ஹிண்டன்பர்க் அறிக்கையால் இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி…. முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்….

256 0

இந்திய பங்குச்சந்தைகள் தற்போது ஆட்டம் காணத் தொடங்கியுள்ளன. ஹிண்டன்பர்க், அதானி விவகாரத்தினால் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதாவது அதானி குழும நிறுவனங்களின் செபி தலைவர் முதலீடு இருப்பதாக அறிக்கை வெளியானதை அடுத்து சந்தை முதலீட்டாளர்கள் சற்று பதற்றம் அடைந்துள்ளனர்.

நிஃப்டி-50 மற்றும் எஸ்&பி பிஎஸ்இ சென்செக்ஸ் ஆகியவை கடந்த ஒரு வாரத்தில் ஏற்ற இறக்கத்தைக் கண்டன. இதற்கு பல காரணங்கள் உள்ளன. ஆனால் திங்கட்கிழமையான இன்று பெரும் சரிவை சந்திக்கும் என பங்குச்சந்தை நிபுணர்கள் பலரும் கணித்தனர். ஏனெனில் செபி தலைவர் மதாபி பூரி புச் மற்றும் அவரது கணவர் தவால் ஆகியோர் மீதான அமெரிக்க ஷார்ட் செல்லார் நிறுவனத்தின் புதிய குற்றச்சாட்டை வைத்துள்ளது.

முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் குறைந்த பட்சம் திங்கட்கிழமை வர்த்தகத்தின் ஆரம்ப கட்டங்களில் சில சரிவு இருக்கும். தொடர்ந்து சந்தையில் ஒருவிதமான ஏற்றம் இறக்கம் இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

ஹிண்டன்பர்க் அறிக்கையின் தாக்கம் கட்டாயம் சந்தையில் இருக்கும் என சந்தை நிபுணர் அம்பரீஷ் பாலிகா தெரிவித்துள்ளார். இந்த வீழ்ச்சி எதுவரை செல்கிறது என முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டும். அதாவது புதிய வீழ்ச்சிக்கு சந்தை செல்கிறதா எனப்தை கூடுதல் கவனத்துடன் கவனிக்க வேண்டும்.

பங்குச்சந்தை கட்டுப்பட்டு அமைப்பான செபியின் தலைவர் மதாபி பூரி புச் மற்றும் அவரது கணவர் தவால் ஆகியோருக்கு எதிராக ஹிண்டன்பேர்க்கின் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளது. சனிக்கிழமை இரவு ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியானதால், வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று அதனுடைய தாக்கம் கட்டாயம் சந்தையில் இருக்கும். ஆனால் அடுத்த சில நாட்களில் இதன் வீரியம் குறையும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

கடந்த ஆண்டு ஹிண்டன்பர்க் அறிக்கையில் அதானி நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது. அதானி குழுமம் அதை மறுத்தாலும், அதற்கான விசாரணையை செபி மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் செபியின் தலைவர் மீது தற்போது புகார் எழுந்துள்ளதால், இது பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது. பொருளாதார ரீதியில் மட்டும் இல்லாமல் அரசியல் கட்சிகளின் எதிர்ப்பு அதிகரித்துள்ளது. செபியின் தலைவர் பதவி விலக வேண்டும், அவர் மீது முறையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கோரிக்கைகள் வலுத்துள்ளன.

இது குறித்து செபியின் தலைவர் மதாபி பூரி புச் வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்களுக்கு எதிராக ஹிண்டன்பர்க் அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஆதாரம் அற்றவை என்றும், இதில் உள்நோக்கம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.இந்த நிலையில் இன்றைய வர்த்தகத்தில் மிட் மற்றும் ஸ்மால் கேப்களில் பங்குகளுக்கு பெரும் ஆபத்தாக இருக்கும் என பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் இன்றைய வர்த்தகம் சரிவில் தொடங்கியுள்ளன. மேலும் இந்த சரிவை முதலீட்டாளர்கள் பங்கைகளை வாங்குவதற்கான வாய்ப்பாக பார்க்க வேண்டுமென்றும் கூறப்படுகிறது.

Related Post

விலை உயர்வை கட்டுப்படுத்த கூடுதலாக 2 லட்சம் டன் வெங்காயம் கொள்முதல்: மத்திய அரசு தகவல்

Posted by - August 21, 2023 0
புதுடெல்லி: வரவிருக்கும் காரீப் பருவத்தில் வெங்காயத்தின் உற்பத்தி குறைந்து விலை உயரலாம் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே விலை உயர்வை கட்டப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து…

ரூ.500 கோடி சொத்து மதிப்பு கொண்ட அல்லு அர்ஜுன் திடீர் கைது.. என்ன நடந்தது..?!

Posted by - December 13, 2024 0
ஹைதராபாத்தில் டிசம்பர் 4ஆம் தேதி நடைபெற்ற அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 திரைப்பட வெளியீட்டு விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தில் ஒரு பெண் இறந்தது தொடர்பாக,…

UPI ட்ரான்ஸாக்ஷன்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டால் இனி UPI பேமெண்ட் பயன்படுத்த மாட்டோம்: கருத்துக்கணிப்பில் தகவல்!

Posted by - March 11, 2024 0
ஆரம்பத்தில் UPI மூலமாக செய்யப்படும் டிஜிட்டல் ட்ரான்ஸாக்ஷன் நமக்கு சௌகரியமானதாகவும், பழக்கப்பட்ட ஒன்றாகவும் இல்லாத காரணத்தினால் அதனை நாம் குறை கூறி வந்தோம். ஆரம்பத்தில் UPI மூலமாக…

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு உதவும் ‘அய்யன்’ மொபைல் செயலி: DOWNLOAD APP LINK.

Posted by - December 26, 2023 0
சென்னை: கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த 16-ம் தேதி நடை திறக்கப்பட்டது. இந்நிலையில், மலைக்கு செல்லும் பக்தர்களுக்கு உதவும் வகையில் ‘அய்யன்’…

நித்தியானந்தவின் புதிய திட்டம்

Posted by - February 16, 2023 0
புதுடெல்லி: சாமியார் நித்யானந்தா சமூக வலைதளங்கள் மூலம் வீடியோக்களை வெளியிட்டு பக்தர்களிடம் சொற்பொழிவாற்றி வருகிறார். இந்துக்களுக்காக கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி உள்ளதாக அறிவித்திருந்த அவர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *