சுஸ்லான் எனர்ஜி நிறுவனத்தின் பங்கை இப்போதே விற்றுவிடுகள்… எச்சரிக்கும் நிபுணர்க்ள்…. காரணம் என்ன?

165 0
சுஸ்லான் எனர்ஜி நிறுவனத்தின் பங்கு விலை கடந்த ஒராண்டாகவே பெரும் ஏற்றத்தை அடைந்து வருகிறது. அதாவது இந்த பங்கின் விலை ஒரு வருடத்தில் 300 சதவிகிதம் வரை முதலீட்டாளர்களுக்கு வருவாய் கொடுத்துள்ளது. இந்த நிலையில் முதலீட்டாளர்கள் தற்போதைய நிலையில் 50 சதவிகித லாபத்தை வெளியே எடுக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனமான சுஸ்லான் எனர்ஜி நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்து, லாபத்தை வெளியே எடுக்கலாம் என நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

சுஸ்லான் எனர்ஜி நிறுவனத்தின் பங்கு விலை கடந்த ஒராண்டாகவே பெரும் ஏற்றத்தை அடைந்து வருகிறது. அதாவது இந்த பங்கின் விலை ஒரு வருடத்தில் 300 சதவிகிதம் வரை முதலீட்டாளர்களுக்கு வருவாய் கொடுத்துள்ளது. இந்த நிலையில் முதலீட்டாளர்கள் தற்போதைய நிலையில் 50 சதவிகித லாபத்தை வெளியே எடுக்கலாம் என தெரிவித்துள்ளனர்.Suzlon Energy shares climb 4% on bagging 100.8 MW wind power project in  Gujarat - BusinessToday

சுஸ்லான் எனர்ஜி பங்கின் இலக்கு விலை தற்போது ரூ.96 ஆக உள்ளது. இந்த பங்கின் விலை விரைவில் ரூ.100 என்ற நிலையை அடைவதற்கு முன்பு லாபத்தை வெளியே எடுப்பது புத்திசாலிதானமான முடிவாக இருக்கும். ஏனெனில் ரூ.100 நிலையை அடைவதற்கு சில தடங்கள் உள்ளன.

தொடர்ந்து நான்கு நாட்களாக சுஸ்லான் பங்கு அப்பர் சர்க்யூட் நிலையை அடைந்து வருகிறது. அதாவது 5%க்கு மேல் பங்கின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ஆகஸ்ட் 12ம் தேதி அன்று பங்கின் விலை 3 சதவிகிதம் உயர்ந்து ரூ.80 என்ற நிலையில் வர்த்தகமானது.

சுஸ்லானின் ரிலேட்டிவ் ஸ்ட்ரெங்த் இன்டெக்ஸ் 80ஐத் தாண்டி, தற்போது 81 ஆக உள்ளது. RSI 70க்கு மேல் இருந்தால், இந்த பங்கு அதிகமாக வாங்கப்பட்ட பங்குகளின் பட்டியலில் உள்ளது.

சுஸ்லான் பங்குகள் இந்த மாதத்தில் மட்டும் 20% உயர்ந்துள்ளது. தொடர்ந்து ஐந்து மாதங்களாக லாபம் அடைந்து வருகின்றன. சுஸ்லான் பங்கு ஜூலையில் 31%, ஜூன் மாதத்தில் 11%, மே மாதத்தில் 14% மற்றும் ஏப்ரலில் 3% விலை உயர்ந்துள்ளது.Suzlon Share Price | शॉर्ट टर्म में दिया 100% रिटर्न, सुजलॉन शेयर को

பல ஆண்டுகளாக பென்னி ஸ்டாக்காக இருந்த சுஸ்லான் எனர்ஜி நிறுவனம் தற்போது அதிலிருந்து மீட்சி அடைந்து வருகிறது. அதாவது பங்கின் விலை தொடர்ந்து உயர்ந்துள்ளது. மேலும் ரூ.95 முதல் ரூ.115 மண்டலத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. உடனடி ஸ்விங் பேஸ் சுமார் ரூ. 65 வரை உருவாக்கப்பட்டுள்ளதால், வாராந்திர இறுதி நிறுத்தம் கீழே உள்ளது. தற்போதுள்ள நீண்ட நிலைகளை தக்கவைத்துக்கொள்ள மற்றும் பங்கை வாங்க ரூ.62 போதுமானதாக இருக்கும் என டிரேட்புல்ஸ் செக்யூரிட்டிஸின் சச்சிதானந்த் உட்டேகர் தெரிவித்துள்ளார்.2024ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து தற்போது வரை பங்கின் விலை 115% உயர்ந்துள்ளது. இன்றைய காலை வர்த்தகத்தில் சுஸ்லான் பங்கின் விலை 3 சதவிகிதம் சரிந்து ரூ.78.43 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.

Related Post

தங்கம் விலை அதிர்ச்சிகர உச்சம்: பவுன் ரூ.97,000-ஐ கடந்தது!

Posted by - October 17, 2025 0
சென்னை: சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை இன்று (அக்.17) வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. அதன்படி, தங்கம் விலை ஒரு பவுன் ரூ.97,000-ஐ தாண்டி…

ஆண்டுக்கு ஆண்டு அதிகரிப்பு: இந்தியாவில் புற்றுநோய்க்கு 8 லட்சம் பேர் பலி

Posted by - July 29, 2023 0
புதுடெல்லி : மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை, தேசிய சுகாதார இயக்கத்தின் ஒரு பகுதியாக, தொற்று அல்லாத நோய்களைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் தேசிய திட்டத்தின்…

45 நாட்களில் ரூ.4 கோடியை அள்ளிய ஆந்திரா தக்காளி விவசாயி

Posted by - July 31, 2023 0
சித்தூர்: எளிய காய்கறியான தக்காளிதான் இன்று இல்லத்தரசிகளுக்கு ‘கிலி’யை ஏற்படுத்துகிறது. அரைச்சதம், சதம், ஒன்றரைச் சதம் என்று ‘இரட்டைச் சதத்தை’ நோக்கி ‘நாட் அவுட்’டாக முன்னேறிக்கொண்டிருக்கும் தக்காளி…

அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, அகவிலைப்படி உயர்வு.. அதிரடி அறிவிப்பு

Posted by - April 23, 2024 0
அரசு ஊழியர்களின் ஓய்வூதியம், இறப்பு கிராஜூவிட்டி, பயணப்படி ஆகியவை 25 விழுக்காடு வரை உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. யூனியன் பிரதேசமான புதுச்சேரியில்  பணியாற்றும் அரசுப்பணியாளர்களுக்கு படித்…

ஆந்திரா ரெயில் விபத்து: உதவி எண்கள் அறிவிப்பு, தொடர்ந்து நடைபெறும் மீட்பு பணி- ரெயில்கள் ரத்து

Posted by - October 30, 2023 0
ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டினத்தில் இருந்து நேற்று இரவு விஜயநகரம் நோக்கி பாலசா பயணிகள் ரெயில் சென்று கொண்டிருந்தது. விஜயநகரம் மாவட்டம், கொத்தவலசா மண்டலம், கண்டகபள்ளி அலமண்டா இடையே…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *