மரணத்தை தள்ளிப்போட தினமும் 4,000 அடிகள் நடக்க வேண்டும் – ஆய்வு

243 0

வார்சா:

எந்த வயதினரும் செய்யக்கூடிய உடற்பயிற்சி நடைபயிற்சியாகும். ஓடுவதன் மூலம் உருவாகும் காயங்களை நடைப்பயிற்சியில் தவிர்க்க முடியும். நாம் நடக்கும் போது ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்கின்றோம். இதனால் நமக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. நடைபயிற்சி குறைந்த அழுத்தத்தை எலும்புகளுக்கும் தசைகளுக்கும் கொடுப்பதால், சிறந்த ஆரோக்கியத்தை தரும் உடற்பயிற்சியாக பின்பற்றப்பட்டு வருகிறது.சாப்பிட்டதும் வெறும் 100 அடிகள் நடைபயிற்சி.. அதனால் கிடைக்கும் நன்மைகள்  தெரியுமா?

உட்கார்ந்த வாழ்க்கை முறை பல்வேறு நோய் பாதிப்புக்கு மூல காரணமாக விளங்குகிறது. உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கி கொள்ளாதவர்களுக்கு டைப் 2 நீரிழிவு, இதய பாதிப்பு, புற்றுநோய் மற்றும் நாள்பட்ட நோய் பாதிப்பு அபாயம் அதிகரிக்கிறது என உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது.

இந்நிலையில், தினமும் 4,000 அடிகள் நடப்பவர்கள் மரணம் முதல் இதய நோய் பாதிப்பு வரை தள்ளி போடலாம் என போலந்து மருத்துவ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டுள்ளது. போலந்தில் உள்ள லாட்ஸ் மருத்துவ பல்கலைக்கழகம் சுமார் 2,27,000 பேரின் தரவுகளை வைத்து ஆய்வு ஒன்றை நடத்தியது. ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டுள்ளதாவது: அதிக தூரம் நடைபயிற்சி மேற்கொள்வோருக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது. ஒருவர் இவ்வளவு தூரம்தான் நடக்க வேண்டுமென்பதற்கு உச்சபட்ச அளவீடுகள் இல்லை.இருப்பினும், இது உங்கள் உடல் திறன் மற்றும் ஆரோக்கியத்தைப் பொறுத்தது.

இதய நோய் பாதிப்பில் இருந்து பாதுகாக்க தினமும் 2,337 அடிகள் நடப்பது. அதாவது 25 நிமிடங்கள் நடைபயிற்சி மேற்கொள்வது அவசியமானது. இளம் வயதில் ஏற்படும் மரணத்தைத் தடுக்க தினமும் 3,967 அடிகள் நடப்பது, அதாவது 40 நிமிடங்கள் நடைபயிற்சி செய்வது அவசியம். ஒவ்வொரு 1,000 அடிகள் அதிகரிப்பிற்கும் 15 சதவீதம் அளவுக்கு அபாயம் குறைகிறது. 60 வயதிற்கு மேற்பட்டோர் எனில் தினமும் 6,000 முதல் 10,000 அடிகள் நடப்போருக்கு, அதே வயதுடைய நடைபயிற்சி மேற்கொள்ளாதவர்களுடன் ஒப்பிடுகையில் 42 சதவீதம் அபாயம் குறைவாக இருக்கும். இது ஆண், பெண் என இருபாலினத்துக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

பாகிஸ்தானில் ஒரு கிலோ நெய் ரூ.60 ஆயிரம் கோடி- வாய் உளறி பேசிய இம்ரான்கானால் சர்ச்சை

Posted by - February 17, 2023 0
இஸ்லாமாபாத்: இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. பெட்ரோலிய பொருட்கள் இதுவரை இல்லாத அளவுக்கு…

பொருளாதார தடைகளுக்கு பயந்த நாடல்ல இந்தியா!

Posted by - September 8, 2025 0
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டி, இந்தியா மீது அமெரிக்கா 50 சதவீத வர்த்தக வரி விதித்துள்ளதன் மூலம், அந்நாட்டுக்கு ஏற்றுமதி செய்து வந்த…

இந்திய பெருங்கடலில் அதி பயங்கர சூறாவளி- மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு

Posted by - February 21, 2023 0
இந்திய பெருங்கடலில் அதிபயங்கர வெப்பமண்டல சூறாவளி உருவாகியிருப்பதாக சர்வதேச விண்வெளி மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் இந்தியப் பெருங்கடல் தீவான மொரிஷியசை நோக்கிச் செல்கிறது. புயல் இன்று…

உலகம் முழுவதும் திடீரென முடங்கிய பேஸ்புக், இன்ஸ்டாகிராம் – பயனர்கள் தவிப்பு.!

Posted by - March 6, 2024 0
பேஸ்புக்கை விட ரீல்ஸ்கள் நிறைந்த இன்ஸ்டா முடங்கியது பலரையும் ஏமாற்றம் அடைய வைத்தது. மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் முடங்கியதால், பயனாளர்கள் தவிப்புக்கு ஆளாகினர்.…

ஓடும் காரில் இருந்து பணத்தை அள்ளி வீசிய அமெரிக்க நபர்

Posted by - April 15, 2023 0
அமெரிக்காவை சேர்ந்த நபர் கோலின் தேவிஸ் மெக்கர்தி (38). இவர், கடந்த செவ்வாய் கிழமை அன்று இரவு அங்குள்ள நெடுஞ்சாலை அருகில் தனது காரில் சென்றுக் கொண்டிருந்தபோது…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *