‘3 நாட்களை குறித்து வைக்கவும்’.. தளபதி 67 குறித்த அதிரடி அப்டேட் சொன்ன லோகேஷ் கனகராஜ்!

238 0

Thalapathy 67 : கோவை விமான நிலையம் அருகே அமைந்துள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் நடந்த மைக்கேல் விளம்பர நிகழ்ச்சியில் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் சந்தீப் கலந்து கொண்டனர்.

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் ‘மைக்கேல்’ என்ற புதிய ஆக்சன் படம் உருவாகியுள்ளது. இதில் சந்தீப் கிஷன் முன்னணி வேடத்தில் நடிக்கிறார். விஜய் சேதுபதி அதிரடியான சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படத்தை இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே விஜய் சேதுபதியை வைத்து புரியாத புதிர் என்ற படத்தை இயக்கியிருந்தார். அதோடு ஹரீஷ் கல்யாண், ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற படத்தையும் இயக்கியிருந்தார்.

மைக்கேல் படத்தில் சந்தீப் கிஷனுக்கு ஜோடியாக திவ்யங்கா கவுசிக் நடித்துள்ளார். இவர்களுடன் கெளதம் மேனன், வரலட்சுமி சரத்குமார், அனசுயா பரத்வாஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கிரண் கவுசிக் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. தற்போது இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது படத்தின் ப்ரமோஷன் சென்றுகொண்டிருக்கும் நிலையில் அதன் ஒருபகுதியாக,

கோவை விமான நிலையம் அருகே அமைந்துள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் நடந்த மைக்கேல் விளம்பர நிகழ்ச்சியில் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் சந்தீப் கலந்து கொண்டனர். அப்பொது பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் தளபதி 67 படத்தில் அப்டேட் குறித்து மாணவர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ், ” பிப்ரவரி ஒன்று, இரண்டு, மூன்று ஆகிய நாட்களை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அப்டேட் வருகிறது. இப்போதைக்கு அவ்வளவுதான் என்னால் சொல்ல முடியும்” எனத் தெரிவித்தார். இதனைக் கேட்டதும் மாணவர்கள் கரவோஷம் எழுப்பி ஆரவாரம் செய்தனர்.

Related Post

மேடையில் பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட கூல் சுரேஷ்.. பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வைத்த பத்திரிகையாளர்கள்

Posted by - September 20, 2023 0
கூல் சுரேஷ் சமீபகாலாக கூல் சுரேஷ் எல்லை மீறி நடந்துகொள்ளும் விஷயங்கள் பலரையும் முகம் சுழிக்க வைக்கிறது. அதே போல் தான் தற்போது பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தொகுப்பாளனியிடம் எல்லைமீறி…

காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் மற்றும் வீரன் படங்கள் இதுவரை செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

Posted by - June 7, 2023 0
காதர் பாட்சா வசூல் ஆர்யா நடிப்பில் முத்தையா இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம். மக்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பில் வெளிவந்த…

50 கோடி செலவு செய்து 10 கோடி கூட வசூல் செய்யவில்லையா.. சமந்தாவால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் தானா

Posted by - April 17, 2023 0
சாகுந்தலம் சமந்தா நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் சாகுந்தலம். இப்படத்தை குணசேகர் இயக்கியிருந்தார். தில் ராஜு தயாரித்த இப்படம் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்தது. ஆனால், முதல்…

‘மகாராஜா’ படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டிய நடிகர் விஜய் – வைரல் போட்டோஸ்..!

Posted by - July 19, 2024 0
திரையரங்குகளில் மகாராஜா திரைப்படமே சக்கை போடு போட்ட நிலையில் படக்குழுவை நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் நேரில் அழைத்து பாராட்டி உள்ளார். மக்கள் செல்வன்…

சரத்குமார் சண்முகபாண்டியன் நடித்துள்ள கொம்புசீவி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Posted by - December 1, 2025 0
சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் மற்றும் சண்முகபாண்டியன் முதல் முறையாக இணைந்து நடித்துள்ள கொம்புசீவி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’, ‘சீமராஜா’,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *