மெட்ரோவுக்கு மத்திய அரசு கொடுத்த ரூ.21,000 கோடியில் ரூ.15,120 கோடி என்ன ஆனது?- ஹெச்.ராஜா

155 0

மெட்ரோவுக்கு மத்திய அரசு கொடுத்த ரூ.21,000 கோடியில் ரூ.15,120 கோடி என்ன ஆனது என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார் .கடந்த ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட மழை வெள்ள சேதத்திற்கு மத்திய அரசு நிவாரணம் வழங்கவில்லை என அரசியல் நாடகத்தை அரங்கேற்றினார் முதல்வர் ஸ்டாலின்! ஆனால், சென்னைக்கு ரூ.5000 கோடி சிறப்பு நிதியாக வழங்கப்பட்டது.

வெள்ள பாதிப்பு ஏற்பட்டவுடனேயே தமிழகத்துக்கு ரூ.900 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இப்படி வழங்கப்பட்ட நிதிகளை தமிழக அரசு என்ன செய்தது?” என்று கடந்த ஏப்ரலில் நிதி அமைச்சர் கேட்ட பதில் கேள்விக்கு தற்போது வரை பதில் இல்லை!

அதே போல் ‘சென்னை மெட்ரோ திட்டத்திற்கு நிதி ஒதுக்காமல், பிற மாநில மெட்ரோ திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கி வருகிறது’ என்று திமுக அரசினால் மீண்டும் அரங்கேற்றப்பட்ட சென்னை மெட்ரோ நாடகத்திற்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் நிதி அமைச்சர்..

“மாநில அரசால் முன்னெடுத்த இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்திற்கு, மத்திய அரசு பல்வேறு வழிகளில் 21,000 கோடி ரூபாய் நிதியை திரட்டி தந்தது. அதில் வெறும் 5880 கோடி மட்டுமே உபயோகம் செய்யப்பட்டிருக்கிறது. மீதமிருக்கும் 15,120 கோடி என்ன ஆனது?” என்று மீண்டும் உண்மையை உடைத்து கேள்வி எழுப்பியிருக்கிறார் மாண்புமிகு நிதி அமைச்சர்.

இந்தக் கேள்விக்கும் நீங்கள் மௌனத்தை மட்டுமே மொழியாக முன்மொழிந்தால், நீங்கள் கூறுவதெல்லாம் பொய்யென்றே ஆகிறது என்கிறபட்சத்தில், பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுவிட்டு, மக்களை ஏமாற்றும் இத்தகைய மலிவு அரசியலை விட்டொழியுங்கள்! என ஹெச்.ராஜா வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வழக்கு : ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்புக்கு வெள்ளிக்கிழமை வரை அவகாசம் வழங்கிய உயர்நீதிமன்றம்!

Posted by - March 23, 2023 0
அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை கோரிய வழக்கில் ஈபிஎஸ், ஓபிஎஸ் தரப்பினர்  பரபரப்பான வாதங்களை முன்வைத்த நிலையில், இரு தரப்பும் எழுத்து பூர்வமான வாதங்களை வெள்ளிக்கிழமை காலைக்குள்…

இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி – ரூ.5, 650 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!

Posted by - March 11, 2026 0
இன்று தமிழகம் வரும் பிரதமர் மோடி, 5 ஆயிரத்து 650 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். பிரதமா் நரேந்திர மோடி அரசு நிகழ்ச்சி…

அராஜக தி.மு.க அரசால் தொடர்ந்து வஞ்சிக்கப்படும் ஆசிரியர்கள்!-ஆதவ் அர்ஜுனா த.வெ.க .

Posted by - July 18, 2025 0
அராஜக தி.மு.க அரசால் தொடர்ந்து வஞ்சிக்கப்படும் ஆசிரியர்கள்! #Aadhavarjuna #TVK #Teachers_Protest #Tamilnadu_CM #pixeltv  #TamilNews #pixelmedia           குற்றவாளிகளைப் போல…

திமுக மாணவரணி செயலாளர் மாற்றம் – காரணம் என்ன ?

Posted by - March 15, 2026 0
நாம் தமிழர் கட்சியில் மாநில இளைஞர் அணி செயலாளராக இருந்த வழக்கறிஞர் ராஜீவ் காந்தி, 2021ம் ஆண்டு திமுகவில் இணைந்தார். அவருக்கு திமுக செய்தி தொடர்பு இணை…

தனிமரமாகும் ராமதாஸ்? பாஜக ஆசி, பாமகவை கைப்பற்றும் அன்புமணி? வடநாட்டு ஃபார்முலா

Posted by - May 30, 2025 0
 ராமதாஸ் நிறுவிய பாமக கட்சியை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர அன்புமணி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாமக கட்சியை அன்புமணி முழுமையாக தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர பாஜக உதவகூடும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *