வங்காளதேசத்தில் தீப்பிடித்து எரிந்த ரெயில்: 5 பேர் உடல் கருகி பலி

301 0

வங்காளதேசம் நாட்டின் தலைநகர் டாக்காவிற்கு நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள ஜேஸ்சோர் நகரில் இருந்து பெனாபோல் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது. திடீரென அந்த ரெயிலில் தீப்பிடித்தது. இந்த தீ விபத்து மளமளவென நான்கு பெட்டிகளில் பரவியது.

இதனால் பயணிகள் அலறி அடித்து வெளியேறினர். இருந்த போதிலும் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நாளை வங்காளதேசத்தில் தேர்தல் நடைபெற இருக்கிறது. தேசிய தேர்தலை புறக்கணிப்போம் எனக் கூறிவரும் எதிர்க்கட்சியினர் இதுபோன்ற தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

வங்காளதேசத்தில் தீப்பிடித்து எரிந்த ரெயில்: 5 பேர் உடல் கருகி பலி | 5 Killed  In Bangladesh Train Fire Police Suspect Arson Ahead Of Polls
கடந்த மாதம் இதுபோன்று நடைபெற்ற ரெயில் தீ விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். அப்போது போலீசார் மற்றும் அரசு எதிர்க்கட்சியான வங்காளதேசம் தேசியவாத கட்சி மீது குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதேவேளையில் வங்காளதேச தேசியவாத கட்சி குற்றச்சாட்டை மறுத்திருந்தது. ஆளும்கட்சியின் அடக்குமுறைக்கு சாக்குபோக்கான குற்றச்சாட்டு எனவும் தெரிவித்திருந்தது. வங்காளதேசத்தில் நாளை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதை முக்கிய எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ளது. பிரதமர் ஷேக் ஹசினா ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் கடந்த வருடம் போராட்டம் செய்தன. இதில் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

Related Post

12 பிரம்படி, 18 வருடங்கள் சிறை: பணிப்பெண்ணிடம் அத்துமீறிய இந்தியருக்கு, சிங்கப்பூரில் தண்டனை

Posted by - August 8, 2023 0
சிங்கப்பூரில் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுவது வழக்கம். சமீபத்தில் பல மனித உரிமை அமைப்புகளின் எதிர்ப்பையும் மீறி போதை மருந்து கடத்தல் வழக்கில் ஒரு பெண்ணுக்கு…

படுக்கையில் சிறுநீர் கழித்த காதலன்.. கடுப்பான காதலி.. கத்திக்குத்தில் முடிந்த பிரேக் அப் பார்ட்டி.!

Posted by - January 21, 2023 0
படுக்கையிலேயே சிறுநீர் கழித்த ஆத்திரத்தில் இளைஞரை அவரது காதலி கத்தியால் குத்திய சம்பவம் அமெரிக்காவில் அரங்கேறியுள்ளது. அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தின் ஈஸ்ட் படேன் ரோக் பகுதியில் வசிப்பவர்…
qq

எந்தப் பிரச்சினைக்கும் போர் தீர்வாகாது!

Posted by - March 4, 2026 0
ஈரான் முதலில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததற்கான தகவல்கள் இல்லை என அமெரிக்கப் பாதுகாப்பு அமைப்பான பென்டகன் கூறியிருக்கிறது. ஈரானால் இஸ்ரேலுக்குத்தான் அச்சுறுத்தலே தவிர, அமெரிக்காவுக்கு அல்ல என்று…

ஜப்பான் கதிரியக்க நீரை வெளியேற்றியதும் சீனா எடுத்த அதிரடி முடிவு…!

Posted by - August 24, 2023 0
புகுஷிமா அணுஉலை நிலையத்தில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீரை ஜப்பான் இன்று பசிபிக் கடலில் வெளியேற்றியது. ஜப்பான் வெளியேற்றிய நிலையில், அந்நாட்டு கடல் உணவுகள் இறக்குமதிக்கு, சீனாவின்…
Generated Image January 01 2026 12 08PM

ஆங்கில புத்தாண்டு – உலகம் முழுவதும் கோலாகல கொண்டாட்டம்!

Posted by - January 1, 2026 0
உலகம் முழுவதும் புத்தாண்டு பிறந்ததையடுத்து, அனைத்து நாடுகளிலும் கொண்டாட்டங்கள் களைகட்டின. துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிஃபா, பிரமிக்க வைக்கும் அளவுக்கு வண்ண…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *