங்களில் உணரப்பட்டது. துருக்கியிலும், சிரியாவிலும் சமீபத்தில் நில நடுக்கம் ஏற்பட்டு பல்லாயிரக்கணக்கான் மக்கள் உயிரிழந்த நிலையில், வட மாநிலங்களில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் மக்கள் பதற்றத்தில் தவித்தனர்.

நடுக்க பாதிப்புக்குள்ளான இடங்களில் பெரும்பாலான மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து வீதிகளில் சிறிது நேரம் தஞ்சம் அடைந்தனர். அதே நேரத்தில் இந்த நில நடுக்கத்தால் பெரிய அளவில் பாதிப்புகள் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

Related Post

இன்று முதல் ரமலான் நோன்பு தொடக்கம்.. கடைபிடிக்க வேண்டிய விதிகள் என்னென்ன?

Posted by - March 12, 2024 0
 தமிழ்நாட்டில் பிறை தெரிந்ததை அடுத்து, இன்று முதல் ரமலான் நோன்பு தொடங்கப்படும் என்று தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். ரமலான் பண்டிகைக்கு முன்பாக இஸ்லாமியர்கள் ஒரு மாத காலம்…

மக்களே ரெடியா இருங்க; 2 மாதத்தில் வருது ஸ்டார்லிங்க் இன்டர்நெட் – வெளியான விலை விவரங்கள்

Posted by - June 10, 2025 0
இந்தியாவில் சேவையை வழங்க ஸ்டார்லிங்க ஏற்கனவே லைசென்ஸ் பெற்றுவிட்ட நிலையில், 2 மாதங்களுக்குள் சேவை தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. அதன் விலை என்ன தெரியுமா.? எலான்…

படுக்கையில் கட்டியணைத்தபடி கொடிய விஷப்பாம்புகளுடன் பயமின்றி தூங்கும் சிறுமி

Posted by - September 4, 2023 0
புதுடெல்லி: பாம்பு என்றாலே படையும் நடுங்கும் என்பார்கள். சிலர் பாம்பை கையால் பிடித்தாலே பெரிய சாகசமாக நினைப்பது உண்டு. ஆனால் இதற்கெல்லாம் மேலாக அரியானா என்ற சிறுமி…

மகாராஷ்டிராவில் சோகம் – 24 மணி நேரத்தில் அரசு மருத்துவமனையில் 18 நோயாளிகள் பலி

Posted by - August 14, 2023 0
மும்பை: மகாராஷ்டிர மாநிலம் தானே அருகே உள்ள கல்வா பகுதியில் சத்ரபதி சிவாஜி மாநகராட்சி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஒரே…

இந்தியாவில் 6 நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு மீண்டும் 100-க்கும் கீழ் குறைந்தது

Posted by - February 21, 2023 0
புதுடெல்லி: இந்தியாவில் மேலும் 95 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த 14-ந்தேதி பாதிப்பு 74 ஆக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *