tvkvijay

முதலமைச்சர் விஜய் 6 மணி வரை தலைமைச் செயலகத்தில் இருப்பது எதற்கு தெரியுமா?

99 0

முதலமைச்சர் விஜய் தலைமைச் செயலகத்தில் 6 மணி வரை இருந்து பணியாற்றுவதால் பல்வேறு கோப்புகளில் உடனுக்குடன் கையெழுத்து இடுகிறார்.

தமிழ்நாட்டின் முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பொறுப்பு வகித்து வருகிறார். இவர் முதலமைச்சராக பொறுப்பேற்றது முதலே ஒரு அரசுப்பணியாளர் போல காலை 9 மணிக்கு தலைமைச் செயலகத்திற்கு வரும் விஜய் மாலை 6 மணி வரை தலைமைச் செயலகத்தில் இருக்கிறார்.

தலைமைச் செயலகத்தில் விஜய்:

இதுவரை தமிழ்நாட்டின் முதலமைச்சராக பணியாற்றியவர்கள் யாரும் ஒரு அரசு அதிகாரி போல தலைமைச் செயலகத்தில் பணியாற்றது இல்லை. ஆனால், விஜய் தலைமைச் செயலகத்தில் மாலை வரை இருப்பதால் அரசு அதிகாரிகளும் தங்களது பணி நேரம் முடியும் வரை அலுவலகத்திலே இருந்து பணியாற்றி வருகின்றனர்.

கோப்புகளில் விரைந்து கையெழுத்து:

பொதுவாக, இதற்கு முன்பு இருந்த முதலமைச்சர்களிடம் கோப்புகளில் கையெழுத்து வாங்குவதற்காக அவர்களது அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தால் மீண்டும் அதிகாரிகளிடம் திரும்பி வருவதற்கு மிகவும் தாமதம் ஆவது வழக்கமாக இருந்தது. ஏனென்றால், அவர்கள் பாதி நாட்கள் அல்லது அதற்கும் குறைவான நேரமே தலைமைச் செயலகத்தில் இருப்பதால் கோப்புகளில் கையெழுத்து இடுவது தாமதமாகி வந்தது.

ஆனால், விஜய் தனது முழு பணி நேரத்தையும் தலைமைச் செயலகத்திலே செலவிட்டு வருகிறார். இதனால், அவரது மேசைக்கு அனுப்பும் கோப்புகளை ஆய்வு செய்து உடனடியாக கையெழுத்திட்டு வருகிறார். இதற்கு முன்பு இருந்த கோப்புகள் முதலமைச்சரின் கையெழுத்தைப் பெற்று அதிகாரிகளிடம் மீண்டும் திரும்பி வந்து பணிகளைத் தொடங்குவதில் மிகவும் தாமதம் இருந்து வந்தது. தற்போது விஜய்யின் நடவடிக்கையால் இந்த தாமதம் குறைந்துள்ளது.

செயலாளர்கள், அதிகாரிகள் ஆச்சரியம்:

விஜய்யின் செயல்பாடுகளை கண்டு தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள், ஒவ்வொரு துறையின் செயலாளர்கள், தலைமைச் செயலக ஊழியர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். மேலும், முதலமைச்சரே விரைந்து கோப்புகளில் ஆய்வு செய்து கையெழுத்து இடுவதால் அந்தந்த துறை அமைச்சர்களும் கோப்புகளில் உடனடியாக கையெழுத்து இடுகின்றனர். மேலும், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் முதலமைச்சர் பல உத்தரவுகளை பிறப்பித்து இருப்பதால் பலரும் கவனத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.

பொதுவாக, தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் பலரும் பணி நேரத்தில் அங்கே இருக்கும் தேநீர் கடைகளிலே பல நேரம் பொழுதை போக்கி வருவதாக ஒரு குற்றச்சாட்டு இருந்து வந்தது. ஆனால், தற்போது இந்த நிலையும் மாறி வருவதாக கூறப்படுகிறது.

முதலமைச்சரே தலைமைச் செயலகத்தில் மாலை வரை இருப்பதால் அவர்களும் தங்களது அலுவலக நேரங்களில் அலுவலக பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அலுவலக பணிகளும் வேகமாக நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.

Related Post

நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்கை: சென்னையில் 3 ஆஸ்பத்திரிகளில் சிறப்பு வார்டுகள் அமைப்பு

Posted by - September 15, 2023 0
சென்னை: நிபா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ள நிலையில் முன்எச்சரிக்கையாக அரசு மருத்துவமனைகளில் அதற்கான சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி…
Generated Image November 04 2025 4 29PM

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவியை மீட்பதில் தாமதம் ஏன்? – காவல் ஆணையர் சரவண சுந்தர் விளக்கம்!

Posted by - November 4, 2025 0
கோவையில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவியை மீட்க 5 மணி நேரம் தாமதமானது ஏன் என்பது குறித்து மாநகரக் காவல் ஆணையர்  சரவணசுந்தர் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து …

அம்பத்தூர் அருகே கஞ்சா போதையில் இளைஞர்கள் வெறிச்செயல் – போலீஸ் வலைவீச்சு!

Posted by - September 16, 2025 0
மாமூல் தர மறுத்த மளிகைக்கடை உரிமையாளர் கர்ப்பிணி மனைவியை அரிவாளால் வெட்டிய கும்பல்! சென்னை அம்பத்தூர் அருகே மாமூல் தர மறுத்த மளிகைக்கடை உரிமையாளர், அவரது கர்ப்பிணி…

கூட்டணி கட்சி தலைவர்கள் குறித்து கருத்து தெரிவித்தால் நடவடிக்கை – பாஜக நிர்வாகிகளுக்கு சிடிஆர் நிர்மல் குமார் எச்சரிக்கை

Posted by - December 28, 2022 0
நேற்று பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உடனான ஆலோசனைக்கு பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாஜக நிர்வாகிகள் தங்களின் சொந்த கருத்துக்களை கட்சியின் கருத்து போல சமூக…
%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95

ADMK: கர்நாடகத்தவருக்கு தமிழக அரசின் பிரதிநிதி பதவியா? உரிமை காக்கப்படுமா? தவெக-வை விளாசும் அதிமுக

Posted by - June 27, 2026 0
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஜனநாயகன் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா நியமிக்கப்பட்டிருப்பதற்கு கண்டனம் குவிந்து வருகிறது. தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஜனநாயகன் தயாரிப்பாளர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *