பாஜக மாநிலத் தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்.. நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

139 0

பாஜக மாநிலத் தலைவர் தேர்தலில் நயினார் நாகேந்திரன் போட்டியின்றி ஒருமனதாக தேர்வானதாகவும், நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் பாஜக தேர்தல் அதிகாரி சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.

பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வாகி இருக்கிறார். மாநிலத் தலைவருக்கான தேர்தலில் போட்டியிட நயினார் நாகேந்திரன் விருப்ப மனு தாக்கல் செய்த நிலையில், வேறு யாரும் விருப்ப மனு தாக்கல் செய்யாததால், அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக பாஜக தேர்தல் அதிகாரி சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.

போட்டியின்றி தேர்வானார் நயினார் நாகேந்திரன்

மாநிலத் தலைவர் பதவிக்கு போட்டியிட நயிநாருக்கு மட்டுமே கட்சித் தலைமை அனுமதி வழங்கியதையடுத்து, நயினார் நாகேந்திரன் இன்று, அண்ணாமலை, எல். முருகன் உள்ளிட்டோர் முன்னிலையில், தனது விருப்ப மனுவை, பாஜக மாநில தேர்தல் பொறுப்பாளர் சக்கரவர்த்தியிடம் வழங்கினார். நயினார் நாகேந்திரன் தலைவராவதற்கு, அண்ணாமலை, எல். முருகன், ஹெச். ராஜா, பொன். ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட 10 பேர் பரிந்துரை செய்தனர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், தன்னை பரிந்துரைத்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும், தலைவர் பதவிக்கு போட்டியிட 10 ஆண்டுகள் பாஜக உறுப்பினராக இருந்திருக்க வேண்டும் என்ற விதி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அது குறித்து தேர்தல் அதிகாரியிடம் தான் கேட்ட வேண்டும் என்று கூறினார்.

இதனிடையே, மாநிலத் தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன் மட்டுமே விருப்ப மனு வழங்கிய நிலையில், அவர் பாஜக மாநிலத் தலைவராக போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்படுவதாகவும், நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு, நாளை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெறும் நிகழ்வில் வெளியாகும் எனவும் பாஜக தேர்தல் அதிகாரி சக்கரவர்த்தி கூறியுள்ளார்.

மாநிலத் தலைவர் பதவிக்கான விதிகளை தளர்த்திய பாஜக தலைமை

மேலும், மாநிலத் தலைவர் பதவிக்கு குறைந்தது 10 ஆண்டுகள் பாஜக உறுப்பினராக இருக்க வேண்டும் என்ற விதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் பாஜக மாநில தேர்தல் அதிகாரி சக்கரவர்த்தி கூறியுள்ளார். ஏற்கனவே, பீகார் உள்ளிட்ட 5 மாநிலங்களில் பாஜக தலைமையால் இதுபோன்று விதிகள் தளர்த்தப்பட்டுள்ளதாகவும், அதனால், நயினார் நாகேந்திரன் தலைவராவதில் சிக்கல் இல்லை எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Related Post

Generated Image November 03 2025 10 32AM

எனக்கு வெட்கமாக இருக்கிறது; பதவியை துறக்க விரும்புகிறேன்: நேரு முன்னிலையில் திமுக மாவட்டச் செயலாளர் குமுறல்

Posted by - November 3, 2025 0
திமுகவின் திருச்சி மத்திய மாவட்டச் செயலாளராக க.வைரமணி பதவி வகிக்கிறார். திமுக முதன்மைச் செயலாளரும், மூத்த அமைச்சருமான கே.என்.நேருவின் தீவிர ஆதரவாளரான இவருக்கு, அமைச்சரின் சொந்த தொகுதியான…

அதிகரித்த டிமாண்ட்.. எங்களுக்கு இத்தனை சீட்டு வேணும்.. திமுக-விடம் திருமா கேட்பது இதுதான்!

Posted by - July 17, 2025 0
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் அதிக தொகுதிகளை ஒதுக்க கோரிக்கை வைக்க திருமாவளவன் முடிவு செய்துள்ளார். தமிழ்நாட்டு அரசியல் களம் நாளுக்கு நாள்…

அன்புமணிக்கு அதிர்ச்சி கொடுத்த ராமதாஸ்..!

Posted by - April 10, 2025 0
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சில முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிய நிலை உள்ளது – மருத்துவர் ராமதாஸ் விழுப்புரம்: பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக பொறுப்பு…

சட்டசபையில் சீனியர் அமைச்சர்கள் வரிசைக்கு வரும் உதயநிதி ஸ்டாலின்!

Posted by - December 16, 2022 0
உதயநிதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மட்டுமல்லாது, சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை, வறுமை ஒழிப்புத் திட்டங்கள் மற்றும் ஊரக கடன்கள் ஆகிய துறைகளுக்கும் பொறுப்பேற்றுள்ளார். இளைஞர்…

ஓபிஎஸ்-ஐ எப்படியாவது சமாதானப்படுத்துங்க.. அதிமுக – பாஜக கூட்டணி துடிப்பது ஏன்?

Posted by - August 4, 2025 0
பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ள ஓ.பன்னீர்செல்வத்தை சமாதானப்படுத்தி மீண்டும் கூட்டணிக்குள் அழைத்து வர அதிமுக – பாஜக தலைவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழக அரசியல் நாளுக்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *