யாருக்கும் பாதுகாப்பில்லாத ஆட்சி.. திமுக அரசு மீது விஜய் தாக்குதல்

273 0

தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் தீவிர அரசியலில் இறங்கியுள்ள நிலையில் மக்களின் பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்தும், அறிக்கைகள் வெளியிட்டும் வருகிறார்.

அந்த வகையில், சமீபத்தில் தனது முதல் மாநாட்டில் வாரிசு அரசியல் என்று ஆளுங்கட்சியான திமுகவை குற்றம்சாட்டியிருந்த நிலையில், இது பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. அடுத்து இன்னும் சில நாட்களில் பாஜக தலைவர் அண்ணாமலை போல் திமுக ஊழல் பட்டியலை வெளியிடப்போவதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று மருத்துவமனைக்குள் வைத்து ஒரு நபர் மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் தன் எக்ஸ் தள பக்கத்தில் அரசு ஊழியர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது என திமுக அரசை குற்றம்சாட்டியுள்ளார்.

விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

’’தமிழ்நாட்டில் பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள் சட்டம் ஒழுங்கின் சீர்கேட்டையே காட்டுகிறது என்று எங்கள் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் வாயிலாகக் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், அரசு ஊழியர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது என்பது தினம் தினம் நிகழும் குற்றச் செயல்களால் நிரூபணமாகிறது.

சென்னை கிண்டியில் உள்ள உயர் சிறப்பு அரசு மருத்துவமனையில், புற்றுநோய் மருத்துவர் திரு. பாலாஜி அவர்கள் இன்று கத்தியால் குத்தப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கும் இது போன்ற அரசு உயர் சிறப்பு மருத்துவமனையில், அரசு மருத்துவரின் உயிருக்கே பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டு இருப்பதற்குத் தமிழக அரசின் மெத்தனப் போக்கே காரணம். கத்திக் குத்தில் படுகாயம் அடைந்த மருத்துவர் திரு. பாலாஜி அவர்கள், விரைவில் பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன்.

காலம் நேரம் பார்க்காது கடுமையாக உழைக்கும் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் தினந்தோறும் நிகழும் பல்வேறு குற்ற நிகழ்வுகள், பொதுமக்களிடையே அச்சத்தை உருவாக்கியுள்ளன. சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய ஆட்சியாளர்கள் இனியாவது விழித்துக்கொண்டு மக்களைப் பாதுகாக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.இந்த சம்பவத்தில் ’தனது தாயாருக்கு சரியாக சிகிச்சை தராததால், மருத்துவரை கத்தியால் குத்தியதாகவும், அதற்கு முன்னதாக சரியாக சிகிச்சை அளிக்காதது பற்றி மருத்துவரிடம் கேட்டதுடன், சுமான் விடமாட்டேன் என்று கூறியதாக பிடிபட்ட விக்னேஷ் என்பவர் போலீஸில் வாக்குமூலம் அளித்துள்ளது’ குறிப்பிடத்தக்கது.

Related Post

Generated Image November 27 2025 10 36AM

விஜய் கட்சியில் ஜெயலலிதாவின் தளபதி செங்கோட்டையன்… கொங்கு மண்டலத்தில் கெத்து காட்டும் தவெக

Posted by - November 27, 2025 0
#Sengottaiyan அதிமுக மூத்த நிர்வாகியும், மாஜி அமைச்சருமான செங்கோட்டையன், அதிமுகவை ஒருங்கிணைக்க எடுத்த நடவடிக்கைகள் தோல்வி அடைந்ததையடுத்து தனது ஆதரவாளர்களுடன் விஜய் முன்னிலையில் தவெகவில் இன்று இணைந்தார்.…
CHT

எதிர்க்கட்சிகளுக்கு செங்கோட்டையன் வார்னிங்!

Posted by - February 9, 2026 0
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் அரசியல் களத்தில் விறுவிறுப்பாக செயல்பட்டு வரும் நிலையில் தலைவர் விஜய் இதுவரை செய்தியாளர்களை சந்திக்காமல் இருப்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.…

நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியை யாராலும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை – சீமான்

Posted by - February 7, 2024 0
நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியை யாராலும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை – சீமான் நாம் தமிழர் கட்சிக்கு எதிரான மத்திய பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்த அனைவருக்கும்…
tn

🔴LIVE | TN Budget 2026 | தொடங்கியது இடைக்கால பட்ஜெட் தொடக்கம் | MKStalin | TN Assembly

Posted by - February 17, 2026 0
தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட்டில் துறை வாரியாக ஒதுக்கப்பட்டுள்ள, நிதி விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. Tamil Nadu Interim Budget 2026: தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட்டில் உயர்கல்வித்துறைக்கு…

2018ல் அரசியல் எண்ட்ரி.. 2022ல் அமைச்சர்.. உதயநிதி ஸ்டாலினின் அரசியல் பயணம்!

Posted by - December 13, 2022 0
Udhayanidhi : அண்மையில், திமுக இளைஞரணி செயலாளராக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டார். இதை தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்க உள்ளதாகவும், அவருக்கு சிறப்பு திட்ட…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *