2030-ம் ஆண்டில் சென்னையில் காற்று மாசு 27 சதவீதம் அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்

201 0

சென்னை:

பெங்களூருவில் செயல்பட்டு வரும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்வுக்கான மையம் 2019-20-ம் ஆண்டில் சென்னை, மதுரை, திருச்சி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வெளியேற்றப்படும் மாசு தொடர்பான ஆய்வை மேற்கொண்டது. இதில், தூத்துக்குடியில் அனல் மின் நிலையம் உள்ளிட்ட கனரக தொழிற்சாலைகள் இருப்பதால் மாசு அதிகமாக இருப்பதும், சென்னையில் தூத்துக்குடியைவிட இருமடங்கு அதிகமாக காற்று மாசு இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.2030-ம் ஆண்டில் சென்னையில் காற்று மாசு 27 சதவீதம் அதிகரிக்கும்: ஆய்வில்  தகவல் | Air pollution in Chennai to increase by 27 percent by 2030

மாசுவை குறைக்க நடவடிக்கைகள் எடுக்காமல் தற்போது உள்ளபடியே தொழில் நடவடிக்கைகளை தொடர்ந்தால் 2030-ம் ஆண்டு சென்னை, திருச்சியில் அதிகபட்சமாக 27 சதவீதமும், மதுரையில் 20 சதவீதமும், தூத்துக்குடியில் 16 சதவீதமும் மாசு அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

முன்னுரிமை அடிப்படையில் காற்று மாசுவை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டால் 2030-க்குள் மாசு வெளியேற்றத்தின் அளவை தற்போதுள்ள நிலையில் இருந்து திருச்சியில் 36 சதவீதமும், மதுரை, சென்னையில் 27 சதவீதமும், தூத்துக்குடியில் 20 சதவீதமும் குறைக்க முடியும் என்றும் அந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்வுக்கான மையத்தின் மூத்த ஆய்வாளர் பிரதிமாசிங் கூறும்போது, ‘எரிபொருள் பயன்பாட்டை நிலக்கரியில் இருந்து புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு மாற்றுவது, தரமான சாலை உள்கட்டமைப்பு, தொழிற்சாலைகள் மற்றும் போக்குவரத்தில் வெளியாகும் மாசுவை குறைக்க கடுமையான கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றுவது ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் காற்று மாசுவை குறைக்கலாம்’ என்றார்.

Related Post

மகனும், மருமகளும் சொத்தையெல்லாம் வாங்கிட்டு அடிச்சு வெளிய அனுப்பிட்டாங்க.. கதறி அழுத மூதாட்டி

Posted by - February 28, 2023 0
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி ஒருவர், தன் மகனும், மருமகளும் சொத்தையெல்லாம் வாங்கிட்டு அடிச்சு வெளிய அனுப்பிட்டாங்க என்று கதறி அழுதார். தமிழ்நாட்டில்…

மகா சிவராத்திரி: ராமேசுவரம் கோவிலில் நாளை இரவு முழுவதும் நடை திறந்திருக்கும்

Posted by - February 17, 2023 0
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் மாசி சிவராத்திரி திருவிழா கடந்த 11-ந்தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜைகள், சாமி புறப்பாடு நடைபெற்று வருகின்றது.…

முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் ரூ.30 லட்சம் பெறுவது எப்படி? முக்கிய அப்டேட்

Posted by - August 20, 2025 0
முதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ.30 லட்சம் பெறுவது எப்படி? அமைச்சர் ஐ.பெரியசாமி கொடுத்த அப்டேட் Tamil Nadu CM Health Insurance : தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு…

மின் கட்டண மென்பொருள் மாற்றம்!

Posted by - May 14, 2024 0
தமிழ்நாடு மின்சார வாரியம் அதிக உயரம் கொண்ட மின் வயர்கள் மூலமாகவும், பூமிக்கு அடியில் புதைக்கப்பட்ட புதைவடங்கள் மூலமாகவும், நுகர்வோருக்கு மின் விநியோகம் செய்து வருகிறது.இதில் அதிக…

மாணவிகள், இளம்பெண்களை நிர்வாணமாக நிற்கவைத்து வீடியோ பதிவு செய்த பாதிரியார்! விஸ்வரூபம் எடுக்கும் விவகாரம்

Posted by - March 16, 2023 0
கன்னியாகுமரி மாவட்டத்தில் களியக்காவிளை அடுத்த பாத்திமா நகரை சேர்ந்தவர் பெனடிக் ஆன்றோ.   இவர் அழகிய மண்டபம் பகுதியில் உள்ள சர்ச்சில் பாதிரியாராக பணிபுரிந்து வந்தார். கடந்த…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *