8 மாதங்களில் இல்லாத அளவில் கொரோனா தினசரி பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது

269 0

புதுடெல்லி:

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. கடந்த 223 நாட்களில் இல்லாத அளவில் நேற்று பாதிப்பு 7.830 ஆக உயர்ந்திருந்தது. இந்நிலையில் இன்று மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,158 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டு உள்ளது.6 மாதங்களில் இல்லாத அளவு உயர்வு- கொரோனா தினசரி பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியது  | Tamil News 5335 corona positive cases across india

நேற்றுடன் ஒப்பிடுகையில் பாதிப்பு ஒரே நாளில் 30 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் தினசரி பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டி இருப்பது கடந்த 8 மாதங்களில் இதுவே முதல் முறையாகும்.

தினசரி பாதிப்பு விகிதம் 4.42 சதவீதமாகவும், வாராந்திர பாதிப்பு விகிதம் 4.02 சதவீதமாகவும் உள்ளது. நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 3,416 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 1,115, டெல்லியில் 1,149, அரியானாவில் 642, இமாச்சலபிரதேசத்தில் 441, தமிழ்நாட்டில் 432, உத்தரபிரதேசத்தில் 442, கர்நாடகாவில் 327, ஒடிசாவில் 200, ராஜஸ்தானில் 355, குஜராத்தில் 397, சத்தீஸ்கரில் 326, பஞ்சாபில் 229, ஜம்மு காஷ்மீரில் 122, கோவாவில் 121 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. நாடு முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 47 லட்சத்து 86 ஆயிரத்து 160 ஆக உயர்ந்துள்ளது.

தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 5,356 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 42 லட்சத்து 10 ஆயிரத்து 127 ஆக உயர்ந்துள்ளது. ஆஸ்பத்திரிகளில் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 44,998 ஆக உயர்ந்துள்ளது.

இது நேற்றை விட 4,783 அதிகமாகும். தொற்று பாதிப்பால் மகாராஷ்டிராவில் 9 பேர், குஜராத்தில் 2 பேர், டெல்லி, கேரளா, ராஜஸ்தான், தமிழ்நாட்டில் தலா ஒருவர் என நேற்று 15 பேர் இறந்துள்ளனர். கேரளாவில் விடுபட்ட இறப்புகளில் 4-ஐ கணக்கில் சேர்த்துள்ளனர். இதுவரை தொற்றுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 35 ஆக அதிகரித்துள்ளது.

Related Post

கருணாநிதி, எம்.ஜி.ஆர் வணங்கிய டி.ஆர்.எஸ்! – மார்டன் தியேட்டர்ஸின் கதை

Posted by - December 15, 2023 0
சினிமா தயாரிப்பு தொழிலில் கொல்கத்தாதான் கோலோச்சிக்கொண்டிருந்தது. சினிமா தயாரிப்பு தொடர்பான எல்லா வேலைகளுக்கும் கொல்கத்தா செல்ல வேண்டியிருந்தது. அதற்கு மாற்றாக சேலத்திலேயே ஒரு ஸ்டூடியோ தொடங்கினால் என்ன?…

வரலாற்றை மாற்றும் ஆம் ஆத்மி..! அதள பாதாளத்தில் காங்கிரஸ்..!

Posted by - December 8, 2022 0
டெல்லி சட்டசபைத் தேர்தல், பஞ்சாப் சட்டசபை தேர்தல், டெல்லி மாநகராட்சி தேர்தல் என அடித்து ஆடி வரும் ஆம் ஆத்மி, தற்போது குஜராத், இமாச்சல் பிரதேசம் தேர்தல்களிலும் கவனம்…

டெல்லியில் மரப்பெட்டிக்குள் இறந்து கிடந்த 2 குழந்தைகள்- போலீஸ் விசாரணை

Posted by - June 7, 2023 0
புதுடெல்லி: டெல்லயின் ஜாமியா நகரில் உள்ள ஒரு வீட்டில் உள்ள மரப்பெட்டியில் இரண்டு குழந்தைகள் இறந்து கிடந்த சம்பவம் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியது. ஜாமியா நகரைச் சேர்ந்த…

சமையல் கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக குறைப்பு.. பிரதமர் மோடி அறிவிப்பு

Posted by - March 8, 2024 0
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையை குறைத்து பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். சர்வதேச மகளிர் தினம் இன்று உலகம் முழுவதும்…

ரூ.1 லட்சம் முதல் பேரம் பேசினார்: மனைவி பிரிந்து சென்றதால் குழந்தைகளை விற்க முயன்ற வாலிபர்

Posted by - July 8, 2023 0
திருப்பதி: ஆந்திர மாநிலம் மிருதொட்டி மண்டலம் மல்லுப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பணேட்டி போச்சையா. இவரது மனைவி ரேணுகா, கவுதம் (வயது 3) தருண்(2) என்ற மகன்கள் உள்ளனர்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *