8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

259 0

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.மேலும் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.மேலும் இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்றும் அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Post

கும்பகோணம் மேற்கு காவல் நிலையம் இந்தியாவில் முன்மாதிரி கல்விக்கூடமாக மாறியது

Posted by - December 20, 2025 0
கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் ஆய்வாளர் திரு. ரமேஷ் தனது முயற்சியால் நூலகம் மற்றும் உடற்பயிற்சி கூடத்தை உருவாக்கி, காவல் நிலையத்தை மாணவர்களுக்கு முன்னேற்றக் கூடமாக மாற்றியுள்ளார்.…

அடுத்த ரவுண்டுக்கு ரெடியா.. புயல்? உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. கனமழை கன்ஃபார்ம்

Posted by - October 22, 2025 0
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, 12 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமான வலுவடையக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வடமாவட்டங்களில்…

திமுகவையும், காங்கிரஸையும் நிராகரிக்க சென்னை தயாராக உள்ளது : பிரதமர் மோடி

Posted by - April 10, 2024 0
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், இந்த ஆற்றல் மிக்க நகரத்தில் ரோட்ஷோ என் நினைவில் என்றும் நிலைத்திருக்கும். மக்கள் சேவையில் தொடர்ந்து கடினமாக உழைக்கவும்,…
Generated Image November 22 2025 6 20PM

பால் உற்பத்தியாளரை ஒருமையில் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ்!

Posted by - November 22, 2025 0
பால் உற்பத்தியாளரை அமைச்சர் மனோ தங்கராஜ் தொலைத்து விடுவேன் என மரியாதை குறைவாகப் பேசிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள பாண்டியராஜபுரம்…

”நேர்மையில்லாத ஆளுநர் ரவி” 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல், உச்சநீதிமன்றம் ஆப்பு – மாநில அரசின் வசமாகும் பல்கலை.,

Posted by - April 8, 2025 0
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் துணைவேந்தர்களை நியமிக்கும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியின் அதிகாரம் பறிபோகும் சூழல் ஏற்பட்டுள்ளது தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாட்டில் நேர்மை இல்லை என உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *