விஜயகாந்திடம் வடிவேலுவிற்கு எப்படி சண்டை வந்தது.. வேலியில் போன ஓணானை வேட்டியில் எடுத்து போட்டுக்கொண்டு வடிவேலு

276 0

விஜயகாந்த் – வடிவேலு

மறைந்த நடிகர் விஜய்காந்திற்கும் வடிவேலுவுக்கும் இடையே கடும் சண்டை இருப்பதை தமிழக மக்கள் அறிந்த விஷயம் தாம்.

இவர்களுக்கு இடையே சண்டை இருப்பதை அறியும் பலருக்கும் எதனால் இவர்கள் இருவருக்கும் இடையே இவ்வளவு பெரிய விரிசல் ஏற்பட்டது என்ற காரணம் தெரியாது. அது என்னவென்று தான் தற்போது பார்க்கப்போகிறோம்.

இந்த சம்பவம் குறித்து ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால் வேலியில் போன ஓணானை வேட்டியில் எடுத்து போட்டுக்கொண்டார் வடிவேலு என்று தான் சொல்ல முடியும். இதுகுறித்து விஜயகாந்தின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான நடிகர் தியாகு பேசியுள்ளார்.

மேடையில் நகைச்சுவை செய்து அசத்திய விஜயகாந்த், வடிவேலு..

சண்டை துவங்கிய இடம்

“ஒரு நாள் விஜயகாந்த் வக்கீல் இறந்துவிட்டார். வடிவேலுவின் வீட்டிற்கு எதிரே தான் விஜயகாந்தின் வக்கீல் வீடு இருக்கிறது. வக்கீல் வீட்டிற்கு துக்கம் விசாரிக்க வந்த சிலர் வடிவேலுவின் வீட்டிற்கு அருகே வண்டிகளை பார்க் செய்திருந்தார்கள்.

இதை சாதாரண விஷயமாக பொறுத்துக்கொள்ளாத வடிவேலு என் வீட்டு பக்கம் ஏன் வண்டியை நிறுத்தறீங்க, எல்லா வண்டியையும் எடுங்க’ என கோவமாக சத்தம் போட்டுள்ளார். ‘ஏம்ப்பா, சாவு வீட்டுக்கு வந்தவங்க கொஞ்ச நேரத்துல கிளம்பிடுவாங்க. அது வரைக்கும் கூட பொறுத்துக்க கூடாதா. இப்படி கொச்சையா பேசறியே, இது நியாயமா?’ என கேட்டுள்ளார். இதன்பின் அங்கு கலவர சூழல் ஏற்பட்டுள்ளது.

இதன்பின் உடனடியாக எனக்கு போன் செய்து ‘விஜயகாந்த் ஆட்கள் என்னிடம் வம்பு இழுக்கறாங்க’ என கூறி புகார் செய்தார். பிறகு இந்த விஷயம் அன்று முதல்வராக இருந்த கருணாநிதியின் காதுக்கும் சென்றது. விஜயகாந்தை பழிவாங்க திமுகவிற்கு வடிவேலு பிரச்சாரம் செய்ததற்கு இந்த சம்பவம்தான் காரணம்” என கூறியுள்ளார்.

Related Post

“10 படங்கள் பண்ணிட்டு சினிமாவை விட்டு விலகிடுவேன்” – ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்த லோகேஷ் கனகராஜ்

Posted by - June 20, 2023 0
முதல் இரண்டு திரைப்படங்களில் சொல்லி வைத்து சிக்ஸர் அடித்ததால் மூன்றாவது திரைப்படத்திலேயே நடிகர் விஜய்யை இயக்கும் வாய்ப்பை பெற்ற லோகேஷ் கனகராஜ். 20 வருஷமெல்லாம் சினிமாவில் இருக்க…

வெளிநாட்டில் அநியாயமாய் இறந்து போன மயிலு.. அதிர்ச்சியை கிளப்பும் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்

Posted by - April 10, 2023 0
எத்தனையோ திரைப்படங்களில் நடித்திருந்தாலும் மயிலு என்ற கேரக்டர் தான் ஸ்ரீதேவியின் அடையாளமாக இருக்கிறது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என கொடி கட்டி பறந்த…

ரஜினியின் ஜெயிலர் படத்தை பார்க்க வந்த தனுஷ், அனிருத்- திரையரங்கில் இசையமைப்பாளர் செய்த வேலை, வீடியோ

Posted by - August 10, 2023 0
ஜெயிலர் இனி தமிழ் சினிமாவில் 2 வாரங்களுக்கு ஜெயிலர் படம் பற்றி தான் அதிகம் பேசப்படும். காரணம் ரஜினி நடிப்பில் இன்று வெளியாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் அமோகமான வரவேற்பை…

வெண்ணிலா கபடி குழு பட நடிகர் திடீர் உயிரிழப்பு- ரசிகர்கள் ஷாக்

Posted by - December 3, 2022 0
வெண்ணிலா கபடி குழு சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால், சரண்யா மோகன் நடிக்க 2009ம் ஆண்டு வெளியான திரைப்படம் வெண்ணிலா கபடி குழு. விளையாட்டை மையமாக கொண்டு…

ரஜினியின் 171 படத்தை இயக்க கோடியில் சம்பளம் வாங்கும் லோகேஷ் கனகராஜ்!..எவ்ளோ தெரியுமா?

Posted by - August 29, 2023 0
ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த ஜெயிலர் படத்திற்கு ரசிகர்கள் மாபெரும் வரவேற்பு கொடுத்து வருகின்றனர். தற்போது வரை இப்படம் ரூபாய் 575…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *