“விடியா அரசு என்று கூறிக்கொண்டிருப்பவர்கள் விடியா மூஞ்சிகள்” – முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

247 0

தானும், துணை முதலமைச்சரும், அமைச்சர்களும் களத்தில் இருப்பது எதிர்க்கட்சிகளுக்கு வயிற்றெரிச்சலாக இருப்பதாக முதலமைச்சர் தெரிவித்தார்.

அவதூறு பரப்பி ஆதாயம் தேடலாம் என சிலர் மலிவான அரசியல் செய்து வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

சென்னை, வால்டாக்ஸ் சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வடசென்னை வளர்ச்சித் திட்ட விரிவாக்கப் பணிகளின் கீழ், ரூ. 1,383 கோடி மதிப்பீட்டிலான 79 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “வெள்ளத்தில் இருந்து சென்னை ஒரே நாளில் மீண்டு வந்தது போல் புயல் பாதிப்பில் இருந்தும் நாம் மீண்டு வருவோம். கொளத்தூர் தொகுதியை நான் பார்வையிட்டபோது, அங்கே மழைநீர் தேங்கவில்லை” என ஒரு பெரியவர் சொன்னதாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “அவர்கள் (எதிர்க்கட்சி) வழங்கக்கூடிய நிவாரணப் பொருட்களில் ஸ்டிக்கரை ஒட்டுவார்கள். அந்தக் காலமெல்லாம் தற்போது மலையேறிப்போச்சு” எனக் கூறினார். மேலும் தானும், துணை முதலமைச்சரும், அமைச்சர்களும் களத்தில் இருப்பது எதிர்க்கட்சிகளுக்கு வயிற்றெரிச்சலாக இருப்பதாகத் தெரிவித்தார்.

மேலும் அவதூறு பரப்பி ஆதாயம் தேட சிலர் மலிவான அரசியலில் ஈடுபடுகிறார்கள் என்றும் தென்சென்னைக்கு நிகராக வடசென்னையும் வளர்ச்சியடைய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் கூறினார்.

Related Post

டாஸ்மாக் ஊழல் தொடர்பாக விசாகனிடன் 2-வது நாளாக ED விசாரணை!

Posted by - May 17, 2025 0
டாஸ்மாக் ஊழல் தொடர்பாக டாஸ்மாக் நிறுவன மேலாண் இயக்குநர் விசாகனிடம் 2-வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகளில் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறை நடத்திய…

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அவலம்.

Posted by - December 12, 2025 0
மயிலாடுதுறை மாவட்ட தலைமை மருத்துவமனையில் நிலவும் சேவை குறைபாடுகளை களைய வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்ட அரசு தலைமை…

துபாயில் வீடா, கார் ரேஸ் எனக்கா? – கொந்தளித்து பேசிய நிவேதா பெத்துராஜ்

Posted by - March 6, 2024 0
தொடர்ந்து கண்ணியமான மற்றும் அமைதியான வாழ்க்கையை வாழ விரும்புவதாகவும், தன் மீது அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். சென்னையில் கார் பந்தயம்…

இதை கூறி தேர்தலை சந்தியுங்கள் பார்க்கலாம்.. இது எங்களின் சவாலாகும்

Posted by - January 31, 2025 0
கடந்த 1987ல் கள் இறக்கவும், குடிக்கவும் தடை விதிக்கப்பட்டது. இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என 20 ஆண்டுகளாக போராடி…

சொத்து வரியை வரும் 30-ந்தேதிக்குள் செலுத்த வேண்டும்: சென்னை மாநகராட்சி உத்தரவு

Posted by - September 27, 2023 0
சென்னை: சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரி என்பது பிரதான வருவாயாக உள்ளது. இதனால், நடப்பு அரை நிதியாண்டுக்கான சொத்து வரியை செலுத்த சென்னை மாநகராட்சி கடந்த ஜூன்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *