நேற்று ”யார் அந்த சார்” பேட்சுடன் அதிமுக; இன்று ”இவன்தான் அந்த சார்” பலகையுடன் திமுக: பரபரப்பில் சட்டப்பேரவை

252 0

தமிழ்நாடு சட்டப்பேரவையில், ”யார் அந்த சார்” என்ற பேட்சுடன் அதிமுகவினர் வந்த நிலையில் , இன்று திமுகவினர் ”இவன் தான் அந்த சார்” என்ற புகைப்படத்துடன் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவினர் அண்ணா பல்கலை விவகாரத்தை கையில் எடுத்த நிலையில், இன்று திமுகவினர் அண்ணா நகர் வழக்கை கையில் எடுத்துள்ளது , சட்டப்பேரவையில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

’யார் அந்த சார்?” – அதிமுக

இந்த ஆண்டின், முதல் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரானது, ஜனவரி 6ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாளிலேயே, ஆளுநர் தனது உரையை புறக்கணித்துச் சென்றது பெரும் பேசுபொருளானது. அதுமட்டுமன்றி  சட்டப்பேரவை தொடங்கியது முதலே,அதிமுகவினர் அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தை கையில் எடுத்தனர். குறிப்பாக , அதிமுகவினர் அனைவரும் சட்டையில், யார் அந்த சார் என்ற பேட்சை அணிந்து குரல் எழுப்பினர்.  இதனால், முதல் நாளே எதிர்க்கட்சிகளின் குரலால் சட்டப்பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது.

 

முதலமைச்சர் ஸ்டாலின் பதில்:

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், பாதிக்கப்பட்ட மாணவிக்கு சட்டப்படி நியாயம் பெற்றுத்தருவதை தவிர, வேறு எந்த நோக்கமும் தமிழ்நாடு அரசுக்கு கிடையாது; குற்றவாளி யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.  காவல்துறை துரித நடவடிக்கை எடுத்த பின்னரும், முதல் தகவல் அறிக்கை கசிந்ததை குறை சொல்கின்றனர். ஆனால் அதற்கு காரணம் தேசிய தகவல் மையம் தான். அதற்கு அந்த அமைப்பும் விளக்கம் கொடுத்திருக்கிறது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

மேலும், யார் அந்த சார் என்ற எதிர்க்கட்சிகள் கேள்விக்கு பதில் அளிக்கையில், “  உண்மையாகவே எதிர்க்கட்களிடம் ஆதாரம் இருந்தால் சிறப்பு புலனாய்வு குழுவிடம் தெரிவியுங்கள்; அதை தவிர்த்து வீண் விளம்பரத்திற்காக மலிவான செயலில் ஈடுபட வேண்டாம்” என தெரிவித்திருந்தார்.

”இவன்தான் அந்த சார்” – திமுக

ஆனால், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து யார் அந்த சார் என்ற பேட்சுடன் வருகை தர ஆரம்பித்தனர்.

 

இந்நிலையில், அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் , குற்றவாளியை பாதுகாக்க முயற்சித்து, தப்பிக்க நினைத்த அதிமுக பிரமுக சுதாகர் கைதானதாக கூறப்படும் நிலையில், சுதாகரின் புகைப்படத்துடன், ” இவன் தான் அந்த சார்” என்ற பதாகையுடன் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்கு வந்தனர். மேலும், இவன் தான் , அந்த சார் என்ற கோசங்களும் எழுப்பியதால், சட்டப்பேரவையில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், யார் அந்த சார் என்று அதிமுகவினரும், இவன் தான் சார் என்று திமுகவினர் ஒருவொருக்கொருவர் எதிர்ப்பு தெரிவித்தது சட்டப்பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது.

Related Post

Rewind 2023: ‘காவாலா’ முதல் ‘காட்டுமல்லி’ வரை – டாப் 10 யூடியூப் வியூஸ் பாடல்கள்

Posted by - December 26, 2023 0
தமிழ் சினிமா 2023-ம் ஆண்டில் அதிக பார்வைகளைப் பெற்ற யூடியூப் பாடல்கள் வரிசையில், ‘ஜெயிலர்’, ‘லியோ’, ‘வாரிசு’, பாடல்கள் முட்டி மோதிக்கொள்கின்றன. பாடல் வரவேற்பை பெற்றது ஒரு…

சென்னையில் இடியுடன் கூடிய கனமழை- காலை 7 மணி வரை நீடிக்கும் என தகவல்

Posted by - August 29, 2023 0
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய…

இடத்தகராறு காரணமாக வழக்கறிஞர் உள்பட 2 பேர் வெட்டிக் கொலை – தென்காசியில் பரபரப்பு

Posted by - June 30, 2023 0
தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் கிராமத்தில் இரு தரப்பினருக்கு இடையே இடத்தகராறு நிலவியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த சம்பவத்தில் வழக்கறிஞர் அசோக் குமார்…

மொழியின் ஆதிக்கத்தை நான் எதிர்க்கிறேன்..கர்நாடக திரைப்பட சபைக்கு கமல் கடிதம்

Posted by - June 3, 2025 0
கன்னட மொழி குறித்த் கருத்திற்கு கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என கமலுக்கு கெடு விதித்துள்ள நிலையில் கன்னட திரைப்பட சங்கத்திற்கு கமல் அறிக்கை வெளியிட்டுள்ளார் தக்…

கோவைக்கு பதில் மயிலாடுதுறை? கமல்ஹாசனால் மார்க்சிஸ்ட் கட்சிக்கு வந்த சிக்கல்

Posted by - February 26, 2024 0
திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் சேரும் பட்சத்தில் கோவை தொகுதி ஒதுக்கப்படும் என தகவல். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கோயம்புத்தூர் தொகுதிக்கு பதிலாக மயிலாடுதுறை தொகுதியை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *