ஜெயிலர் படத்தின் கால்வாசியை கூட தொட முடியாமல் தினரும் கோட்..

152 0

கோட்படம் கடந்த 5ம் தேதி அனைத்து திரையரங்கிலும் ரிலீஸ் ஆகி ரசிகர்களுக்கு மிகப்பெரிய திருவிழாவாக அமைந்தது. எதிர்பார்க்காத பல ட்விஸ்ட்டுகள், நிறைய ஆர்டிஸ்ட்களை வைத்து கதையை தாறுமாறாக கொடுத்திருக்கிறார் என்று பாசிட்டிவான விமர்சனங்கள் வந்தது. அந்த வகையில் ஒட்டுமொத்தமாக முதல் நாள் வசூல் மட்டுமே கிட்டத்தட்ட 126 கோடியை பெற்றது.

அதிலும் இந்தியா முழுவதும் 76.93 கோடி வசூலை பெற்றது. இதனைத் தொடர்ந்து சனி மற்றும் ஞாயிறு விடுமுறை தினங்கள் என்பதால் திரையரங்குகளில் கூட்டம் அலைமோதும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை சேர்த்து 52 கோடி மட்டுமே வசூலை அடைந்தது. அந்த வகையில் இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 128 கோடி வசூல் செய்திருக்கிறது.

கோட் டீம்

மேலும் ஐந்தாவது நாளில் 14 கோடி வசூலை பெற்று ஒட்டுமொத்தமாக 288 கோடி லாபம் பார்த்திருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் ஏஜிஎஸ் நிறுவனம் அர்ச்சனா கல்பாத்தி அவருடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் ரஜினியின் ரசிகர்கள் ஜெயிலர் படத்தை கொஞ்சம் கூட உங்களால் நெருங்க முடியாது என்பதற்கு ஏற்ப சில விஷயங்களை ஷேர் பண்ணி வருகிறார். ஜெயிலர் படம் ரிலீஸ் ஆவதற்கு முதல் நாளில் ஆன்லைனில் ரிசர்வேஷன் 638K டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் கோட் படம் ரிலீஸ் ஆவதற்கு முதல் நாளில் முன்பதிவு செய்யப்பட்டது வெறும் 173k மட்டும்தான் என்பதை பதிவிட்டு வருகிறார்கள். அந்த வகையில் என்னதான் குட்டிக்கரணம் போட்டு, இருக்க அனைத்து ஆர்டிஸ்ட்களையும் வைத்து கோட் படத்தை கொடுத்தாலும் எங்க தலைவர் ரஜினி படத்துடன் கிட்ட நெருங்கவே முடியாது என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இதுல வேற இப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் பிரேம்ஜி உட்பட ஒவ்வொருவரும் இப்படம் நிச்சயம் ரெக்கார்ட் பிரேக் பண்ணும் அளவிற்கு 1500 கோடி வசூலை அடையும் என்று வாய்க்கு வந்தபடி உளறினார்கள். ஆனால் ரிலீசான ஐந்தாவது நாளிலேயே திரையரங்குகளில் கூட்டமே இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது என்று ரஜினியின் ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.

அடுத்த மாதம் ரஜினியின் வேட்டையன் படம் ரிலீஸ் ஆகும் பொழுது தரமான சம்பவத்தை செய்ய ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் கடந்த வருடம் லியோ மற்றும் ஜெய்லர் படம் முட்டி மோதி கொண்டதில் ஜெயிலருக்கு கிடைத்த வெற்றி போல் இந்த ஆண்டு வேட்டையன் முன்னாடி கோட் படம் தோற்றுப் போய் நிற்கப் போகிறது என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

Related Post

புதிய சிக்கலில் எஸ்.கேவின் அமரன் படம் – என்ன மேட்டர்னு தெரியுமா..?

Posted by - February 22, 2024 0
எஸ்.கே.வின் மிரட்டலான நடிப்பில் உருவாகி உள்ள அமரன் படத்திற்கு தற்போது புதிய சிக்கல் இன்று வந்துள்ளது.#sivakarthikeyan #AMARAN #rajkumar #kamalhassan #rajkamal #tamlcinema #LatestNews ராஜ்குமார் பெரியசாமி…

இந்த வாரம் வெளியாகும் தமிழ் திரைப்படங்கள் என்னென்ன தெரியுமா?.. லிஸ்ட் இதோ

Posted by - March 6, 2025 0
சினிமா ரசிகர்கள் என்று வெளியாகும் புது படங்களை விரும்பி பார்ப்பதற்கு ஒரு தனி கூட்டமே உள்ளது. ஒவ்வொரு வாரமும் என்னென்ன படங்கள் வெளியாக உள்ளது என்று எதிர்பார்த்து…

பா. ரஞ்சித்துக்கு அட்வைஸ் கொடுத்த GOAT இயக்குனர் வெங்கட் பிரபு ..

Posted by - September 4, 2024 0
வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. தற்போது, பல பேட்டிகளில் படக்குழு மற்றும் வெங்கட் பிரபு கலந்து கொண்டு GOAT படத்தை பற்றி பேசி…

விஜய் சேதுபதி எடுத்த முடிவு, கோபத்தில் ரசிகர்கள்.. என்ன காரணம் தெரியுமா

Posted by - September 29, 2023 0
விஜய் சேதுபதி ஒரு பக்கம் ஹீரோ, மறுபக்கம் வில்லன் என பட்டையை கிளப்பி வருபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் ஹீரோவாக நடித்து கடைசியாக வெற்றிபெற்ற…

தமிழ் சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை.. நடிகை இவானா .

Posted by - July 2, 2025 0
நடிகை இவானா தமிழில் பாலாவின் நாச்சியார் மூலமாக அறிமுகம் ஆனவர். அடுத்து லவ் டுடே படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஜோடியாக நடித்து பெரிய அளவில் பிரபலம் ஆனார்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *