90 சதவீதம் காலி.. ரஷியா ராணுவம் பற்றி அமெரிக்கா வெளியிட்ட பகீர் தகவல்..

342 0

ரஷியா மற்றும் உக்ரைன் இடையிலான போர் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் இருதரப்பிலும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த போர் காரணமாக பொது மக்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், ரஷியா உக்ரைன் இடையேயான போரில் இதுவரை 3 லட்சத்து 15 ஆயிரம் பேர் உயிரிழந்திருக்கலாம் அல்லது காயமுற்று இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இது ரஷிய ராணுவத்தில் கிட்டத்தட்ட 90 சதவீதம் என்று அமெரிக்க உளவுத்துறை தகவல்களில் தெரியவந்துள்ளது. மேலும் போர் காரணமாக ரஷிய வாகனங்கள் மற்றும் ஆயுதம் தாங்கிய வாகனங்களுக்கு பெருமளவு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதன் காரணமாக ரஷியாவின் போர் வாகனங்களின் நவீனத்தன்மை கடந்த 18 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது ரஷியா போருக்காக பயன்படுத்திய அதிநவீன வாகனங்கள் மற்றும் ஆயுதம் தாங்கிய வாகனங்கள் பெரும்பாலும் பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதமடைந்துள்ளன.

போர் குறித்து கருத்து பேசிய அமெரிக்க அதிபர் பைடன், “உக்ரைனை தனித்துவிட மாட்டேன், அமெரிக்கர்களும் அப்படி செய்ய மாட்டார்கள்,” என்று தெரிவித்துள்ளார். மேலும் உக்ரைனுக்கு கூடுதலாக 200 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான ராணுவ உபகரணங்களை வழங்குவதாக அறிவித்து இருக்கிறார்.

Related Post

வெப்ப அலைகளை எதிர்கொள்ள மக்கள் தயாராக வேண்டும்- ஐ.நா. எச்சரிக்கை

Posted by - July 19, 2023 0
நியூயார்க்: ஐரோப்பிய நாடுகள் மற்றும் வட அமெரிக்காவில் வெயில் சுட்டெரித்து வருகிறது. வெப்ப அலை காரணமாக மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். அவர்கள் கடற்கரை உள்ளிட்ட இடங்களுக்கு…

‘விஷம்’ கக்கும் பாகிஸ்தான் பின்னணியில் செயல்படுவோரை அடையாளம் காண்பது அவசியம்!

Posted by - August 14, 2025 0
சில நாட்களாக பாகிஸ்தானிடம் இருந்து வரும் தடித்த வார்த்தைகள் இந்திய அரசும், மக்களும் கவனத்தில் கொள்ள வேண்டியவையாக உள்ளன. ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த ஏப்ரல்…

கிரீஸ் நாட்டில் ரெயில்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: 29 பேர் பலி- 85 பேர் படுகாயம்

Posted by - March 1, 2023 0
கிரீஸ் நாட்டின் ஏதேன்சில் இருந்து திஸ்லனொய்கி நகருக்கு இன்று 350 பயணிகளுடன் ரெயில் சென்றுகொண்டிருந்தது. லரிசா நகரின் தெம்பி பகுதியில் பயணிகள் ரெயில் சென்றுகொண்டிருந்தபோது அதே தண்டவாளத்தில்…

கனடா காட்டுத்தீயால் 8 கோடி அமெரிக்கர்கள் அசுத்த காற்றை சுவாசிக்கும் அபாயம்

Posted by - June 30, 2023 0
வாஷிங்டன் : கனடாவின் ஆல்பர்ட்டா பகுதியில் கடந்த மாதம் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. 76 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இந்த காட்டுத்தீ எரிந்து வருகிறது. இதன்…

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் காலமானார்: தொண்டர்கள், ரசிகர்கள் கண்ணீர்

Posted by - December 28, 2023 0
சென்னை: தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி இன்று (டிச.28) காலை காலமானார். அவருக்கு வயது (71). அவரது மறைவால் தேமுதிக கட்சித் தொண்டர்கள், திரை ரசிகர்கள்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *