போலீஸ் போட்ட 33 நிபந்தனைகள்.. திராவிட கட்சிகளுக்கு சவால் விட்டு சரித்திரம் படைப்பாரா TVK விஜய்?

150 0

சினிமாவில் ரசிகர்களைக் கவர்ந்த விஜய், கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். இக்கட்சியின் கொடியும், கொடிப்பாடலும் சமீபத்தில் அவரே வெளியிட்டார். கொடி வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேடையில் பேசிய விஜய், ‘நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முதல் மாநாடு நடைபெறும்’ என்று தொண்டர்களிடமும் நிர்வாகிகளிடமும் கூறியிருந்தார்.

ஏற்கனவே மாநாடு செப்டம்பரில் நடக்கவிருந்த நிலையில் அனுமதி கிடைக்காத தால் நடக்கவில்லை. எனவே தேதி தள்ளிப்போனது. அதன்படி, வரும் அக்டோபர் 27 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடக்கும் என்று விஜய் அறிவித்திருந்தார். இந்த மாநாட்டில், தவெகவின் கொள்கைகள், அக்கட்சியின் திட்டங்கள், அதைச் செயல்படுத்தும் கொள்கை தலைவர்கள் உள்ளிட்டவர்களை அறிமுகம் செய்யும் நோக்கில், இந்த முதல் மாநாடு நடைபெறவுள்ளது என்று விஜய் குறிப்பிட்டிருந்தார்.

அதன்படி விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை கிராமத்தில் வரும் அக்டோபர் 27 ஆம் தேதி மாலை 4 மணிக்கு முதல் மாநாடு நடக்கவுள்ளது. இம்மா நாட்டை சிறப்புடன் கொண்டாட தொண்டர்களும், நிர்வாகிகளும், ரசிகர்களும் காத்திருக்கின்றனர். முதல் மாநாடு கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி நடக்கவிருந்த நிலையில் இதற்கு அக்கட்சிப் பொ.செ., புஸ்ஸி ஆனந்த் காவல்துறையிடம் அனுமதி கேட்டிருந்தார்., இதற்கு பல்வேறு நிபந்தனைகளை காவல்துறை ஏழுப்பியதுடன், அனுமதி வழங்கியது.

ஆனால் குறிப்பிட்ட தேதியில் மாநாடு நடக்கவில்லை. இந்த நிலையில், தவெக முதல் மாநாடு நடத்துவதற்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு, 33 நிபந்தனைகளில் இருந்து சிலவற்றிற்கு தளர்வுகள் அளிக்க வேண்டுமென கேட்டு மனு அளித்திருந்த நிலையில்,காவல் துணை கண்காணிப்பாளார் நந்தகுமார் 17 நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளார்.

இதனால் தான் விஜய் மற்றும் புஸ்ஸி ஆனந்த் தொண்டர்களை, மது அருந்திவிட்டு மாநாட்டிற்கு வரக் கூடாது, பெண்களுக்கும், பெண் காலவர்களுக்கு பாதுகாப்பு, அதிகாரிகளை மதிக்க வேண்டும், இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல அறிவுரைகளை உத்தரவாக பிறப்பித்து அவற்றை கடைப்பிடிக்க வேண்டும்” என்று அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் முதல் மாநாட்டு தேதி தள்ளிப்போன நிலையில் தற்போது அனுமதி கிடைத்துள்ளதால் தவெக தொண்டர்களும், நிர்வாகிகளும் மகிழ்ச்சி வெள்ளத்தில் உள்ளனர்.

இது தவெகவுக்கு மட்டுமல்ல விஜய்யும் முதல் அரசியல் மாநாடு என்பதால் அவர் மீது அனைத்துக் கட்சிகளின் கண்களும் வட்டமிட்டு வருகின்றன. ஏற்கனவே விஜயின் அரசியல் வருகை திராவிட கட்சிகளுக்கு சவாலாக இருக்கும் எனவும், திராவிட கட்சிகள் குறிப்பாக திமுக கலக்கத்தில் இருப்பதாக அரசியல் விமர்சகர்களும், ஊடகவியலாளர்களும் கூறிய நிலையில், இம்முதல் மாநாட்டை ஆடியோ நிகழ்ச்சி மாதிரி இல்லாமல் அரசியல் நிகழ்ச்சியாக விஜய் எப்படி நடத்த திட்டமிட்டிருக்கிறார்…அதில் தன்னை அரசியல்வாதி என்று நிரூபிப்பாரா??? மற்ற கட்சிகளிடம் இருந்து அது எவ்விதத்தில் வேறுபடும்? அம்மாநாட்டில் இடம்பெறும் நிகழ்ச்சிகள் அவரது பேச்சுகள் அது மக்களிடமும், நிர்வாகிகளிடமும் எம்மாதிரி தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Related Post

உஷார்… டெங்கு காய்ச்சலின் இந்த 4 அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீங்க..

Posted by - September 14, 2023 0
டெங்கு காய்ச்சல் குறித்த அறிகுறிகளை பற்றி தெரிந்து வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். ஏனெனில் இது வெறும் காய்ச்சலாக மட்டுமல்லாமல், இது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரே…

வெறுமனே இந்த “மஞ்சள்” கலர் போதும்.. ஆச்சரியங்களை அள்ளி தரும் அதிசய உணவுகள்.. ஆயுசும் கூடும்.. அருமை

Posted by - November 18, 2023 0
சென்னை: உணவுகளில் இருக்கும் நிறங்களும் ஆரோக்கியம் தரக்கூடியவை.. கலர் கலர் காய்கறிகளே, உடலுக்கு நன்மையை தரும் என்கிறார்கள்.. அந்தவகையில், மஞ்சள் கலரையும் தவிர்த்து விட முடியாது. நீலம்…

குல்லா அணிந்து.. லுங்கியுடன் என்ட்ரி கொடுத்த தவெக தலைவர் விஜய்!

Posted by - March 7, 2025 0
சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தலையில் குல்லாவுடன் லுங்கி அணிந்து வந்துள்ளார் விஜய். தவெக சார்பில்…

மெட்ரோ ரெயில் பணி: ஓ.எம்.ஆர். சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

Posted by - February 21, 2023 0
திருப்போரூர்: சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டப்பணி 118.9 கி.மீட்டர் தூரத்துக்கு 3 வழித்தடங்களில் ரூ.63 ஆயிரத்து 246 கோடி மதிப்பில் நடந்து வருகிறது. இதில்…

டெய்லி ‘இத்தனை’ மணி நேரத்திற்கு மேல உட்கார்ந்து இருக்கீங்களா? அப்ப உங்களுக்கு இந்த ஆபத்து காத்திருக்கிறதாம்!

Posted by - October 18, 2023 0
இன்றைய நாளில் பெரும்பலான மக்கள் உட்கார்ந்த வாழ்க்கை முறையை கொண்டிருக்கிறார்கள். நீண்ட நேரம் உட்கார்ந்து செய்யும் வேலை மற்றும் வாழ்க்கை முறையால் ஆபத்தான சுகாதார நிலைகளை நீங்கள்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *