மீண்டும் அமலுக்கு வந்த Containment Zone, lockdown வார்த்தைகள்! கொரோனா- நிபா இடையே இத்தனை ஒற்றுமைகளா?

219 0

திருவனந்தபுரம்:

கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட போது கேட்ட லாக்டவுன், கன்டெய்ன்மென்ட் ஜோன் போன்ற வார்த்தைகள் கேட்ட நிலையில் தற்போது நிபா வைரஸுக்கும் அதே வார்த்தைகள் கேட்கின்றன.

2019 ஆம் ஆண்டு இறுதியில் உலக நாடுகளை ஆட்டி படைத்த கொரோனா 3 ஆண்டுகளாகியும் இன்னும் முழுசாக விலகாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்து வருகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு கன்டெய்ன்மென்ட் ஜோன், ஐசோலேஷன், லாக்டவுன், ஹாட்ஸ்பாட் உள்ளிட்ட வார்த்தைகளை கேள்விப்பட்டிருக்கிறோம்.

எங்கெல்லாம் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கிறதோ அந்த பகுதிகள் கன்டெய்ன்மென்ட் ஜோன் (கட்டுப்பாட்டு மண்டலங்கள்) என அழைக்கப்படுகிறது. இந்த பகுதியிலிருந்து மக்கள் வெளியே வரவும் கூடாது, வெளியாட்கள் உள்ளே செல்லவும் முடியாது. தடுப்புகள் வைக்கப்பட்டிருக்கும்.பழைய மாதிரியே நடக்குதே.. சீனாவில் கட்டுக்கடங்காமல் பரவும் கொரோனா! தீவிர ஊரடங்கு.. மக்கள் கொந்தளிப்பு | Increase in the spread of Corona, Protest against lockdown in ...

கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் மற்றவர்களுக்கு பரவாமல் தடுப்பதற்கே தனிமைப்படுத்திக் கொள்ளுதல் ஆகும். கொரோனா பாதிப்பின் பாசிட்டிவிட்டி ரேட் 10 ஐ தாண்டியதும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவிடாமல் நோய் பரவலை தடுக்கும் யுத்திதான் லாக்டவுன். இத்தகைய வார்த்தைகள் 2021 ஆம் ஆண்டு வரை கேட்டுள்ளோம். அதன்பின்னர் படிப்படியாக கொரோனா விதிகள் திரும்ப பெறப்பட்டன. இந்த நிலையில் தற்போது நிபா வைரஸ் என்ற உயிர் கொல்லி கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கேரளா, புதுச்சேரியில் நிபா பாதிப்பில் 4 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்த நிபா வைரஸானது மலேசியாவில்தான் முதலில் கண்டறியப்பட்டது. இந்த நோய் பாதித்த மனிதர்களிடம் இருந்து உடல்நலம் பாதித்த பன்றிகள், அதன் திசுக்களில் இருந்து பரவி வருகிறது. நிபா வைரஸ் பாதித்த நபர்களுக்கு காய்ச்சல், தலைவலி, வாந்தி, தொண்டையில் எரிச்சல், தசைகளில் வலி உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்படும். இந்த வைரஸ் பாதித்தவுடன் நோய் அறிகுறிகள் தோன்றுவதற்கு 4 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை ஆகும். சிலருக்கு இந்த நோய் பாதிப்பு அறிகுறியாக மயக்கம் ஏற்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருப்பதால் அடுத்த 10 நாட்களுக்கு கொரோனா கால ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பொதுமக்கள் நடமாடக் கூடாது. கோயில் திருவிழாக்கள் உள்ளிட்ட அனைத்து வழிபாடுகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கொரோனாவுக்கும் நிபா வைரஸுக்கும் இருக்கும் ஒற்றுமையை பார்ப்போம்:
  • கொரோனா, நிபா பாதிப்பு ஏற்பட்டால் காய்ச்சல், சளி, தொண்டை வலி ஏற்படுகிறது.
  • கொரோானாவை போலவே நிபாவை கண்டறிய RT PCR எனும் சோதனை செய்யப்படுகிறது
  • கொரோனாவை போல் நிபாவும் நிமோனியாவை உருவாக்குகிறது.
  • கொரோனாவை போல் நிபாவும் நுரையீரல் நோய்களை உண்டாக்குகிறது.
  • முதலில் கொரோனாவுக்கும் தடுப்பூசி இல்லாத நிலையில் பிறகு கண்டறியப்பட்டது. அதை போல் நிபாவுக்கும் மருந்து இல்லை.
  • நிபாவும் கொரோனாவை போல் உயிரிழப்பை ஏற்படுத்துகிறது.
  • கொரோனாவும் நிபாவும் வேரியண்ட்களை மாற்றுகிறது.

Related Post

இந்தியாவின் 2ஆம் உயர் பதவி; தமிழ்நாட்டுக்கு கிடைத்த கவுரவம்; குடியரசு துணை தலைவரானார் சி.பி.ராதாகிருஷ்ணன்!

Posted by - September 10, 2025 0
சி.பி.ராதாகிருஷ்ணன் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு, இந்தியாவின் இரண்டாவது உயரிய பதவியான குடியரசு துணைத் தலைவர் ஆகியுள்ளார். இந்தியத் திருநாட்டின் குடியரசுத் துணைத் தலைவராக தேசிய…

முழு சுதந்திரம் கொடுத்த மோடி.. இறங்கி அடிக்க தயாராகும் இந்திய ராணுவம்.. உத்தரவு என்ன.?

Posted by - April 30, 2025 0
பிரதமர் தலைமையில் நேற்று நடந்த பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மோடி போட்ட உத்தரவு என்ன தெரியுமா.? கடந்த 22-ம் தேதி…

ரயில் விபத்து.. தமிழகத்தில் இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு

Posted by - June 3, 2023 0
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. ஒடிசா ரயில் விபத்தையொட்டி தமிழகத்தில் இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.…

ஸ்டார்லிங்க் இன்டர்னெட் ஸ்பீடெல்லாம் சூப்பர் தான்.. ஆனா பில் எவ்வளவு தெரியுமா.?!!

Posted by - March 12, 2025 0
இந்தியாவில், ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் ஸ்பேஸ் எக்ஸ்ஸின் ஸ்டார்லிங்க் இணைய சேவையை வழங்க உள்ளன. இந்த அதிவேக இன்டர்நெட் சேவைக்கான விலை எவ்வளவு தெரியுமா.? இந்தியாவில்,…

ராபிடோ புக் செய்த கேரள பெண்.. வன்கொடுமை செய்த ட்ரைவர்.. அதிர்ச்சி சம்பவம்!

Posted by - November 30, 2022 0
கார் டாக்சியில் பலாத்காரம், கூட்டு பலாத்காரம் என்ற செய்திகள் வந்த நிலையில் பைக் டாக்ஸி இதுவரை பாதுகாப்பானதாக கருதப்பட்டது. ஆனால் தற்போதைய சம்பவத்திற்கு பிறகு அதுவும் கேள்விக்குறியாகியுள்ளது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *