1 கப் அவல் இருக்கா? அப்ப காலையில இந்த மாதிரி செஞ்சு சாப்பிடுங்க…

357 0

காலையில் எப்போதும் இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமாக, அதே சமயம் சத்தான ஒரு காலை உணவை செய்து சாப்பிட விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில் அவல் உள்ளதா? அப்படியானால் அந்த அவலைக் கொண்டு மிளகு அவலை செய்யுங்கள்.

இந்த மிளகு அவல் மிகவும் ஆரோக்கியமான காலை உணவாக இருப்பதோடு, சளி பிடித்திருக்கும் போது சாப்பிட்டால், சளியில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும். முக்கியமாக இந்த மிளகு அவல் 10 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு ஈஸியான செய்முறையைக் கொண்டது. சொல்லப்போனால் வேலைக்கு செல்வோருக்கு ஏற்ற ரெசிபியும் கூட.

உங்களுக்கு மிளகு அவலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மிளகு அவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

1 கப் அவல் இருக்கா? அப்ப காலையில இந்த மாதிரி செஞ்சு சாப்பிடுங்க... | Simple  Breakfast Milagu Aval Recipe - Tamil BoldSky

தேவையான பொருட்கள்:

* அவல் – 1 கப்

* கடுகு – 1/4 டீஸ்பூன்

* உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்

* கடலைப் பருப்பு – 1 டீஸ்பூன்

* பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது)

* கொத்தமல்லி – சிறிது (நறுக்கியது)

* கறிவேப்பிலை – சிறிது (நறுக்கியது)

* இஞ்சி – 1 டீஸ்பூன் (துருவியது)

* உடைத்த முந்திரி – 2 டீஸ்பூன்

* வரமிளகாய் – 1

* உப்பு – சுவைக்கேற்ப

* எண்ணெய் – தேவையான அளவு

அரைப்பதற்கு…

* மிளகு – 1 1/4 டீஸ்பூன்

* சீரகம் – 1 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் அவலை நீரில் நன்கு கழுவி, 5 நிமிடம் நீரில் ஊற வைக்க வேண்டும். பின் அவலில் உள்ள அதிகப்படியான நீரை பிழிந்து எடுத்துவிட்டு, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் மிக்சர் ஜாரில் மிளகு மற்றும் சீரகத்தை சேர்த்து நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பச்சை மிளகாய், வரமிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின் அதில் முந்திரியை சேர்த்து வறுக்க வேண்டும்.

* அதன் பின் அரைத்த பொடியை சேர்த்து கிளறி, அவலை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு கிளறி விட வேண்டும்.

* பிறகு அதில் 2 டேபிள் ஸ்பூன் நீரைத் தெளித்து, மூடி வைத்து மிதமான தீயில் வைத்து 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

* இறுதியாக மூடியைத் திறந்து, மேலே கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான மிளகு அவல் தயார்.

Related Post

உங்கள் போன், லேப்டாப் மெதுவாக வேலை செய்ய இதுகூட காரணமாக இருக்கலாம்… இதை அழிங்க முதல்ல..

Posted by - January 19, 2023 0
சரி என்று கொடுத்ததும் உங்கள் சர்ச் இன்ஜின், நீங்கள் பார்வையிடும் இணையதளங்களால் உருவாக்கப்பட்ட கோப்புகளை சேமித்து வைத்துக் கொள்ளும். நீங்கள் நன்றாக கவனித்து பாருங்கள் புதிதாக போன்…

வள்ளலார் கூறிய உணவு முறைகள் பற்றி தெரியுமா?

Posted by - March 14, 2023 0
நாம் எப்படி சமைத்து சாப்பிட வேண்டும் என்று அன்றே ஆச்சரியமூட்டும் பலவித தகவல்களை வள்ளலார் கூறியுள்ளார். நாம் சமைக்கும் அரிசி எந்த அரிசியாக இருப்பது நல்லது? எப்படி…

விஜய் டிவி புகழ் செல்போனை திருடி கொண்டு ஓடிய நபர்.. ‘ஐபோன் கூட வாங்கி தரேன்’!

Posted by - April 5, 2023 0
புகழ் விஜய் டிவியில் காமெடியனாக கலக்கி தற்போது சினிமாவிலும் நுழைந்து இருக்கிறார் புகழ். குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு போன்ற ஷோக்களில் ரசிகர்களை காமெடியால் ஈர்த்த…

பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் டாப் 5 பைனலிஸ்ட் சம்பளம், டைட்டில் வின்னருக்கு தான் கம்மியா? லிஸ்ட் இதோ

Posted by - January 19, 2025 0
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் டாப் 5 இடங்களை பிடித்த போட்டியாளர்களின் சம்பளம் விவரம் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. விஜய் இணையத்தில் பிக் பாஸ்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *