திமுக மாணவரணி செயலாளர் மாற்றம் – காரணம் என்ன ?

132 0

நாம் தமிழர் கட்சியில் மாநில இளைஞர் அணி செயலாளராக இருந்த வழக்கறிஞர் ராஜீவ் காந்தி, 2021ம் ஆண்டு திமுகவில் இணைந்தார். அவருக்கு திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் பதவி வழங்கப்பட்டது. 2025ம் ஆண்டு மார்ச் மாதம் திமுக மாணவரணி செயலாளராக மாற்றப்பட்டார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ் காந்தி விடுவிக்கப்பட்டு, கட்சியின் கொள்கை பரப்பு இணை செயலாளராக நியமிக்கப்பட்டார். மாணவரணியின் புதிய செய லாளராக வீரமணி என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டார். திமுக மாணவரணி செய லாளர் பொறுப்பை பெண் நிர்வாகி ஏற்பது இதுவே முதல்முறை ஆகும்.

ராஜீவ் காந்தியின் பதவி பறிக்கப்பட்டுள்ளதா அல்லது பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதா என்பது கட்சியினரை குழப்படைய செய்துள்ளது. இதனிடையே. மாணவரணியை சேர்ந்த பெண்கள் பலர் ராஜீவ் காந்தி மீது புகார் கொடுத்ததால். அவர் பதவியில் இருந்து மாற்றப்பட்டுள்ளதாகவும். தேர்தல் நேரம் என்பதால் புகாரின் உண்மை தன்மையை கண்டறிய ரகசிய விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

Related Post

ஆண்டுதோறும் ரூ.2000 எக்ஸ்ட்ரா.! பேரவையில் சூப்பர் அறிவிப்பு

Posted by - February 20, 2026 0
சட்டப்பேரவையில் இன்று, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலளிக்கும் விதமாக பேசிய அமைச்சர் கீதா ஜீவன். இனி ஆண்டுதோறும் கோடைகால சிறப்புத் தொகையாக மகளிருக்கு 2000 ரூபாய்…

விஜய்யின் தலைமைப் பண்பு.. திருமாவளவன் என்ன சொன்னார் தெரியுமா?

Posted by - October 30, 2025 0
கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய்யின் தலைமைப் பண்பு மிகப்பெரிய கேள்வியை ஏற்படுத்தியுள்ளது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். விசிக தலைவரும், மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் தனியார் செய்தி நாளிதழுக்கு…

நாளை முதல் SIR பணிகள் புறக்கணிப்பு: வருவாய்த்துறை சங்கம் அதிரடி அறிவிப்பு! காரணம் என்ன?

Posted by - November 17, 2025 0
அதீத பணி நெருக்கடி காரணமாக SIR பணிகளை புறக்கணிப்பதாக வருவாய்த் துறை சங்கங்கள் அறிவித்துள்ளன. SIR பணிகளை நாளை (நவம்பர் 18) முதல் புறக்கணிக்க உள்ளதாக வருவாய்த்துறை…

எதிர்கட்சிகளுக்கு அதிகமான கட்டுபாட்டுகளை விதிப்பதும் தான் திராவிட மாடலா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Posted by - September 13, 2025 0
ஆளும் கட்சி கூட்டணி கட்சிகளுக்கு சிறப்பு அனுமதியும், எதிர்கட்சிகளுக்கு அதிகமான கட்டுபாட்டுகளை விதிப்பதும் தான் திராவிட மாடல் அரசு என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்…

திமுகவின் மெகா பிளான்…

Posted by - December 17, 2025 0
கை கோர்க்கும் அண்ணாமலை- நயினார்.! திடீர் தேர்தல் நெருங்க நெருங்க தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில், ஆளுங்கட்சியான திமுகவை வீழ்த்த பாஜக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *