வாழைக்காயை வெச்சு செட்டிநாடு ஸ்டைலில் குருமா செய்யுங்க.. வீடே சும்மா கமகமக்கும்..

314 0

புரட்டாசி மாதம் என்பதால் பலரது வீடுகளில் அசைவ உணவுகளை சாப்பிடமாட்டார்கள். இப்படி அசைவ உணவுகளை சாப்பிடாமல் இருப்பவர்கள், அசைவ உணவிற்கு இணையான சுவையைத் தரக்கூடிய வகையில் சைவ உணவுகளை சமைத்து சாப்பிடுவார்கள். நீங்களும் அப்படி அசைவம் சாப்பிடமாட்டீர்களா? ஆனால் வாய்க்கு விருந்தளிக்கும் வகையில் சாதம், சப்பாத்தி, பூரிக்கு ஒரு சுவையான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் செட்டிநாடு ஸ்டைல் வாழைக்காய் குருமாவை செய்யுங்கள். இது மிகவும் சுவையாகவும், செய்வதற்கு ஈஸியாகவும் இருக்கும்.

உங்களுக்கு செட்டிநாடு ஸ்டைல் வாழைக்காய் குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு ஸ்டைல் வாழைக்காய் குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.வாழைக்காயை வெச்சு செட்டிநாடு ஸ்டைலில் குருமா செய்யுங்க.. வீடே சும்மா  கமகமக்கும்.. | Chettinad Vazhakkai Kurma Recipe - Tamil BoldSky

தேவையான பொருட்கள்:

* வாழைக்காய் – 1 (தோலுரித்து துண்டுகளாக்கப்பட்டது)

* பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

* பூண்டு – 4 பல் (பொடியாக நறுக்கியது)

* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

* உப்பு சுவைக்கேற்ப

* துருவிய தேங்காய் – 1/2 மூடி

வறுத்து அரைப்பதற்கு…

* துவரம் பருப்பு – 1 டீஸ்பூன்

* மல்லி விதை – 1 டீஸ்பூன்

* சோம்பு – 1 டீஸ்பூன்

* வரமிளகாய் – 3

* நல்லெண்ணெய் – 1 டீஸ்பூன்

தாளிப்பதற்கு…

* நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்

* கடுகு – 1/4 டீஸ்பூன்

* சீரகம் – 1/4 டீஸ்பூன்

* பெருங்காயத் தூள் – 1 பெரிய சிட்டிகை

* கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் துருவிய தேங்காயை போட்டு, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள எண்ணெய் ஊற்றி சூடானதும், துவரம் பருப்பு, மல்லி விதை, சோம்பு, வரமிளகாய் சேர்த்து குறைவான தீயில் வைத்து, பொன்னிறமாக வறுத்து இறக்கி, குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின் அதில் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

* அதன் பின் துண்டுகளாக்கப்பட்ட வாழைக்காயை சேர்த்து கிளறி, மூடி வைத்து 5 நிமிடம் குறைவான தீயில் வைத்து வாழைக்காயை வேக வைக்க வேண்டும்.

* பின்னர் மூடியைத் திறந்து, அதில் மஞ்சள் தூள், சுவைக்கேற்ப உப்பு, வதக்கி அரைத்து வைத்துள்ள மசாலா, 1/2 கப் நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து, வாழைக்காயை நன்கு மென்மையாகும் வரை வேக வைக்க வேண்டும். முக்கியமாக அவ்வப்போது அடிப்பிடிக்காமல் இருக்க கிளறி விட வேண்டும்.

* பிறகு தேங்காய் விழுதை சேர்த்து கிளறி, 1/2 கப் நீரை ஊற்றி, 2-3 நிமிடம் குறைவான தீயில் வைத்து வேக வைத்து இறக்கினால், சுவையான செட்டிநாடு ஸ்டைல் வாழைக்காய் குருமா தயார்.

Related Post

Generated Image November 13 2025 7 54PM 1

சாதி வெறி பிடித்தவர்… பெண்களிடம் அத்துமீறல்… திவாகருக்கு ரெட் கார்ட்…

Posted by - November 13, 2025 0
Bigg Boss 9: சக போட்டியாளர் மீது சாதிய ரீதியிலான கருத்துக்களை முன்வைப்பதாலும், பெண் போட்டியாளர்களிடம் அத்துமீறுவதாலும் திவாகருக்கு ரெட் கார்ட் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை…

நடிகையுடனான விவாகரத்திற்கு பிறகு புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள விஷ்ணுகாந்த்- இதோ முழு விவரம்

Posted by - July 27, 2023 0
நடிகர் விஷ்ணுகாந்த் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சிப்பிக்குள் முத்து என்ற தொடர் மூலம் பிரபலமானவர் நடிகர் விஷ்ணுகாந்த். இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவந்த ஸ்வேதா…

மணிமேகலையை தொடர்ந்து குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியில் இருந்து இந்த கோமாளி வெளியேறுகிறாரா?- ரசிகர்கள் ஷாக்

Posted by - March 14, 2023 0
விஜய் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படுவது குக் வித் கோமாளி 4 ஷோ. சமையல் ப்ளஸ் காமெடி என இரண்டும் கலந்ததாக நிகழ்ச்சி உள்ளது. அதிலும்…

சினிமாவை தாண்டி மனோபாலாவிற்கு இருந்து வந்த பழக்கம்- வெளிப்படுத்திய பிரபலங்கள்

Posted by - May 4, 2023 0
வெடவெடனான உடம்பை வைத்தே பல காமெடி காட்சிகளில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் இயக்குனரும், நடிகருமான மனோபாலா . கடந்த சில வாரங்களாக உடல்நலக்…

செல்பி எடுத்து அசத்தும் விலங்குகள் !

Posted by - April 10, 2024 0
செயற்கை நுண்ணறிவு மூலம் விலங்குகள் செல்பி எடுப்பது போன்ற புகைப்படங்களைப் பகிரும் நெட்டிசன்கள். தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இன்றைய காலகட்டத்தில் இன்றைய இளைஞர்கள் தங்கள் முகத்தைக் கண்ணாடியில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *